For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு காலத்தில் வைரல் ஆன நபர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

|

இந்த இணைய உலகம் மிகவும் விசித்திரமானது,அதைவிட ரோலர் கோஸ்டர் என்று கூட சொல்லலாம். இன்றைக்கு உச்சானிக் கொம்பில் வைத்து புகழப்படுபவர் நாளைக்கே ஒரேயொரு மீம்ஸ் போட்டு காலியாக்கிவிடுவார்கள். ஒரு சின்ன புன்னகை, ஒரேயொரு வார்த்தையை கொண்டாடி வைரலாக்கி ஒவர் நைட்டில் புகழின் உச்சிக்கும் கொண்டு செல்வதும் இங்கே நடக்கும்.

Viral People On Internet What Doing Now

இந்த மீம்ஸ் யுகத்தில் எதுவுமே நிரந்தரமில்லை என்பதை இங்கே எல்லாரும் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். சரி, ஒரு காலத்தில் இணைய உலகின் பயங்கர வைரலான பிரபலங்கள் வைரல் ஸ்டாரஸ் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூல் அங்கிள் :

கூல் அங்கிள் :

போபால் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் துறை எடுக்கும் பேராசியர் தான் இந்த சஞ்சீவ ஸ்ரீவஸ்தவா. ஒரு நிகழ்ச்சியின் போது நடிகர் கோவிந்தாவைப் போல இவர் ஆடிய ஆட்டம் பயங்கர வைரல் ஆனது. கூல் அங்கிள் என்ற ஹேஸ்டேக்வுடன் இணையத்தில் டாப் ஹிட் அடித்தார். இந்த புகழுக்கு பிறகு அடுத்தடுத்து நிறைய விளம்பரப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம். அதைவிட டேன்ஸ் திவானே என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க அதுவும் பயங்கர வைரல்!

கண்ணழகி! :

கண்ணழகி! :

ஒரு கண் சிமிட்டலில் ஒட்டுமொத்த தேசத்தையே கலங்கடித்தவர் என்று சொல்லலாம். ஆம், ப்ரியா பிரகாஷ் வாரியார். ஒரு அதார் லவ் என்ற மலையாள திரைப்படத்தின் சிறிய டீசரில் இணையத்தில் வைரலானவர். வைரலானது மட்டுமின்றி பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். இந்தியாவில் அதிகளவு கூகுளில் தேடப்பட்ட நபர் என்ற சாதனையை கொண்டிருக்கிறார். இவரை இன்ஸ்டாவில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஆறு மில்லியனை தாண்டியிருக்கிறது.

அம்மணிக்கு இதன் பிறகு நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு வந்ததாம். அதோடு சில விளம்பரங்களிலும் நடித்துவருகிறார்.

பூஜா ஜெயின் :

பூஜா ஜெயின் :

கேட்டவுடன் உருகவைக்கிற குரலின் சொந்தக்காரர் பூஜா ஜெயின். அடிக்கடி எதாவது பாட்டுப்பாடி இணையத்தில் பகிர அத்தனையும் பயங்கர ஹிட் அடித்தது. அத்தனைக்கும் பூஜா முறையாக சங்கீதம் கற்றவர் இல்லை என்பதை இங்கே அவசியம் சொல்லியாக வேண்டும்.

இவரின் சாதனை எந்த அளவு ரீச் ஆகியிருக்கிறது என்றால் பிபிசி ஏசியா நெட்வொர்க்கிலிருந்து பூஜாவை நேர்காணல் எடுத்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அம்மணி ஹிந்தி பிக்பாஸ் சீசன் 11 க்கு அழைக்கப்பட்டார். அந்த சீசனிலும் கலக்கி விடுவார் அவர் தான் டைட்டில் வின்னர் என்று எதிர்ப்பார்த்தனர் இது போதாதென்று பிக்பாஸ் நிகழ்ச்சியை ஹிந்தியில் தொகுத்து வழங்கும் சல்மான்கானும் உங்களுடைய பாடலை நான் நிறைய ரசித்திருக்கிறேன் என்று சொல்ல அவ்வளவு தான் இந்த சீசனின் டாப் லிஸ்டில் பூஜா இருப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டே வாரங்களில் பூஜா வெளியேற்றப்பட்டார்!

இது தான் இணைய உலகத்தின் மகிமை என்பது....

அரன்யா ஜோஹர் :

அரன்யா ஜோஹர் :

முகநூலிலும் வாட்சப்பிலும் அரன்யா பேசிய வீடியோ அதிகளவு பகிரப்பட்டது. இவர் எழுதிய 'A Brown Girl's Guide to Gender' என்ற கவிதை இவரை ஒரேநாளில் பயங்கர வைரலாக்கியது. தொடர்ந்து இவர் கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார் குறிப்பாக சமூகத்தில் நடக்கிற அவலங்களைப் பற்றியும் பெண்களின் முன்னேற்றத்தைப் பற்றியும் எழுதுவதாக சொல்லியிருக்கிறார்.

அர்ஷத் கான் :

அர்ஷத் கான் :

சமூக ஊடகம் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவர் வைரலாகி அதன் மூலம் பிரபலமடைந்து தன் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை வெற்றிகரமாக துவக்கியிருக்கிறார். அர்சத் கான் என்றும் சாய் வாலா என்றும் அதிகமாக பகிரப்பட்டது இவருடைய படம். பார்க்க ஹிந்தி பட ஹீரோ போல இருக்கும் இவர் பாகிஸ்தானில் இருக்கும் ஒரு டீக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

இவர் இணையத்தில் பயங்கர வைரலானதும். பல விளம்பர நிறுவனங்கள் இவரை தொடர்பு கொண்டு வாய்ப்புகளை அளித்திருக்கிறது. விளம்பரங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி மாடலிங் செய்யவும் பல வாய்ப்புகள் வந்திருக்கிறது. இவை எல்லாவற்றையும் விட இப்போது அர்ஷத் கான் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறராராம்.

ஓம் பிரகாஷ் மிஸ்ரா :

ஓம் பிரகாஷ் மிஸ்ரா :

செலிபிரிட்டிகளை விட இவருடைய கதை பயங்கர கான்ட்ரவர்சியாக இருக்கிறது. ஆண்ட்டி கி காண்ட்டி என்ற பாடலை இவரே எழுதி பாடி இணையத்தில் பகிர அது பயங்கர ஹிட் அடித்தது. அதைவிட அந்த பாடலை இவர் காட்சிப்படுத்துகிற விதம் எல்லாம் அட்டகாசம்....

தன் க்ரியேட்டிவிட்டிக்கு தீனி கொடுக்கும் விதமாக தனியாக யூடியூப் சேனல் ஆரம்பித்திருக்கும் இவர் தொடர்ந்து பாடல் எழுதி.... பாடி வெளியிடுவேன் என்கிறார்.

 சாஹித் அல்வி :

சாஹித் அல்வி :

சார் இந்தியா மட்டுமல்ல பாகிஸ்தானிலும் பயங்கர ஃபேமஸ். ஊழல் குறித்து பயங்கர ஆக்ரோசமாக பேசுவதாய் நினைத்து கூச்சலிட்டபடி ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அது இணையத்தில் பயங்கர ஹிட் அடித்தது. வீடியோ முழுக்க கெட்ட வார்த்தைகளை பேசியிருந்தார் சாஹித் . தற்போது தனி யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்திருக்கும் இவர் தொடர்ந்து வீடியோக்களை பகிர்ந்து முழு நேரமாக சமூகத்திற்கு சேவை செய்யப் போகிறாராம்....

 செல்ஃபி புள்ள :

செல்ஃபி புள்ள :

நீங்க நின்னா மட்டும் போதும்..... செல்ஃபி எடுக்கும் போது முன்னால நின்னுட்டு போஸ் கொடுத்த பொண்ணு அம்புட்டு வைரல் ஆச்சுன்னு சொன்னா நம்மளால நம்ப முடியுதா? ஆனா அது தான் உண்மை. பூனேவில் இருக்கிற சிம்பயாசிஸ் கல்லூரியில் நடிகர் ஷாருக்கான் சென்றிருந்தார். அங்கு கல்லூரி மாணவர்களின் முன்னால் நின்று செல்ஃபி எடுத்தார். அந்த செல்ஃபியில் முதல் வரிசையில் நின்றிருந்த பெண் தான் சைமா.

இணையத்தில் பயங்கர வைரலானதை தொடர்ந்து திரைப்படங்கள், விளம்பரங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்ததாம். ஆனால் அவற்றை மறுத்து விட்டவர் தனக்கு கிடைத்த இந்த புகழின் வெளிச்சம் மூலமாக காஷ்மீரில் நடக்கிற பிரச்சனைகளை உலகறியச் செய்வேன் என்கிறார்.

சைமாவின் பூர்வீகம் காஷ்மீர்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Viral People On Internet What Doing Now

Viral People On Internet What Doing Now
Story first published: Tuesday, June 26, 2018, 9:30 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more