For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுக்கெலாமா தடை? விசித்திரமான தடை சட்டங்கள்!!

சட்டப்படி குற்றம் என்று சொல்லப்பட்ட விஷயங்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்.

|

ஒவ்வொருவரும் தங்கள் வாழும் பகுதிக்கு ஏற்ப, அவர்களது நம்பிக்கைக்கு ஏற்ப, ஆட்சியாளர்களுக்கு ஏற்ப அவர்களது சட்டதிட்டங்களை வரையறுத்துக் கொள்வார்கள். ஒரு ஊரில் சாதரணமாக பார்க்கப்படுகிற ஒரு விஷயம் இன்னொரு ஊரில் பெருங்குற்றமாக பார்க்கப்பம்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் தற்கொலை என்பது தண்டனைக்குரிய குற்றம் ஆனால் அமெரிக்காவில் உள்ள சில இடங்களில் அது சட்டப்படி செல்லும் இப்படி எண்ணற்ற விஷயங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இப்படி பல விசித்திரமான விஷயங்களை சட்டத்திற்கு புறம்பானது என்று சொல்லி ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இதுக்கு ஏன் தடை என்று பல விஷயங்கள் நம்மை யோசிக்க வைக்கிறது. இதுக்கெல்லாமா தடை விதிப்பார்கள் என்று பல விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை :

முட்டை :

அமெரிக்காவிலிருந்து வாங்கப்படுகிற முட்டை பிரிட்டன் சூப்பர் மார்கெட்களில் விற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அவை கழுவப்பட்டிருக்குமாம்.

அதே போல பிரிட்டனிலிருந்து வாங்கப்படுகிற அதாவது இறக்குமதி செய்யப்படுகிற முட்டைகள் அமெரிக்க சூப்பர் மார்க்கெட்களில் விற்க தடை காரணம் அவை கழுவி சுத்தமாக்கப்பட்டிருக்காது.

மரணம் :

மரணம் :

மரணம் இயற்கையானது அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று இங்கு நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நார்வேயில் இருக்கிற லாங்யேர்பியன் என்னும் ஊரில் மரணிப்பது என்பது சட்டத்திற்கு புறம்பான விஷயமாக சொல்லப்பட்டது.

ஏனென்றால் அந்த ஊரில் ஒரேயொரு இடுகாடு தான் இருந்திருக்கிறது அங்கும் உறைபனி காலத்தில் பிணங்களை புதைக்க முடியாது அப்படியே புதைத்தாலும் மாதக்கணக்கில் அப்படியே இருக்கும் என்பதால் இந்த விதியாம்!

தேசிய கொடி :

தேசிய கொடி :

நம்முடைய தேசத்திற்கு, தேசிய கொடிக்கு அதற்குரிய உரிய மரியாதை செலுத்திவிட வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதுண்டு ஆனால் டென்மார்க்கில் பிற நாட்டடு தேசிய கொடிகளை எரிப்பது சட்டவிரோதமானது. ஆனால் நீங்கள் டென்மார்க் கொடியை எரித்துக் கொள்ளலாம்.

அதாவது உன் நாட்டு கொடியை எரித்துக் கொள் பிற நாட்டு கொடியை அவமானப்படுத்தகூடாது.

Image Courtesy

செல்லப் பிராணி :

செல்லப் பிராணி :

செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமாகவே பல இடங்களில் பார்த்திருப்போம். எதை வளர்க்கவேண்டும், அதுவும் எத்தனை பிராணிகள் வளர்க்க வேண்டும் என்று யாராவது நமக்கு பரிந்துரைத்தாலே ஏற இறங்க பார்த்து விட்டு நகர்வோம்.

சுவிட்சர்லாந்தில் அதெல்லாம் முடியாது ஏனென்றால் அங்கே செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் கினியா வகைப் பன்றி வாங்குவீர்களானால் இரண்டு பன்றிகளை வாங்க வேண்டும்.

தனியாக ஒரேயொரு பன்றியை வளர்ப்பது என்பது சட்டப்படி குற்றம்.

Image Courtesy

ஃபிரிட்ஜ் :

ஃபிரிட்ஜ் :

ஃபிரிட்ஜில் உணவுப் பொருட்களை வைக்க பயன்படுத்தினால் பெனிசில்வேனியாவில் தூங்குவதற்கு பயன்படுத்துகிறார்கள். அதிலும் ஃபிரிட்ஜின் மேலே தூங்குவது சட்டவிரோதமானது வேண்டுமானால் ஃபிரிட்ஜ் கதவை திறந்து வைத்துக் கொண்டு நன்றாக தூங்குங்கள் என்கிறார்கள்.

Image Courtesy

16 பேர் :

16 பேர் :

வீடு என்று இருந்தால் அதில் எத்தனை நபர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம் அதில் இவ்வளவு பேர் தான் இருக்க வேண்டும் என்று எந்த வரைமுறையும் சொல்லி நாம் கேள்விப்பட்டதில்லை.

ஆனால் பெனிசல்வேனியாவில் ஒரு வீட்டில் பதினாறு பெண்கள் வரை மட்டுமே இருக்க வேண்டும் அதையும் மீறிச் சென்றால் அந்த இடம் பாலியல் தொழில் நடத்தப்பட்டுவதாக முடிவு செய்யப்பட்டு அங்கு வசிக்கும் பெண்களுக்கு தண்டனை வழங்கப்படும்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சை கிளப்பியதை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்த விஷயம் கைவிடப்பட்டு வருகிறது.

Image Courtesy

குளியல் :

குளியல் :

இதுவும் பென்சல்வேனியா தான். இன்றைக்கு பலரும் பாத்ரூம் சிங்கராக இருந்து பிரபலமானவர்கள் ஏரளமானோர் உண்டு. ஆனால் பென்சல்வேனியாவில் அதெல்லாம் நடக்காது. ஏனென்றால் பாத்ரூம் டப்பில் குளிப்பவர்கள் பாட்டு பாடக்கூடாது.

குளிக்கும் போது பாத் டப்பில் தண்ணீர் நிரம்பியிருக்கும் எதிர்பாராத விதமாக விழுந்து விட்டால் அது விபரீதத்தை ஏற்படுத்திவிடும். குரல் கொடுத்து உதவிக்கு ஆட்களை அழைக்கலாம் என்று நினைக்கும் போது எதாவ்து பாட்டு பாடிக் கொண்டிருப்பார் என்று நினைத்து அசட்டையாக விட்டுவிட்டால்? அதனால் பாத் டப்பில் குளிக்கும் போது பாட்டுப்பாடுவது என்பது சட்டப்படி குற்றம் என்று சொல்லிவிட்டார்கள்.

இரவு விடுதி :

இரவு விடுதி :

இரவு நேர விடுதி என்று சொன்னாலே ஆட்டம் பாட்டமுமாய் கும்மாளம் அடிக்கலாம் என்று சொல்லி தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஜப்பான் இரவு நேர விடுதியில் நடனம் ஆடுவது என்பது சட்டப்படி குற்றம்.

போதை மயக்கத்தில் ஆடுகிறேன் என்று சொல்லி எங்காவது விழுந்து காயப்பட்டுக் கொண்டால்?

மது :

மது :

பெரும்பாலான லண்டன் ஹோட்டல்களில் மது பரிமாற லைசன்ஸ் வாங்கப்பட்டிருக்கும். அப்படி மது விற்க லைசன்ஸ் இருக்கிற ஹோட்டல்களில் வாடிக்கையாளர் கேட்டார் என்பதற்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ குடிதண்ணீரை கொடுத்தால் அது சட்டப்படி குற்றம்.

குடிக்க தண்ணீர் கொடுப்பது கூட குற்றம் என்று சொன்னால் எங்கே செல்வது???

தனி அறை :

தனி அறை :

நம்மூர்களில் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளுக்கு என்று ஒரு அறையை ஒதுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இன்றும் பெரும்பாலான வீடுகளில் இந்த நடைமுறை இன்னும் வரவில்லை சில மேட்டுக்குடி மக்கள் வீடுகளில் தான் ஸ்டடி ரூம் என்று ஒன்று இருக்கிறது. ஆனால் ஒஹியோவின் சட்டம் என்ன சொல்கிறது தெரியுமா?

உங்களுக்கு ஆண் பெண் என இருபாலர் குழந்தை இருந்தால் அவர்களுக்கு ஒரே அறை கொடுக்கக்கூடாது தனித்தனி அறை தான் கொடுக்க வேண்டும் என்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Unusual Laws Around the World

Unusual Laws Around the World
Desktop Bottom Promotion