For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடி நன்மை தரும் ஆடிப்பெருக்கு பற்றி தெரிந்த தெரியாத சிறப்புகள்

ஆடிப்பெருக்கு தமிழர் கலாச்சாரத்தில் முக்கிய இடம் பெற்றுள்ள பண்டிகையாகும். ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆற்றங்கரையில் கடவுளை வழிபடும் இந்த விழாவின் சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.

|

தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆடிப்பெருக்கு. நம் முன்னோர்கள் காலத்தில் மாபெரும் திருவிழாவாக கொண்டாப்பட்டு வந்த ஆடிப்பெருக்கு இப்பொழுது வெறும் சம்பிரதாயமாக மாறிக்கொண்டு வருகிறது. ஆடிப்பெருக்கின் மகத்துவமும், முக்கியத்துவமும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்பது மறுக்கமுடியாத கசப்பான உண்மையாகும்.

Aadiperukku

" ஆடி பட்டம் தேடி விதை " என்று ஒரு பழமொழி உள்ளது. ஆடி மாதத்தில் அனைத்து ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடும். அப்போது விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய நீர் தாராளமாக கிடைக்கும். எனவே ஆடி மாதத்தில் அவர்கள் பயிரிட்டால் தை மாதம் அறுவடை செய்யலாம். அதைத்தான் நம் முன்னோர்கள் பழமொழியில் கூறியுள்ளார்கள். பல ஆண்டுகளுக்கு பிறகு நமது ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ஆடி பெருக்கின் முக்கியத்துவத்தை பற்றி இங்கு பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு

ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும்போது மக்கள் குடும்பத்துடன் ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு கடவுளை வணங்குவது ஆடிப்பெருக்காக நம் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு தமிழர்களின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று ஆனால் தற்போது இது ஒரு விடுமுறை நாளாக மட்டுமே கருதப்படுகிறது. மற்றொரு புறம் இது மகாபாரத போரில் இறந்த வீரர்களை நினைவு கூறும் நாளாகவும் நம்பப்படுகிறது.

தமிழர்களும் ஆடிப்பெருக்கும்

தமிழர்களும் ஆடிப்பெருக்கும்

ஆடிப்பெருக்கு பண்டையகாலம் முதலே தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கிறது. குறிப்பாக பண்டையத் தமிழ் நூல்களில் மிகமுக்கிய பிடித்திருக்கும் நூல் பொன்னியின் செல்வன். அந்த நூலில் வரும் முக்கிய கதாபத்திரமான வல்லவராயன் வந்தியத்தேவனும், மற்ற முக்கிய கதாபத்திரங்களான பெரிய பழுவேட்டரையர், நந்தினி தேவி போன்றோரின் அறிமுகங்கள் ஆடிப்பெருக்கின் பின்புலத்திலேயே இருக்கும். அந்த இடத்தில் கல்கி அவர்கள் ஆடிப்பெருக்கை வர்ணித்திருப்பதை ரசிக்கத்தவர்களோ, அதை எண்ணி வியக்கத்தவர்களோ மிகக்குறைவு. அவ்வாறு நம் வாழ்வியலுடன் கலந்த முக்கிய பண்டிகை ஆடிப்பெருக்காகும்.

காரணம்

காரணம்

ஆடிப்பெருக்கு இயற்கை அன்னை நமக்கு வழங்கிய கொடைக்காக நன்றி கூறும் விதமாக கொண்டாடப்படுவது. ஆற்றங்கரையில் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தண்ணீரோடு கரைந்து விடவும், எதிர்கால வாழ்க்கை சுபிட்சமாகவும் இருக்க வேண்டுமென அனைத்து தெய்வங்களையும் பிரார்த்திக்கும் விதமாக நடைமுறையில் இருக்கும் ஆடிப்பெருக்கு மக்களுக்கு பல நன்மைகளை வழங்கக்கூடிய சிறப்பான நாளாகும்.

ஆடிப்பெருக்கும் திருமண வாழ்வும்

ஆடிப்பெருக்கும் திருமண வாழ்வும்

தமிழ் சமூகத்தில் பெரும்பாலும் புதிதாய் திருமணமான தம்பதிகளை பிரித்து வைத்திருப்பார்கள். ஆனால் அதே சமயம் ஆடிப்பெருக்கு அன்று தாலி பிரித்து கட்டுதல் என்ற ஒரு சடங்கும் தமிழ் கலாச்சாரத்தில் பின்பற்ற பட்டு வருகிறது. புதிதாய் திருமணமான தம்பதிகள் புது ஆடை உடுத்தி தாலியில் இருக்கும் கயிறை மாற்றி மீண்டும் தாலி கட்டுவார்கள். இதன்மூலம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் பிரியாமல் மகிழ்ச்சியாய் வாழலாம் என்று நம்பப்படுகிறது.

ஆடிப்பெருக்கும் சங்கரநாராயணனும்

ஆடிப்பெருக்கும் சங்கரநாராயணனும்

இந்து புராணங்களின்படி பார்வதி தேவி சிவபெருமானிடம் திருமாலுடன்இணைந்து தன்னை ஆசீர்வதிக்கும்படி வேண்டினார். அவரின் வேண்டுகோளை ஏற்று சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கர நாராயணனாக பார்வதி தேவியை ஆடிப்பெருக்கன்று ஆசீர்வதித்தனர். எனவே ஆடிப்பெருக்கன்று இறைவனை வழிபடுவது விஷ்ணு மற்றும் சிவனின் பூரண அருளை நமக்கு பெற்றுத்தரும் என நம்பப்படுகிறது.

ஆடிப்பெருக்கும் செல்வமும்

ஆடிப்பெருக்கும் செல்வமும்

பெருக்கு என்பதன் பொருள் உயர்த்துவது ஆகும். ஆடிப்பெருக்கன்று லட்சுமி தேவி பூரண மகிழ்ச்சியுடன் காட்சியளிப்பார். எனவே அந்த சமயத்தில் லட்சுமி தேவியை வணங்கும்போது கேட்கும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக ஆடிப்பெருக்கன்று லட்சுமி தேவியை வழிபட்டால் செல்வம், குழந்தை பாக்கியம், தைரியம் என அனைத்தும் கிடைக்கும். அதேபோல ஆடிப்பெருக்கு அன்று குபேரனை வழிபடுவது எவ்வளவு பெரிய நஷ்டத்திலிருந்தும் மீண்டு வர வழிவகுக்கும்.

வழிபடும் முறை

வழிபடும் முறை

இப்பொழுதெல்லாம் ஆடிப்பெருக்கு ஒரு விடுமுறை தினம் என்று மட்டும் மாறிவிட்டதால் அந்த சிறப்புநாளில் கடவுளை வழிபடுவது மிகவும் குறைந்துவிட்டது. அவ்வாறு இருக்காமல் காலையிலேயே ஆற்றங்கரை சென்று குளித்து புத்தாடை உடுத்தி மணலில் பிள்ளையார் செய்து கற்பூரம் காட்டி அந்த கற்பூரத்தை ஒரு வெற்றிலையில் வைத்து தண்ணீருடன் விட்டுவிட வேண்டும். இவ்வாறு செய்வது உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் என்பது நம்பிக்கை. கிராமமாய் இருந்தால் அங்கே "முளைப்பாரி" ஆற்றில் விடுவது மிகவும் பிரசித்தமாகும்.

பலன்கள்

பலன்கள்

ஆடிப்பெருக்கன்று இயற்கையையும், கடவுளையும் வழிபடுவது ஆற்றில் எவ்வாறு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறதோ அதேபோல உங்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும், செல்வத்தையும் அதிகரிக்க செய்யும். அதுமட்டுமின்றி ஆடிப்பெருக்கு என்பது வீட்டிற்குள் அடைந்து கிடக்க கிடைக்கும் விடுமுறை அல்ல, உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியை பகிரகிடைத்த நாளாகும். எனவே அதனை உபயோகமாக கொண்டாடுங்கள். மறைந்து வரும் ஆடிப்பெருக்கு கொண்டாட்டங்களை அழிந்துபோக விட்டுவிடாதீர்கள். ஆடிப்பெருக்கை கொண்டாடிய கடைசி தலைமுறை நாம்தான் என்று ஆகிவிடக்கூடாது. நமது அடுத்த தலைமுறைக்கும் ஆடிப்பெருக்கின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Importance of Aadiperukku

Aadiperukku is one of the famous festival of Tamilnadu. Aadi means the Tamil month and Perukku means raising. Offering rituals on this day bestows wealth and prosperity and multiplies the benefits.
Desktop Bottom Promotion