For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  சர்.சிவி ராமனை நோபல் பரிசு வாங்கவிடாமல் தடுக்க செய்த முயற்சியை பற்றி தெரியுமா?

  |

  இந்தியர்களின் பெருமையையும், திறமையையும் உலகமே அறிந்தாலும் அதில் அங்கீகரிக்கபட்டவர்கள் மிகவும் சிலரே. அதில் மிக முக்கியமானவர் அறிவியலுக்காக இந்தியாவில் இருந்து முதலாவதாக நோபல் பரிசு வாங்கிய சர். சந்திரசேகர வெங்கட ராமன் ஆவார். அனைவருக்கும் புரியும்படி கூற வேண்டுமென்றால் சர். சி.வி. ராமன். இவரை பற்றி கேள்விப்படாதவர்கள் மிகவும் குறைவு எனவே கூறலாம்.

  CV Raman

  ராமன் விளைவு என்ற கேள்வியை பள்ளி படிப்பில் படிக்காதவர்கள் யாரும் இருக்க இயலாது. அந்த அளவிற்கு இந்திய அறிவியல் துறையில் அசைக்க முடியாத இடத்தை பெற்றுள்ள சி.வி. ராமன் அவர்களை இந்தியாவிற்கு கொடுத்ததற்காக நாம் நிச்சயம் பெருமை படவேண்டும். இங்கே அவரை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிராத சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  பிறப்பு

  பிறப்பு

  சர். சந்திரசேகர வெங்கடராமன் 1888 ஆம் ஆண்டு திருச்சியில் சந்திரசேகர ஐயர் என்னும் கணித மற்றும் இயற்பியல் ஆசிரியருக்கும் பார்வதி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். இயற்பியல் ஆசிரியரின் மகனாக பிறந்ததால் என்னவோ அவர் சிறுவயது முதலே அறிவியலில் அதிக ஆர்வம் செலுத்துபவராக இருந்தார். அவர் உடன் பிறந்தவர்கள் மொத்தம் ஏழு பேர். இவர்தான் குடும்பத்தின் இரண்டாவது மகன் ஆவார்.

  படிப்பு

  படிப்பு

  சிறுவயது முதலே படிப்பில் அதிபுத்திசாலியாக இருந்தார் ராமன். அவரின் திறமைக்கு ஆசிரியர்களாலேயே ஈடுகொடுக்க இயலாமல் போனது. மிகவிரைவில் பள்ளி படிப்பை முடித்த ராமன் தன 14 ஆம் வயதில் தன்னுடைய இளங்கலை பட்ட படிப்பில் சேர்ந்தார். தனது பி.ஏ பட்டத்தை சென்னை ப்ரெசிடெண்சி கல்லூரியில்தான் முடித்தார் அதுவும் பல்கலைக்கழக முதல் மாணவராக தங்கப்பதக்கத்துடன். பிறகு தனது முதுகலை பட்டத்தை சென்னை பல்கலைகழகத்தில் முடித்தார்.

  வேலை

  வேலை

  முதுகலை பட்டம் பெற்றவுடன் அவரின் திறமைக்காகவே அவரை கல்கத்தா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். ஆனால் அறிவியல் மீது கொண்ட ஆர்வத்தால் அந்த பணியை ராஜினாமா செய்துவிட்டு தன் ஆராய்ச்சியை தொடர்ந்தார் ராமன். அதேநேரம் அவர் இந்திய அறிவியல் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்தார். இதுதான் தன் வாழ்வின் பொற்காலம் என பின்னாளில் கூறினார் ராமன்.

  ஒளி அறிவியலில் ஆர்வம்

  ஒளி அறிவியலில் ஆர்வம்

  921 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் கடற்பயணம் மேற்கொள்ளும் போது மத்திய தரைக்கடலில் பனிப்பாறையின் நிறம் நீல நிறத்தில் இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்தார். இது அவரின் ஆர்வத்தை வெகுவாக தூண்டியது. அந்த ஒளிச்சிதறலுக்கான காரணத்தை அதன்பின் ஒளியை பற்றி ஆராய்வதில் கவனம் செலுத்த தொடங்கினார்.

  ராமன் விளைவு

  ராமன் விளைவு

  1928 ஆம் ஆண்டு ராமன் விளைவு எனப்படும் ஒளிசிதறலை தனது சக பணியாளர் கே.ஸ். க்ரிஷ்ணருடன் சேர்ந்து வெற்றிகரமாக சோதனை செய்தார் ராமன். இந்த கண்டுபிடிப்பிற்காகத்தான 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார் சி.வி. ராமன். அறிவியலுக்கான நோபல் பரிசை பெற்ற ஆசியாவை சேர்ந்த முதல் நபரும், வெள்ளையர் அல்லாத முதல் நபரும் ராமன்தான். இவரின் சகா பணியாளரான கிருஷ்ணன் நோபல் பரிசில் பங்கெடுத்து கொள்ளவில்லை என கூறிவிட்டார். ஆனால் அவரின் பங்களிப்பையும் நோபல் பரிசு பெற்றபின் தனது உரையில் தெளிவாக கூறினார் ராமன்.

  நோபல் சர்ச்சை

  நோபல் சர்ச்சை

  சி.வி. ராமன் ஒளிச்சிதறலை கண்டுபிடித்த அதே ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த மண்டல்ஸ்டேம் மற்றும் லேண்ட்ஸ்பெர்க் என்ற இரு ஆராய்ச்சியாளர்களும் ஒளிச்சிதறலை கண்டறிந்தனர். இதனால் மொபைல் பரிசு வழங்கும் அமைப்பிற்குள் சலசலப்பு கிளம்பியது. இருப்பினும் மண்டல்ஸ்டேம் மற்றும் லேண்ட்ஸ்பெர்க் தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை நிரூபிக்க தவறிவிட்டது என நோபல் பரிசுக்கான இயற்பியல் குழு வாதிட்டது. அவர்கள் சரியான ஆராய்ச்சி என மேற்கோள் காட்டியது ராமனின் கட்டுரையை தான்.

  இயற்பியல் குழுவின் விளக்கம்

  இயற்பியல் குழுவின் விளக்கம்

  ரஷ்ய ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு சிறப்பாக இருப்பினும் அவர்களுடையது ராமனின் ஒளிச்சிதறலுக்கு ஈடுகொடு இயலவில்லை. ஏனெனில் ராமன் கண்டறிந்த ஸ்பெர்க்ட்ரோஸ்காபி உள்ள வரும் ஒளி எவ்வாறு சிதறுகிறது என்பதற்கும், அதற்கான காரணமும் துல்லியமாக விளக்கப்பட்டிருந்தது. இது இயற்பியல் உலகுக்கே ஒரு முன்னோடியாக திகழும் என நோபல் பரிசுக்கான இயற்பியல் குழு கூறியது. இந்த காரணங்களால் தான் ராமனின் பெயர் அந்த குழுவால் ஸ்வீடிஸ் அறிவியல் கழகத்திற்கு பரிந்துரைக்க பட்டது.

  நோபல் பரிசுக்கு பின்

  நோபல் பரிசுக்கு பின்

  நோபல் பரிசு பெற்ற பின்னரும் தன் ஆராய்ச்சியை தொடர்ந்த ராமன் 1932 ஆம் ஆண்டு பாகவந்தம் என்பவருடன் இணைந்து குவாண்டம் ஃபோட்டான் ஸ்பின்னை கண்டறிந்தார். இது ஒளியின் தன்மையை மேலும் உறுதிசெய்தது.

  சொந்த நிறுவனம்

  சொந்த நிறுவனம்

  1944 ஆம் ஆண்டு இந்திய அறிவியல் கழகத்தில் இருந்து ஓய்வு பெற்ற ராமன் பின் ராமன் ஆராய்ச்சி நிறுவனம் என்னும் நிறுவனத்தை கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் தொடங்கினார். அவர் மேல் உள்ள மரியாதையில் சி.வி. ராமன் நகர் என்று ஒரு இடத்திற்கு அம்மாநிலம் பெயர் சூட்டியுள்ளது. இன்றும் அந்த பெயர் மாறாமல்தான் உள்ளது. அதுமட்டுமின்றி திருவாங்கூர் கெமிக்கல் அண்ட் மேனேபரேஷன் கோ ( இப்பொழுது TMC ) என்ற கம்பெனியையும் தொடங்கினார்.

  விருதுகள்

  விருதுகள்

  உலகின் மிகஉயரிய விருதான நோபல் பரிசு பெற்ற இவரை இந்திய அரசாங்கம் மட்டும் கௌரவிக்காமல் விடுமா?. இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி அவரை பெருமைப்படுத்தியது. பாரத ரத்னா வாங்கிய சில தமிழர்களில் சி.வி. ராமனும் ஒருவர். அதுமட்டுமின்றி அவர் பெயரிட்ட அஞ்சல் தலையும் வெளியிட்டுள்ளது.

  மறைவு

  மறைவு

  1970 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தன் ஆராய்ச்சி கூடத்தில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ராமன். கிட்டத்தட்ட ஒரு மாத போராட்டத்திற்கு பின் 1970 நவம்பர் மாதம் 21 ஆம் நாள் சர்.சி.வி. ராமன் அவர்களின் உயிர் பிரிந்தது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: science
  English summary

  Interesting facts about Sir C.V. Raman

  C. V. Raman discovered that when light interacts with a molecule the light can donate a small amount of energy to the molecule. As a result of this, the light changes its color and the molecule vibrates. For this he won the Nobel Prize in 1930.Focus keyword: Scinentist, Unknown facts about CV Raman
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more