ஆப்ரிக்காவில் இதெல்லாம் சர்வ சாதரணம் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு ஊரைப்பற்றிய கற்பனை நம்மிடையே அதிகமாகவே இருக்கிறது. அதுவும் சினிமாவில் மாஸ் காட்டுகிறேன் என்று இவர்களாகவே பயங்கரமாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். நாமும் அந்த ஊர் என்றாலே அப்படித்தான் போல என்று நினைத்துக் கொண்டிருப்போம்.

இப்போது ஊரைத் தாண்டி சில நாடுகளுக்கும் இதே நிலைமை தான், சினிமாவில் பார்ப்பது எல்லாம் உண்மை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி நமக்கு அடிக்கடி காண்பிக்கப்பட்ட பழக்கப்பட்ட ஓர் நாடு ஆப்ரிகா. ஆப்ரிகா என்றதும் எங்கும் மண் தரை, வறுமையின் தாக்கங்களை சுமந்து கொண்டிருக்கும் மக்கள் காய்ந்து போன வயல்வெளிகள்,பசி,பட்டினி பஞ்சம் போன்றவற்றையே காண்பித்திருப்பார்கள். நாமும் ஆப்ரிகா என்றால் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருப்போம். உண்மையில் ஆப்ரிக்கா எப்படியிருக்கிறது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஆப்ரிகா என்று காட்டும் போதெல்லாம் பெரும் பாலைவனத்தை காட்டுவார்கள். நாமும், ஆப்ரிகாவில் மிகப்பெரிய பாலைவனம் இருக்கிறது என்று நினைத்திருப்போம். ஆனால் அது உண்மையல்ல . ஆப்ரிகாவில் பல விதமான நிலங்கள் இருக்கிறது. மவுண்ட் கிளிமாஞ்சாரோ ஆப்ரிக்காவில் தான் இருக்கிறது.

இங்கு மிகவும் குளிர் வீசக்க்கூடிய இடமாக இருக்கிறது. இதே போல கடற்கரை மற்றும் தேசிய காடுகளும் இருக்கின்றன.

Image Courtesy

#2

#2

ஆப்ரிக்காவில் இருக்கும் மக்கள் என்று காண்பிக்கப்படுபவர்கள் எல்லாம் அடர் கருப்பு நிறமாகவே இருப்பார்கள். ஆனால் ஆப்ரிக்காவில் வெள்ளை நிறமுடைய மக்களும் வசிக்கத்தான் செய்கிறார்கள்.

Image Courtesy

#3

#3

ஆப்ரிகா மிகவும் வறுமை நிறைந்த நாடு அவர்களுக்கு என்று பார்ம்பரியமிக்க தொழிலோ அல்லது வியாபாரமோ இருக்காது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த செய்தி, ஆப்ரிகாவில் நிறைய தங்க மற்றும் வைர சுரங்கங்கள் இருக்கின்றன. அதன் மூலமாக பெரும் வருமானம் கிடைக்கிறது.

Image Courtesy

#4

#4

இவர்களுக்கு என்று எந்த ஒரு கலாச்சார நிகழ்வுகள் சொல்லிக் கொள்ளும்படியாக இருக்காது என்று நினைக்கப்படுகிறது. ஆனால் நாம், எதிர்ப்பார்பதையும் தாண்டி ஏகப்பட்ட கலாச்சாரங்களை இவர்கள் பின்பற்றுகிறார்கள்.

மனித உருவத்தை சிலையில் வடிக்கலாமென்று கண்டுபிடித்து அதனை சாத்தியப்படுத்தியது ஆப்ரிக்க மக்கள் தான்.

Image Courtesy

#5

#5

ஆப்ரிக்காவில் இருக்கும் மக்கள் எல்லாரும் வறுமை கோட்டிற்கு கீழே தான் இருப்பார்கள்,ஒரு வேலை உணவென்பதே அவர்களுக்கு பெருங்கனவாக இருக்கும் என்று நினைத்திருப்போம். ஆனால் உண்மை அதுவல்ல, ஆப்ரிக்கா மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருக்கிறது. ஆப்ரிக்காவின் ஒரு சில பகுதிகள் அப்படி இருந்தாலும் பெரும்பாலான பகுதிகளில் வானுயர்ந்த கட்டிடங்கள்,ஹோட்டல்கள் என மக்கள் மிகவும் வசதியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Image Courtesy

#6

#6

ஆப்ரிக்காவில் அரசாங்கத்தை எதிர்க்கும் ஏராளமான விஷமிகள் இருப்பார்கள், எப்போதும் துப்பாக்கி சத்தமும் குண்டு சத்தமும் கேட்டுக் கொண்டேயிருக்கும் அதெல்லாம் அங்கே சர்வ சாதரணமாக நிகழக்கூடியது என்று நினைத்திருப்போம்.

ஒன்றிரண்டு பேர் அரசாங்கத்திற்கு எதிராக கிளம்பியிருந்தாலும் அவை மிகப்பெரிய தாக்கத்தை எதுவும் ஏற்படுத்தவில்லை.

Image Courtesy

#7

#7

பக்கத்து நாடுகளுக்கிடையே எப்போதும் எல்லைப்பிரச்சனை நடக்கும் என்று சொல்லப்படுகிறது இதுவும் தவறு, சர்வதேச எல்லை வகுத்து இப்போது மிகவும் துரிதமாக கண்காணிக்கப்படுகிறது.

இந்த எல்லைப்பிரச்சனை துவக்க காலத்தில் மட்டுமே இருந்திருக்கிறது.

Image Courtesy

#8

#8

மக்கள் அங்கே உணவின்றி கஷ்டப்படுகிறார்கள். பஞ்சத்தால் குழந்தைகளுக்கு போதிய உணவு கிடைக்காமல் உயிர் வாழவே சிரமப்படுகிறார்கள் என்று தொடர்ந்து எலும்பும் தோலுமாய் இருக்கிற குழந்தைகளின் படத்தை பார்த்திருப்போம். ஆனால் உண்மை அதுவல்ல.

ஒரு சில மாகாணங்களில் வறுமை இருந்தாலும் பெரும்பாலான இடங்கள் சுற்றுலா தளங்களாக இருக்கிறது, விதவிதமான கசைன்கள் கிடைக்கிறது, பல்வேறு ஹோட்டல்கள் நிறம்பியிருக்கிறது.

Image Courtesy

#9

#9

ஆப்ரிகா என்று சொன்னாலே அங்கு பழங்குடியின மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.காட்டுவாசி போல அரைகுறை உடையணிந்து கொண்டு திரிவார்கள், பெரும்பாலும் மண் வீடு அல்லது குடிசை வீட்டில் தான் வசிப்பார்கள் என்ற எண்ணம் நமக்கு இருக்கிறது. மிக முக்கியமாக இவர்களிடதில் தொழில்நுட்ப வளர்ச்சி இருக்காது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

Image Courtesy

#10

#10

ஆனால் உண்மை என்ன தெரியுமா? 2002 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி அங்கே 33 சதவீத மக்கள் மொபைல் போன் பயன்படுத்தியிருக்கிறார்கள்,இது படிப்படியாக உயர்ந்து தற்போது எண்பது சதவீதத்திற்கும் மேம்பட மக்கள் மொபைல் போன் பயன்படுத்த துவங்கியிருக்கிறார்கள்.

மொபைல் போன் பயன்படுத்துவது மட்டுமல்ல பல்வேறு மொபைல் அப்ளிகேஷன் தயாரிப்பாளர்களும் உருவாகியிருக்கிறார்கள்.

Image Courtesy

#11

#11

அங்கே மருத்துவ வசதிகள் எல்லாம் மிகவும் குறைவு, பல்வேறு வைரஸ் காய்ச்சல்கள் அங்கு சர்வ சாதரணமாக வரும் என்று நினைத்தால், உங்களது எண்ணம் தவறு. அங்கு ஏராளமான மருத்துவ வசதிகள் கிடைக்கின்றன.

எபோலா வைரஸ் ஆப்ரிகா முழுவதும் பரவவில்லை, சில மாகாணங்களுக்கு மட்டுமே பரவியது.

Image Courtesy

#12

#12

ஆப்ரிகா என்ற பெயரை முதலில் பயன்படுத்தியது ரோமானியர்கள். லேட்டின் மொழியில் ஆப்ரிகா என்றால் வெய்யில் என்று பொருள் இதே கிரேக்க மொழியில் ஆப்ரிகே என்றால் குளிரின்மை என்று பொருள் படும். இங்கே உலகிலேயே மிகப்பெரிய சஹாரா பாலைவனம் இருக்கிறது. இது அமெரிக்காவின் பரப்பளவைக் காட்டிலும் மிகப்பெரிது.

அதோடு இங்கு இருக்கக்கூடிய விக்டோரியா நீர்வீழ்ச்சி மிகவும் புகப்பெற்றது.

Image Courtesy

#13

#13

இங்கே மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட இடங்கள் இருக்கிறது. 198 மரைன் பாதுகாப்பு இடங்கள், 129 உலக புராதான இடங்கள் என யுனெஸ்கோவே அறிவித்திருக்கிறது. உலகிலேயே மிகவும் வசதி படைத்த ரயில் என்று பெருமை கொண்டது தென்னாப்ரிக்காவில் ஓடுகிற ராவோஸ் ரயில்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Unknown Facts About Africa

Unknown Facts About Africa
Story first published: Sunday, February 25, 2018, 10:00 [IST]