ஸ்ரீதேவியின் நிறைவேறாத ஆசை ஒன்னு இருக்கு... அது என்னன்னு தெரியுமா?...

By Manimegalai
Subscribe to Boldsky
கனவாகவே போன ஸ்ரீதேவியின் ஆசை..!!- வீடியோ

ஸ்ரீதேவி தான் இந்தியத் திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்று தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டவர். பெண் பார்க்க சென்றால் கூட பெண் ஸ்ரீதேவி மாதிரி இருக்க வேண்டும் என்பதே அந்த காலகட்டங்களில் பேச்சாக இருந்தது. அப்படிப்பட்ட ஸ்ரீதேவியின் அழகைப் பார்த்து மயங்காத ஆண்கள் மட்டுமல்ல, பெண்களையும் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
16வயதினிலே மயில்

16வயதினிலே மயில்

80 களில் மயில் என்ற பெயரை உச்சரிக்காத இளசுகளே இருந்திருக்க முடியாது. ஏறக்குறைய எல்லோருடைய கனவு நாயகியாகவும் ஸ்ரீதேவி இருந்திருப்பார். ஆனால் அதே ஸ்ரீதேவி மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர், அவரை திட்டித் தீர்க்காத ஆளே இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

மூக்கு அறுவை சிகிச்சைக்குப் பின் அவருடைய முக அமைப்பு வடஇந்திய முக அமைப்போடு ஒத்துப்போய், தமிழக கிராமத்து கலையை இழந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

திடீர் மரணம்

திடீர் மரணம்

அதற்குப் பிறகு தமிழ் ரசிகர்கள் ஸ்ரீதேவியை கொஞ்சம் மறந்துதான் போனார்கள். ஆனால் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி துபாயில் தங்கியிருந்த ஹோட்டலிலேயே கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துபோனார்.

பிரேத பரிசோதனை

பிரேத பரிசோதனை

இதைக்கேட்ட இந்திய ரசிகர்கள் தங்களின் மனக்குமுறலை சமூக வலைத்தளங்களில் எழுதித் தீர்த்தனர். ஆனால் அடுத்த நாளே ஸ்ரீதேவி குளியலறைத் தொட்டியில் விழுந்து இறந்தார், மது அருந்தி இறந்தார் என பல சர்ச்சைகள்கிளம்பின. அதற்கேற்றாற் போல அவருடைய பிரேதப் பரிசோதனை முடிவும் அந்த மரணம் கார்டியாக் அரெஸ்ட் இல்லை என்று சொன்னது.

மரணம் குறித்த சர்ச்சை

மரணம் குறித்த சர்ச்சை

அதுவரையிலும் துக்க செய்தியாக இருந்த ஸ்ரீதேவியின் மரணம் சர்ச்சைக்குரிய மரணமாக மாறிவிட்டது. ஒட்டுமொத்த ஊடகங்களும் சிரியாவையும் ஜெயேந்திரர் மரணத்தையும் மறந்துவிட்டு, ஸ்ரீதேவியின் மரணம் குறித்த டெமோ போட ஆரம்பித்துவிட்டது.

சமூகவலைத்தள காட்டம்

சமூகவலைத்தள காட்டம்

இப்படி ஊடகங்கள் தங்களுடைய டீஆர்பிக்காக செய்யும் விஷயங்களை சமூக வலைத்தளங்களில் காட்டமாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இரண்டு நாட்கள் இந்த பரபரப்பு

ஓடிக்கொண்டிருந்தது.

குடும்ப வாழ்க்கை

குடும்ப வாழ்க்கை

சிவகாசி அனுப்பன்குளத்தில் 1963 ஆம் பிறந்த இவர் 1996 இல் இந்தி திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டனர். அந்த சமயத்தில் இருவருக்கும் மிக பெரிய அளவில் வயது வேறுபாடு இருந்தது பெரும் பரபரப்பை இந்தியத் திரையுலகில் ஏற்படுத்தியது.

மகள்கள்

மகள்கள்

ஸ்ரீதேவிக்கு தன்னைப் போலவே இரண்டு அழகான மகள்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய பெயர் ஜான்வி மற்றும் குஷி.

குழந்தை நட்சத்திரம்

குழந்தை நட்சத்திரம்

தன்னுடைய நான்காவது வயதிலேயே தமிழ் சினிமாவில் நுழைந்தார். துணைவன் என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார். அதன்பின் நிறைய தமிழ், மலையாளப் படங்களில் முதல்படம் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதும் பெற்றிருக்கிறார்.

மொத்த படங்கள்

மொத்த படங்கள்

இதுவரையிலும் ஸ்ரீதேவி மொத்தம் 300 படங்களில் நடித்திருக்கிறார்.

முதல் படம்

முதல் படம்

ஸ்ரீதேவி கதாநாயகியாக அறிமுகமானது கே.பாலச்சந்திரனின் மூன்று முடிச்சு படத்தில்தான். அதன்பின் பல நெஞ்சையள்ளும் கதாபாத்திரங்களில் நடித்துவிட்டார்.

கடைசிப்படம்

கடைசிப்படம்

ஸ்ரீதேவி நீண்ட இடைவேளைக்குப் பின் சில வருடங்களாக மீண்டும் ஹிந்தி படங்களில் நடித்து வந்தார். அவருடைய 300 வது படமும் ஹிந்தி படம் தான். அந்த படத்தின் பெயர் மம்.

பத்மஸ்ரீ

பத்மஸ்ரீ

ஸ்ரீதேவியின் திரையுலகப் பணியைப் பாராட்டி கடந்த 2013 ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

நிறைவேறாத ஆசை

நிறைவேறாத ஆசை

எல்லோரையும் போல இவருக்கும் தன்னுடைய குழந்தைகள் மீதான பல ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் இருந்தது. அதில் தன்னுடைய மகள் ஜான்வி கதாநாயகியாக அறிமுகமாகி நடித்திருக்கும் தடாக் திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 20 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது. தான் நீண்ட நாள் ஆசையாக எதிர்பார்த்துக் காத்திருந்த தன்னுடைய மகளின் திரைப்படத்தை பார்க்க முடியாத நிறைவேறாத ஆசையோடு அவர் இநத மண்ணைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

அரசு மரியாதை

அரசு மரியாதை

அவருடைய ஆசை நிறைவேறாவிட்டாலும் இந்திய அரசு ஒரு சிறந்த கலைஞருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கத் தவறவில்லை. பிப்ரவரி 28 ஆம் தேதி வில்லே பார்லே மைதானத்தில் உடலில் தேசியக்கொடி போர்த்தப்பட்டு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  Read more about: life
  English summary

  unfulfill wish of sridevi

  Sridevi, India’s first female superstar, breathed her last in Dubai after suffering cardiac arrest, leaving millions of her fans in dismay. Sridevi’s last wish was to see daughter Jhanvi make her debut on silver screen and the actress was quite anxious about it.
  Story first published: Saturday, March 3, 2018, 13:45 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more