For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபிபாவில் அசத்திய குரோஷியா வானில் இருந்து கடலில் விழுந்த வினோத ஜந்து - (வீடியோ)

By Staff
|

குரோஷியோ யாரும் எதிர்பாராத வண்ணம் இந்தாண்டு நடந்து முடிந்த கால்பந்தாட்ட உலக கோப்பை தொடரில் இறுதிச்சுற்று வரை முன்னேறி அசத்தியது. அதற்கு முன் வரை அறியாத பலரும் அப்போது தான் குரோஷியா பற்றி அறிந்தார்கள். இப்போது மீண்டும் ஒரு வீடியோ மூலம் குரோஷியா இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

யூடியூபில் சென்று UFO வீடியோ என்று தேடினால் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் வந்து குவியும். குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் UFO-க்கள் தோன்றியதாக பல வீடியோக்கள் இருக்கின்றன. ஏன், இந்தியாவிலேயே UFO-க்களை கண்டதாக கூறப்படும் வீடியோக்களும் இருக்கின்றன.

சமீபத்தில் குரோஷியாவின் ஒரு கடற்கரை பகுதியில், ஒரு நபர் இயல்பாக எடுத்த வீடியோ காட்சி ஒன்றில்... திடீரென கடலின் தொலைவில் இருந்து ஒரு கருப்பு நிற உருவம் வானோங்கி பறந்து.. கடலில் விழுவது போன்ற காட்சி பதிவாகி இருக்கிறது. இது நிஜமாகவே UFO தோன்றிய வீடியோ தானா? அல்லது எப்போதும் போல யாரேனும்... எடிட்டிங் செய்து விளையாடுகிறார்களா என்பது குழப்பமான கேள்வியாக எழுந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
UFO?

UFO?

பல காலமாக வானில் தோன்றும் விசித்திரமான விமானத்தை UFO என்ற பெயரில் நாம் அறிந்து வருகிறோம். பலரும் இது ஏலியன் வந்து செல்லும் வாகனத்தின் பெயர் என்றே கருதி வருகிறார்கள்.

ஆனால், UFO என்றால் Unidentified Flying Object என்றே பொருளாகிறது. இந்த பெயரை அமெரிக்காவின் விமானப்படை அதிகாரி எட்வார்ட் ருப்பல்ட் என்பவர் 1952ம் ஆண்டில் சூட்டியுள்ளார்.

ஃப்ளையிங் சாசர்!

ஃப்ளையிங் சாசர்!

இதற்கு முன் 1947ல் வானில் தோன்றும் அந்த விமானம் போன்ற பிம்பத்தை Flying Saucer என்றே அழைத்து வந்தனர். விமானி கென்னத் அர்னால்ட் என்பவர் 1947 ஜூன் மாதம் வானில் பறக்கும் போது 9 பறக்கும் ஆப்ஜக்ட்களை கண்டதாகவும், அவை பார்பதற்கு நீரில் மிதக்கும் சாசர் தட்டுகள் போல இருந்ததாகவும் கூறி இருந்தார்.

போஸ்ட் ஸ்டாம்ப்

போஸ்ட் ஸ்டாம்ப்

1975ம் ஆண்டு பறக்கும் தட்டினை போஸ்ட் ஸ்டாம்பில் அச்சிட்ட முதல் நாடு எனும் பெருமையை பெற்றது கினியா. உங்களுக்கு தெரியுமா? அமெரிக்காவில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் "ஏலியன்களால் கடத்தப்பாட்டால்.." என்ற பிரிவில் இன்சூரன்ஸ் செய்திருக்கிறார்கள்.

அமெரிக்க அதிபர்!

அமெரிக்க அதிபர்!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கிம்மி கார்டர் 1973ம் ஆண்டு வானில் தான் ஒரு UFO-வை கண்டதாக பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், கடைசியில் வானில் அவர் கண்ட அந்த வினோத பிம்பமானது செவ்வாய் கிரகமாக இருக்க கூடும் என்று கண்டறியப்பட்டது.

நுரிம்பர்க்

நுரிம்பர்க்

ஜெர்மனியில் அமைந்திருக்கும் நகரம் நுரிம்பர்க். என்ன தான் உலகின் பல்வேறு பகுதிகளில் பலரும் UFOக்களை கண்டுள்ளதாக செய்திகள் வெளியிட்டாலும், வீடியோ ஆதாரங்களை காண்பித்தாலும்... ஒரே இடத்தில் பலரால் காணப்பட்ட UFO காட்சியாக கருதுப்படுவது இதுதான். கடந்த 1561ம் ஆண்டு வானில் பறக்கும் தட்டை கண்டதாக நுரிம்பர்க்கை சேர்ந்த பெரும்பாலானோர் கூறி இருக்கிறார்கள்.

தினமுமா?

தினமுமா?

இதுவரை வெளியான செய்திகள் மற்றும் வீடியோக்களை எல்லாம் வைத்து பார்த்தால்... கடந்த நாற்பது ஆண்டுகளில் சராசரியாக ஒரு நாளில் நம் உலகில் ஆறு முறையாவது UFO காணப்பட்டிருக்கலாம் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. அதில் பெரும்பாலானவை மேற்கத்திய நாடுகளில் நிகழ்ந்தவையாக கருதப்படுகிறது.

மேலும், பெரும்பாலும் UFOக்களை கண்டதாக கூறுபவர்கள் வெள்ளிகிழமைகளில் மற்றும் குடிக்கும் போது கண்டதாக கூறுகிறார்கள். (வீக்கென்ட் என்ஜாய்மெண்ட்ல மப்புல உளறுறாங்களோ!)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

UFO Spotted on Cam Recorder Over the Sea in Croatia

There are thousands videos we already watched regards, UFO spotted on Earth. But, this is latest and captured over the sea in Croatia.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more