Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
செவ்வாயின் தாக்கம் இன்று எந்தெந்த ராசிகளுக்கு இருக்கும்? என்ன நடக்கும்?
இங்கே 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
நம்மில் பலருக்கும் ஒரு நாளைத் துவங்குகிற பொழுது, இன்றைக்கு முழுவதும் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவே தினமும் எழுந்தவுடன் அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குகிறோம்.

ஆனால் ஆன்மீகம், ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாத சிலர், இதெல்லாம் எங்கே நடக்கப்போகிறது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி ராசிபலனைப் படிக்காமலும் பார்க்காமலும் இருக்க முடியாது. சரி. அதை விடுங்கள். இன்றைக்கு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது, எந்த ராசிக்காரருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது? யாருக்கு எதில் லாபம் என்பதைப் பார்க்கலாம்.

மேஷம்
மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு உண்டாகும். மாணவர்கள் தங்களுடைய முழு திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அலங்காரப் பொருள்களின் மீது உங்களுக்கு விருப்பங்கள் அதிகம் உண்டாகும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளிடம் நெருக்கங்கள் அதிகரிக்கும். உங்களின் உயர் அதிகாரிகளின் மீது உங்களுக்கு இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி, நெருக்கங்கள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

ரிஷபம்
செய்யும் தொழிலில் இருந்து வந்த சின்ன சின்ன தடங்கல்களும் இழுபறி நிலையும் நீங்கும். தொழிலை முன்னேற்றுவதற்கான பல்வேறு வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கின்றன. உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள். தொழிலில் வேலையாட்களின் மூலமாக இருந்து வந்த பல இன்னல்கள் குறையும். பணிகளில் உங்களுடைய முன்னேற்றங்களுக்கு ஏற்ப அங்கீகாரமும் பாராட்டுக்களும் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

மிதுனம்
தொழில் சம்பந்தப்பட்ட அலைச்சல்கள் கொஞ்சம் அதிகரிக்கும். செய்கின்ற செயல்களில் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. சின்ன சின்ன கவனக் குறைவினால் அவப்பெயர்கள் உண்டாக நேரிடலாம். எனவே கோபத்தைக் கொஞ்சம் தவிர்த்துவிட்டு, நிதானத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கடகம்
பயணங்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலான பலன்கள் உண்டாகும். வீட்டில் பிள்ளைகளின் மூலமாக அனுகூலமான செய்திகள் காதுகளுக்கு வந்து சேரும். நீங்கள் எதிர்பார்த்த பண வரவுகள் கைக்கு வந்து சேருவதால், பொருளாதாரம் மேம்படும். வியாபாரத்தில் நண்பர்களின் உதவியினால் உங்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சக ஊழியர்களிடம் உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

சிம்மம்
வீட்டில் உள்ள பெரியோர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டுக்கு உறவினர்களுடைய வருகையினால் கலகலப்பான சூழல்கள் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட புதிய புதிய முயற்சிகள் வெற்றியை நோக்கிச் செல்லும். செய்கின்ற செயல்களினால் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கன்னி
வீட்டில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமைகள் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பாராத உதவிகளினால் உங்கள் தொழிலில் மேன்மையான சூழல்கள் உருவாகும். வேலை சம்பந்தப்பட்ட முடிவுகளால் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். வியாபாரங்களில் லாபங்கள் அதிகரிக்கும். கையில் எடுத்த செயலை மிகவும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

துலாம்
புதிய நபர்களின் அறிமுகத்தினால் உங்களுடைய லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பொது காரியங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு சாதகமான நாளாக அமையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். புதிய வேலையாட்களின் மூலமாக நினைத்த காரியங்கள் நிறைவுறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
நீண்ட நாள் நெருங்கிய உறவினர்களைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும் வாய்ப்புண்டு. குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நீண்ட நாட்களாகத் தடைபட்டு வந்த காரியங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

தனுசு
உங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் சில முக்கியப் பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நண்பர்களுக்கு இடையில், கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பயணங்களின் மூலமாகஈ நீங்க்ள எதிர்பார்த்த, உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். நீங்கள் பணிபுரிகின்ற இடங்களில் உங்களுக்கு உரிய பாராட்டுக்கள் கிடைக்கும். இன் உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மகரம்
நினைத்த காரியங்களில் சிறிது கால தாமதங்கள் உண்டாகும். உறவினர்களின் மூலாக மகிழ்ச்சியான செய்திகள் வரும். உறவினர்களின் மூலமாக, மகிழ்ச்சியான செய்திகள் வரும். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். மனதுக்குள் தோன்றும் புதுவிதமான எண்ணங்களினால் குழப்பங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கும்பம்
பணிபுரிகின்ற இடங்களில் சக ஊழியர்களிடம் கொஞ்சம் இஅமைதியாக நடந்து கொள்ளுங்கள். பிறருடைய செயல்பாடுகளைக் குறை கூறுவதைத் தவிர்க்க வேண்டும். தொழி்ல சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதங்க்ள உண்டாகலாம். இணையதளம் சம்பநதமான பணிகளில் இருபு்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உணவு விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

மீனம்
நீங்கள் செய்யும் முயற்சிகளில் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். பணிகளில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். பங்குதாரர்களின் 5லமாக உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உருவாகும். அரசு அதிகாரிகளுடைய உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எ்ணணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











