Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
விநாயகர் சதுர்த்திக்காக விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்னென்ன?
விநாயகர் சதுர்த்திக்காக விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் மற்றும் முறைகள் பற்றி இங்கே விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றுங்கள்.
பொதுவாக இந்துக்களில் பெரும்பாலானவர்களின் இஷ்ட தெய்வமாக இருப்பது பிள்ளையார் தான். ஏனென்றால் விநாயகர் என்றாலே வினைகளைத் தீர்க்கக் கூடியவர் என்பதால் தான் அப்படி.

அதனால் அவருக்கு இருக்கும் விரதம் என்பது முக்கியமானது தானே!.

விநாயகர் சதுர்த்தி விரதம்
விநாயகர் சதுர்த்தி விரதம் என்பது விநாயகருக்காக மேற்கொள்ளும் முக்கிய விரதங்களுள் ஒன்று. மிகவும் விசேஷமானதும் கூட. விக்ன விநாயகரைப் போற்றி, ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் வருகின்ற சதுர்த்தி தினம் தான் விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்தால், அனைத்து நன்மைகளையும் பெறுவதோடு மனதுக்குள் நினைக்கும் அத்தனை வேண்டுதல்களும் நிறைவேறும்.

விரதமும் வரலாறும்
தேவேந்திரனாகிய இந்திரனின் வாகனமான அன்னப் பறவை விமானம் திடீரென பறக்க மறுத்துவிட்டது. அதை மீண்டும் பறக்கச் செய்வதற்காக தேவேந்திரன் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தை இருந்தார். அதன் பயனாகவே மீண்டும் அவருடைய விமானம் வானில் பறந்தது. அதேபோல, கர்த்தம ராஜா, நளன், சநிதிராங்கதன், முருகன், ஆதிசேஷன், தட்சன் ஆகியோர் இந்த விரதத்தைத் தான் மேற்கொண்டு பல்வேறு பலன்களை அனுபிவித்தனர்.

விரதம் இருக்கும் முறை
காலை விடியல்
விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும். உள்ளத்தையும் உடலையும் நன்கு தூய்மை செய்து கொண்டு, மனம் உருக விநாயகரை நினைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பூஜை தொடக்கம்
அதிகாலை எழுந்ததால் காபி எதுவும் குடித்துவிடாமல் இருங்கள். சூரியன் உதிக்கும் வரை எதுவும் சாப்பிடக்கூடாது. குளித்துவிட்டு, விநாயகரை மனதுக்குள் நினைத்திருந்து, என்னுடைய சங்கடங்கள் அனைத்தையும் நீங்கள் தீர்க்க வேண்டும் என்று வேண்டி பூஜையைத் தொடங்க வேண்டும்.
முதலில் விநாயகரைப் போற்றி வழிபட வேண்டும். பின்னர்,அவரிடம் நான் இன்று இந்த சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ளப் போகிறேன். அதற்கு எவ்வித தடைகளும் வந்துவிடாமல் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

நைவேத்தியம்
இந்த விரதத்தின் போது செய்யும் பூஜை படையலில் நெய், சர்க்கரை, எள் சேர்த்த கொழுக்கட்டைகளைத் தயார் செய்து நைவேத்தியம் செய்ய வேண்டும்.

தானம் செய்தல்
உங்களுடைய சக்திக்கு ஏற்றவாறு தானம் செய்யலாம். ஆனால் வேண்டுமென்றே பணம் இருப்பவர்கள் கஞ்சத் தனம் செய்யாதீர்கள். காலணிகள், குடை, பசு மாடு ஆகியவற்றை தானமாகக் கொடுத்தால் சிறப்பு. ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். நிறைய மேன்மைகள் உங்களுக்கு உண்டாகும்.

நன்மைகள்
இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கின்றவர்களுக்கு விநாயகப் பெருமான் நிச்சயம் வேண்டிய வரங்கள் அனைத்தையும் தருவார்.
சிறந்த கல்வி ஞானம், அறிவு, தெளிந்த ஞானம், செல்வம், மக்கட்பேறு ஆகியவற்றையும் மன நிம்மதி மற்றும் இன்பத்தையும் உங்களுக்கு வாரி வழங்குவார். இந்த விரதத்தை சிலர் ஸ்ரீகற்பக விநாயகர் வீற்றிருக்கிற ஆலயத்திலும் மேற்கொள்வார்கள். வீட்டிலும் இருக்கலாம்.



Click it and Unblock the Notifications