Latest Updates
-
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க...
வெளியில் கிளம்பும்போது பூனை தவிர வேறு எந்த விலங்குகள் குறுக்கே போனால் அபசகுனம் உண்டாகும்?
நாம் எங்காவது வெளியில் கிளம்புகிற பொழுது, எந்தெந்த விலங்குகள் குறுக்கே போனால் அபசகுணம் என்பது பற்றி இங்கே விரிவாக விளங்கிக் கொள்ளலாம்.
மக்களின் நம்பிக்கை படி சில விலங்குகளை பார்ப்பது இயற்கையிலேயே துஷ்ட சகுணம் என்கிறார்கள். அப்படி பார்க்கையில் பூனை குறுக்கே போவது கெட்ட சகுணமாகக் கருதப்படுகிறது. ஆனால் நீங்கள் மற்றொரு விஷயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

வெறுமனே நாம் வெளியில் கிளம்புகிற பொழுது வரும் பூனை மட்டும் அபசகுனம் அல்ல. அதுபோன்று இன்னும் சில விலங்குகளும் இருக்கின்றன. அவற்றைப் பற்றி தெரிந்து கொண்டு நடப்பது அவற்றின் கெட்ட அதிர்வுகளில் இருந்து தப்பிக்க முடியும். அதுதான் நமக்கும் நல்லது.

அபசகுனம்
நாம் எதாவது ஒரு வேலையைச் செய்ய புறப்படும் போது இப்படி பூனை குறுக்கே போவதால் அந்த காரியம் விலங்காது என்றும் அதில் வெற்றி பெற்றுவிட முடியாது என்றும் கூறப்படுகிறது. எனவே சில நிமிடங்கள் நின்று பூனை சென்ற பின் செல்வது நல்லது என்று மக்கள் கூறுகின்றனர். இதே போல் சில கெட்ட சகுணங்களைக் காட்டும் விலங்குகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பல்லி
பல்லி ஒரு அதிர்ஷ்டத்தின் சின்னமாகவும் புனிதமான உயிரினமாகவும் கருதப்படுகிறது. இது நீங்கள் செல்லும் வழியில் கடந்து சென்றால் உங்களுக்கு நல்ல நேரம் வருகிறது என்கிறது. அதாவது உங்களுக்காக ஒரு முக்கியமான வேலை காத்திருக்கிறது என்றும் அதில் வெற்றி கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆந்தை
நீங்கள் வெளியே செல்லும் போது ஆந்தை உங்களை கடந்து சென்றாலோ அல்லது அதை நீங்கள் பார்த்தாலோ இயற்கை நம்மிடம் ஏதோ சொல்ல வருகிறது. ஆந்தை நமது அறிவை காட்டுகிறது. அதாவது உங்களுக்கு எதாவது குழப்பம் நேரப் போவதையும் உங்கள் முழு நம்பிக்கையோடு போக வேண்டிய காரியத்தை செய்ய வேண்டும் என்று இது காட்டுகிறது.

கிளி
கிளி உங்களை கடந்து சென்றாலோ அதை பார்த்தாலோ நல்ல சகுணமாக சொல்லப்படுகிறது. அதாவது பறவைகள் இப்படி குறுக்கே வருவது அல்லது பார்ப்பது முன்னோர்களின் ஆசிர்வாதம் என்று கூறப்படுகிறது. எனவே நீங்கள் நம்பிக்கையுடன் சென்றால் நினைச்ச காரியம் நிறைவேறும்.

கழுகு
கழுகின் பெரிய கண்கள் நமக்கு ஆர்வத்தை தருகிறது. கழுகு நம் பாதையை கடக்கும் போது வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள மிகப் பெரிய பாடம் நமக்கு வரப் போகிறது என்பதை காட்டுகிறது.

பச்சோந்தி
சில சமயங்களில் நாம் விரும்பிய இலக்கை நாம் அடையாவிட்டால் இலக்கை மாற்றிக் கொள்ள முயலுவோம். ஆனால் நீங்கள் பச்சோந்தியை பார்த்தாலோ அல்லது பச்சோந்தி கடந்து சென்றாலோ உங்கள் இலக்கை மாற்றாமல் அதிலேயே உங்கள் கவனத்தை செலுத்துங்கள். வெற்றி நிச்சயம் என்பதை காட்டுகிறது.



Click it and Unblock the Notifications