Just In
- 3 hrs ago
இந்த ராசிக்காரர்களுக்குத் தான் சனிபகவான் நிறைய சோதனைகளைத் தருவார் தெரியுமா?
- 14 hrs ago
புதிதாக திருமணமான தம்பதிகள் படுக்கையறைக்கு செல்வதற்கு முன்பு என்ன செய்கிறார்கள் தெரியுமா?
- 16 hrs ago
2019 மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்து கொண்ட முதல் லெஸ்பியன் போட்டியாளர்!
- 18 hrs ago
கார்த்திகை தீப நாளில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன் தெரியுமா?
Don't Miss
- News
குடியுரிமை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு.. வடகிழக்கு மாநிலங்களில் முழு அடைப்பு... போலீஸ் குவிப்பு
- Movies
சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’
- Finance
"வீடு, கார் முதல் சேர் வரை" அனைத்தும் வாடகைக்கு.. எங்கே போகிறது உலகம்..!
- Technology
ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய அம்சம்.!
- Sports
ஏன் இப்படி பண்றீங்க? மைதானம் முழுக்க ஒலித்த தோனி பெயர்.. கடுப்பான கோலி!
- Automobiles
"வாகன துறையில் வேலையிழப்பே கிடையாது" - சர்ச்சை பதிலை கூறிய பாஜக தலைவர் யார் தெரியுமா..?
- Education
TNPSC Group 1: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பார்ன் உலகில் கேமராவுக்கு பின் நடக்கும் வக்கிரங்கள் - பார்ன் நடிகர் கூறும் பகீர் உண்மைகள்!
ஆடம் கிளாஸ்ர் எனும் முன்னாள் பார்ன் நடிகர், பார்ன் துறை எப்படி இயங்குகிறது, பணத்திற்காக அங்கே நடக்கும் விஷயங்கள் என்னென்ன, பார்ன் வீடியோக்களில் மக்கள் காண்பதில் எதெல்லாம் உண்மை, பொய், கேமராவுக்கு பின்னே அங்கே நடக்கும் விஷயங்கள் என்ன என்பது குறித்து தனது பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
அந்த பேட்டியில் அவர் இந்தியர்களின் இல்வாழ்க்கை மற்றும் பெண்கள் மத்தியில் செக்ஸ் மத்தியிலான விருப்பம் குறித்தும் பேசி இருக்கிறார்.

உல்லாச வாழ்க்கை!
கேளிவ்: நிறைய பணம், அழகான பெண்களுடன் செக்ஸ் என்பது ஒரு உல்லாசமான வாழ்க்கை தானே?
எல்லா ஆண்களாலும் பார்ன் நடிகராகிட முடியாது. அங்கே சைஸ் பிரச்சனைகள் இருக்கின்றன. எபோவ் ஏவறேஜ் சைஸ் இருக்கும் ஆண்கள் மட்டுமே பார்ன் நடிகர்களாக முடியும்.
மேலும், பார்ன் படங்களில் செக்ஸில் ஈடுபடுவது எளிதான காரியம் அல்ல. நிறைய பேர் சுற்றி இருப்பார்கள். செக்ஸ் கொண்டிருக்கும் போது, இப்படி செய், அப்படி செய், எப்படி செய்ய வேண்டும் என்று தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள்.

சூழல்!
மேலும் நீங்கள் நினைப்பது போல அழகான பெண்களுடன் மட்டும் அங்கே செக்ஸ் கொள்ள முடியாது. நமக்கு பிடிக்காத பெண்களுடனும் செக்ஸ் கொள்ள வேண்டும். சில சமயம் அந்நாளுக்கான ஊதியம் கிடைக்காது என்பதை தெரிந்தும் மகிழ்ச்சியாக செக்ஸில் ஈடுபட வேண்டும். இதெல்லாம் சாதாரணமாக நடக்கும் காரியம் அல்ல.

பணத்திற்காக!
சில பெண்கள் உண்மையில லெஸ்பியனாக இருப்பார்கள். ஆனால், பணத்திற்காக அவர்கள் ஆண்களுடன் செக்ஸ் கொள்வார்கள். சில ஆண்களுக்கு, ஆண்களுடன் செக்ஸில் ஈடுபட விருப்பமே இருக்காது. ஆனால், அதிகமாக பணம் கிடைக்கிறது என்பதற்காக கே செக்ஸில் ஈடுபடுவார்கள்.

மாத்திரைகள்!
என் அனுபவத்தை வைத்து கூற வேண்டும் என்றால், 95% ஆண் நடிகர்கள் விறைப்பை அதிகரித்துக் கொள்ள மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறார்கள். முக்கியமாக நீங்கள் காணும் குதவழி செக்ஸில் பல பிரச்சனைகள் இருக்கிறது. கேமராவிற்கு பின்னே பல விஷயங்கள் நடக்கும் அதெல்லாம் யாருக்கும் தெரியாது.

மாற்றங்கள்!
கேள்வி: பார்ன் துறை கடந்த இரண்டு தசாப்தங்களில் நிறைய மாற்றம், முன்னேற்றம் கண்டிருக்கிறதா?
நான் பார்ன் துறையில் இருந்து வெளியேறியதற்கு காரணம், அதில் ஏற்பட்டிருக்கும் மோசமான மாற்றங்கள் தான். நிறைய அபாயமான விஷயங்கள் அங்கே நடக்கின்றன. பெண்களை கொடுமைப்படுத்தி செக்ஸ் கொள்ளுதல், அவர்களை அவமானப்படுத்தும் வகையில் நடத்துதல் போன்றவை அதிகரிக்கித்துள்ளது. இதை எல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவசியமில்லை!
செக்ஸ் என்பது என்னை பொறுத்தவரை இன்பமானது. பணத்திற்காக இதில் ஈடுபடலாம். ஆனால், அதற்காக கொடுமைகள், அவமானங்கள், அபாயங்களை எல்லாம் தாண்டி இதில் நீடித்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இப்போது மார்கெட் ஹார்ட்கோர் கண்டன்ட் அதிகம் வேண்டி செல்கிறது.

இந்தியர்கள்!
கேள்வி: அமெரிக்காவிற்கு அடுத்து உலகளவில் பார்ன் பார்வையாளர்கள் இந்தியாவில் அதிகமாக இருக்கிறார்கள். அதுக்குறித்து உங்கள் பார்வை?
முதலில் பார்ன் வீடியோக்களில் நீங்கள் பார்ப்பது எல்லாம் உண்மை இல்லை என்பதை நம்ப வேண்டும். படங்களில் ஆர்வத்தை அதிகரிக்க நிறைய வேலைகள் செய்யப்படும். அது நிஜ வாழ்க்கையில் சாத்தியமேயில்லை.

பேச வேண்டும்!
அமெரிக்காவிலும் பெருமளவு மக்கள் ஆன்மீக சிந்தனையுள்ளவர்கள் தான். ஆனாலும், செக்ஸ் குறித்து பேசியாக வேண்டிய சூழல் இன்று அதிகரித்துள்ளது. அதை புரிந்துக் கொண்டு அங்கே செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேசுகிறார்கள். ஆனால், அங்கும் செக்ஸ் குறித்த சில விஷயகள் வெளிப்படையாக பேசப்படுவது இல்லை என்பதே உண்மை.

பார்வை!
இந்தியாவில் வீடுகளில் செக்ஸ் குறித்து பேசுவதை தவறாக கருதுகிறார்கள் என்று கேட்டறிந்துள்ளேன். இங்கே (இந்தியாவில்) யாரும் தங்கள் துணைக்கு என்ன பிடிக்கும், எப்படி செக்ஸ் கொண்டால் நீ விரும்புவாய், செக்ஸ் குறித்த உன் பார்வை மற்றும் விருப்பம் என்ன என்று கேட்டறிவது இல்லை.

தேவை!
இங்கே பெரும்பாலான இந்திய பெண்களுக்கு செக்ஸில் தங்களுக்கு வேண்டியது என்ன, தங்கள் விருப்பம் என்னவென்றே தெரிவதில்லை. ஆனால், அமெரிக்காவில் அப்படி இல்லை. தங்களுக்கு என்ன வேண்டும், என்ன வேண்டாம் என்று பெண்கள் கவனமாக இருப்பார்கள்.
ஆண்களும் பெண் உடல் மற்றும் அவர்கள் விருப்பம் குறித்து அறிந்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அதில் இருக்கும் உண்மையான இன்பம் என்ன என்பதை கடைசி வரை உணர முடியாமல் போய்விடும்.

அனுபவம்!
கேள்வி: உங்கள் அனுபவத்தில் மறக்க முடியாது நிகழ்வு?
ஆண் எஜாகுலேஷன் (male ejaculation) இருப்பதை போல பெண் எஜாகுலேஷன் (female ejaculation) என்பதும் இருக்கிறது. ஆனால், இதுக்குறித்து யாரும் பேசுவதில்லை அறிந்து வைத்திருப்பதும் இல்லை. ஏன் அமெரிக்காவிலும் பெரிதாக யாரும் இதுக்குறித்து பேசுவதில்லை. நான் பெண் எஜாக்குலேஷன் குறித்து சில படங்கள் எடுத்திருந்தேன்.

பெண் எஜாகுலேஷன்!
சிலர் பெண் எஜாகுலேஷன் என்பதை அவர்கள் செக்ஸ் கொள்ளும் போது சிறுநீர் கழிப்பதாக கருதுகிறார்கள். அது அப்படியானது அல்ல. இது வினோதமானது அல்ல. இது மிகவும் இயல்பான காரியம். சில பெண்கள் இதை தவறாக கருதி தங்களை தாங்களே அவமானமாக கருதிக் கொள்கிறார்கள்.
நிறைய பெண்கள் என்னிடம் நேரில் வந்து இதுக்குறித்த உண்மை தகவல் வெளிப்படுத்திய பிறகு நன்றி தெரிவித்து சென்றனர்.

செக்ஸ் கல்வி!
கேள்வி: செக்ஸ் கல்வி பற்றாக்குறைக்கு பார்ன் தீர்வாக அமையுமா?
பார்ன் என்பதை தீர்வு என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், பார்ன் படங்களை தெளிவான கண்ணோட்டத்துடன் காண வேண்டும்.
சிலர் பார்ன் படங்களை பார்த்து, அதே போல நிஜத்தில் ஈடுபட நினைக்கிறார்கள். பார்ன் படங்களில் ஓரல் செக்ஸ், குதவழி செக்ஸ் எல்லாம் சாதராணமாகவும், பெண்கள் அதை விரும்புவது போலவும் காண்பிக்கப்படும். ஆனால், நீங்கள் நிஜத்தில் உங்கள் துணையிடம் இதை எதிர்பார்த்தால் எதிர்ப்பும், பிரச்சனையும் தான் கிளம்பும்.

அரக்கன்!
சிலர் நீங்கள் இப்படியாக செயல்பட்டால், வற்புறுத்தி ஈடுபட்டால் உங்களை ஒரு அரக்கன் போல அல்லது ஆக்ரோஷமாக செயல்படுவதாக கருதலாம். பார்ன் படங்களில் நீங்கள் காண்பது எல்லாம் உண்மை அல்ல. அதில் பெண்களுக்கு பிடிப்பது எல்லாம் நிஜத்திலும் பிடிக்கும் என கூற இயலாது.
பார்ன் படங்களில் தங்களுக்கு பிடிக்காத செயலையும் பணத்திற்காக செய்வார்கள். நிஜத்தில் அதற்கு வாய்ப்பில்லை.

டிப்ஸ்!
கேள்வி: இந்தியர்களுக்கு செக்ஸ் குறித்து ஏதாவது கூற விரும்பிகிறீர்களா?
செக்ஸ் என்பதை தவறு என காண்பதை முதலில் நிறுத்த வேண்டும். செக்ஸ் என்பது நல்லது. அதை வெறும் உணர்ச்சி, மகிழ்ச்சி என்பதை தாண்டி காண வேண்டும். செக்ஸ் கொள்வதால் நிறைய நன்மைகள் உடலுக்கும், மனதிற்கும் உண்டாகிறது.
ஆனால், அதற்கு முன் செக்ஸ் குறித்த தெளிவான அறிவை புத்தகங்கள், கட்டுரைகள் படித்து வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.