For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  சங்கோஜமான நிலைகளில் மரணம் அடைந்த மக்கள்!

  By Staff
  |

  மரணம் ஒருவரை எப்படி வந்தடையும் என்று சொல்ல முடியாது. முன்பு இயற்கை மரணம் என்று நாம் ஒன்று அறிந்திருந்தோம். ஆனால், கடந்த பத்து, இருபது வருடங்களில் அப்படியாக இயற்கை மரணம் அடைந்ததாக நாம் யாரையும், எங்கேயும் பெரிதாக கேள்விப்படவே இல்லை. இதற்கு காரணம் நமது ஆரோக்கிய குறைப்பாடுகள் தான்.

  ஒருபுறம் இப்படியான மரணங்கள் நிகழும் அதே தருணத்தில், மறுபுறம் விபத்துக்கள் மற்றும் எதிர்பாராத நேரத்தில் நடந்த தவறுகளாலும் சிலர் மரணம் அடைகிறார்கள். ஆனால், மிக அரிதாக சிலரது மரணம் சங்கோஜமான வகையில் நிகழ்ந்துள்ளது. பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தான் இப்படியான மரணங்கள் பதிவாகி இருக்கின்றன.

  அப்படி என்ன இவர்கள் சங்கோஜமான நிலையில் இறந்துள்ளனர் என்று கேட்கிறீர்களா? நீங்களே படிச்சு பாருங்களேன்...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  காதல் ஜோடி!

  காதல் ஜோடி!

  பெயர் அறியப்படாத காதல் ஜோடி ஒன்று அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் டேடான் என்ற பகுதியில் காரில் இறந்துக் கிடந்தார்கள். இவர் ஒரு மேல்தள கார் கேரேஜ் இடத்தில் உடலுறவு கொண்டு வந்திருந்துள்ளனர். காரின் பின் இருக்கையில் இவர்கள் இருவரும் உடலுறவில் ஈடுபட்டு வந்த போதே அந்த ஆண் திடீரென இறந்துவிட்டார்.

  இந்த பெண் கீழே இருந்ததாலும், காதலனின் உடலை தூக்க முடியாமல் போனதாலும், இறந்த உடலுடன் காரில் இருந்து வெளியேற முடியாமல் தவித்துள்ளார். ஒரு கட்டத்தில், உடல் அழுக துவங்கிய காரணத்தாலும், நீர்வறட்சி ஏற்பட்டதாலும் அந்த பெண்ணும் காரினுள்ளே மரணம் அடைந்துவிட்டார். அந்த பெண் இறந்த சில மணிநேரங்களுக்கு பிறகு தான் இவர்களது உடல் கண்டெடுக்கப்பட்டன.

  டெக்ஸ்டைல்!

  டெக்ஸ்டைல்!

  பவுல் ஜி தாமார் 47 வயது மிக்க தாமஸ் அண்ட் சன்ஸ் டெக்ஸ்டைல் உரிமையாளர். இவர் எதிர்பாராத தருணத்தில் கடந்த 1987 ஆகஸ்ட் மாதம் நூல் சுற்றும் பெரிய மெஷினுக்குள் சிக்கிக் கொண்டார். இவரது மொத்த உடலும் நூலால் சுற்றப்பட்டது. இதனால் ஏற்பட்ட மூச்சு திணறலால் தாமஸ் மரணம் அடைந்தார்.

  ராபர்ட்!

  ராபர்ட்!

  1950-களில் உடல் பருமன் என்பது ஒரு கேலி விஷயமாக காணப்பட்டது. அதன் பக்கவிளைவுகள் பற்றி யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ராபர்ட் ஒரு சிறிய பிரபலம். இவரது உடல் எடையானது 486 கிலோவாகும். இவர் 1958ம் ஆண்டு தனது 32வது வயதிலேயே மரணம் அடைந்துவிட்டார். இவரது உடலை கிரேன் மூலமாக தூக்கி சென்றனர். மேலும், இவருக்கான சவப்பெட்டியானது, பியானோ பெட்டியை ஆல்டர் செய்து உருவாக்கப்பட்டது.

  பன்னி உரிமையாளர்!

  பன்னி உரிமையாளர்!

  ரோமானியாவை சேர்ந்த ஒரு பன்றி வளர்க்கும் விவசாயி நிர்வாண நிலையில் வெறும் ஆணுரையுடன் பன்றி கூண்டில் கண்டெடுக்கப்பட்டார். இவரை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர், அந்த விவசாயி இதயம் திடீரென செயலிழந்து போனதால் மரணம் அடைந்துள்ளார் என்று கூறினார். இவரது குடும்பத்தார், இவர் பன்றியுடன் மல்யுத்தம் செய்து இறந்தார் என்று நாசூக்காக கூறினார்கள்.

  ஏபெல்ட் ஹட்டென்ஸ்பெகர்

  ஏபெல்ட் ஹட்டென்ஸ்பெகர்

  ஜெர்மனியை சேர்ந்தவர் ஏபெல்ட் . இவர் வீட்டின் அருகே இருந்த ஒரு குளத்தில் படகில் நிர்வாணமான நிலையில் இருந்து கிடந்தார். இவர் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக அறியப்பட்டது.

  ஆனால், அவர் ஏன் விதைப்பையில் கிரீஸ் தடவி இருந்தாரா? அல்லது அவரது விதைப்பை பகுதியில் கிரீஸ் கொட்டியிருந்ததா? அது எப்படி நிகழ்ந்தது என்று காவலர்கள் தெளிவின்றி திகைத்தனர்.

  ராபர்ட் டீன்!

  ராபர்ட் டீன்!

  ராபர்ட் டீன் ஈடன் எனும் அறுபது வயதுமிக்க இந்த நபர் கலிபோர்னியாவை சேர்ந்தவர். இவரை அந்த பகுதியில் இருந்து ஹேப்பி வெளி என்ற பகுதியில் இருந்த ஒரு ஓக் மரத்தில் சங்கிலியில் கட்டி வைத்திருந்தனர். இவர் ஒருநாள் நிர்வாணமான நிலையில் மரணம் அடைந்து காணப்பட்டார்.

  பிறகு, இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அதனால் தான் இப்படியான நிலையில் கட்டி வைத்திருந்தோம் என்றும் அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.

  பிரிண்ட் டேலர் - செல்ஸே டம்பர்லேஸ்டன்

  பிரிண்ட் டேலர் - செல்ஸே டம்பர்லேஸ்டன்

  தென் கரோலினாவில் கொலம்பியா நகரில் ஒரு சாலையில் பிரிண்ட் டேலர் - செல்ஸே டம்பர்லேஸ்டன் இருவரும் நிர்வாணமாக இறந்து கிடந்தனர். இவர்களை கடந்த ஜூன் மாதம் 27 நாள், 2007ம் வருடம் ஒரு டாக்ஸி ஓட்டுனர் அந்த சாலையில் கிடப்பதை கண்டார்.

  இவர்கள் பிரமிடு வடிவில் இருந்த ஒரு அலுவலகத்தின் 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துக் கிடந்தனர். அந்த டாக்ஸி ஓட்டுனர் கண்ட போது இவர்கள் உயிருடன் தான் இருந்தனர்.

  ஆனால், மருத்துவமனைக்கு எடுத்து சென்று அனுமதித்த போது, அவர்கள் பலத்த காயங்கள் காரணமாக மரணம் அடைந்துவிட்டனர் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

  டேய்டர் லார்ஸ்!

  டேய்டர் லார்ஸ்!

  லார்ஸ் ஒரு 53 வயது புகைப்படக்கலைஞர். இவர் தனது வீட்டில் விசித்திரமான நிலையில் இறந்துக் கிடந்தார். இவரே தயாரித்த எலக்ட்ரோட்டின் ஒருமுறை விதையிலும், மறுமுனை வாயிலும் சொருகி இருந்தது. இதை போலீஸார் ஒரு விசித்திரமான தற்கொலை முயற்சி என்று கண்டறிந்தனர்.

  சைமண்ட்ஸ்!

  சைமண்ட்ஸ்!

  ஆக்ஸ்போர்டு சேர்ந்த சைமண்ட்ஸ் 49 வய்துமிக்கவர் இவர் தனியாக செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார் அப்போது இவர் ஒரு பிளாஸ்டிக் பையினுள் சென்று, முழு காற்றையும், வேக்கம் கிளீனர் கொண்டு உறிஞ்சி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு சைமண்ட்ஸ் மரணம் அடைந்தார்.

  எலக்ட்ரிஷியன்!

  எலக்ட்ரிஷியன்!

  ஜெர்மனியை சேர்ந்த ரிட்டையர்ட் எலக்ட்ரிஷியன் ஒருவர் தனது அப்பார்ட்மெண்ட்டில் தானாக கண்டுபிடித்த ஒரு உச்சகட்ட இன்பம் காண உதவும் கருவியுடன் இருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மசாஜ் பேட் மற்றும் எலக்ட்ரோட்டுகளால் தனது ஆணுறுப்பில் இணைத்து ஏதோ செய்ய, எலக்ட்ரிக் ஷாக் அடித்து அந்த எலக்ட்ரிஷியன் மரணம் அடைந்துவிட்டார்.

  All Image Source:weirdworm

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  The Most Embarrassing Deaths Ever Recorded!

  The most important thing we don’t know if Death can do, however, is feel emotion. Like the sort of embarrassment these people would experience if they knew how they met their maker.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more