தென் கொரியாவில் இதுக்கெல்லாம் தடை!

தென் கொரியாவில் மிகவும் வினோதமாக நடக்கூடிய சில விஷயங்கள் என்னென்ன என்று இப்போது பார்க்கலாம்.

ஓர் புதிய இடங்களுக்கு செல்லும் முன்னர், அந்த இடத்தில் நடக்கிற நடைமுறைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொண்டு செல்ல வேண்டியது அவசியம். அப்போது தான் சில சிக்கல்களிலிருந்து நம்மால் சில சங்கடங்களில் இருந்து தப்பிக்க முடியும்.

நமக்கு பரிச்சயமான இடம் என்று சொன்னால் ஒண்ணும் தெரியாது இதே வெளியூர் என்றால் நிலைமை அவ்வளவு தான். இங்கு, நமக்கு சாதரணமாக தெரியக்கூடிய விஷயம், அங்கே சிறைத்தண்டனை கிடைக்கும் அளவிற்கு தவறான விஷயமாக இருக்கும். இன்றைக்கு தென்கொரியாவில் தடைசெய்யப்பட்ட விஷயங்கள் தப்பித் தவறியும் கூட நீங்கள் செய்திடாத விஷயங்கள் என்னென்ன என்று இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாப்ஸ்டிக்ஸ் :

சாப்ஸ்டிக்ஸ் :

சைனீஸ் ரெஸ்ட்டாரண்ட்களுக்கு போனால் சாப்ஸ்டிக்ஸ் வைத்து சாப்பிடுவது வழக்கம். நமக்கு அதை வைத்து சாப்பிடத் தெரிகிறதோ இல்லையோ அதை வைத்து விளையாடவாவது செய்வோம். ஃபோர்க்கில் நூடுல்ஸை எடுத்து சாப்பிடவே தெரியாதவர்களிடத்தில் சாப்ஸ்டிக்ஸை கொடுத்தால் என்ன செய்வார்கள்?

இதே போல தென்கொரியா போய் செய்து விடாதீர்கள். ஏனென்றால் அங்கே சாப்ஸ்டிக் வைத்து விளையாடுவது குற்றம். இதோடு சாப்ஸ்டிக்ஸ் எப்படி பிடித்திருக்க வேண்டும், எப்படி வைக்க வேண்டும் என்பதற்கெல்லாம் சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். கொரிய மக்களின் கலாச்சாரத்தில் சாப்ஸ்டிக்ஸ் நீளவாக்கில் வைத்தால் மரணத்தை குறிக்கும், அதே உணவு சாப்பிட்டு முடித்த பிறகு வெறும் தட்டில் சாப்ஸ்டிக்ஸ் வைத்தால் அது உணவு பரிமாறுபவரை அவமானப்படுத்தியதைப் போலாகும்.

டேட்டூ :

டேட்டூ :

அலங்காரத்திற்காக, அல்லது ஃபேஷன் என்ற பெயரில் வித விதமாக டேட்டூ குத்திக் கொள்வது வழக்கம். ஆனால் தென் கொரியாவில் வெளியில் தெரியுமாறு நீங்கள் டேட்டூ குத்திக் கொள்ளக் கூடாது. டேட்டூ ஆர்டிஸ்ட் என்று இங்கே யாரும் இருக்க மாட்டார்கள். டேட்டூ குத்தியவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதில் கூட சிக்கல்கள் ஏற்படும். பொது இடத்தில் உங்களால் சகஜமாக நடமாட முடியாது.

குட்டைப் பாவாடை :

குட்டைப் பாவாடை :

நெக்லைன் தெரியும் அளவிற்கு மிகவும் லோவான உடை அணிவது அங்கே கொரிய மக்கள் மத்தியில் செக்ஸியான உடையாக பார்க்கப்படுகிறது. உள்ளாடைகள் அணியாமல் டீஷர்ட்டோ அல்லது செக்ஸியான உடைகளோ அணியக்கூடாது. மேலாடைகளுக்கு இந்தப் பிரச்சனை என்றால் குட்டை பாவடைக்கு?

டிப்ஸ் :

டிப்ஸ் :

இங்கெல்லாம் ஹோட்டலில் சாதரணமாக டிப்ஸ் என்று தலையை சொரிந்து கொண்டு நிற்பார்கள். நாமும் ஏதோ பெருந்தன்மையாக டிப்ஸ் கொடுத்து விட்டு வருவோம். ஆனால் இந்த கதையெல்லா தென்கொரியாவில் நடக்காது. அங்கே ஹோட்டலில் டிப்ஸ் கொடுக்கக்கூடாது என்ற விதிமுறையே இருக்கிறது. கொரியாவில் மட்டும் தான் இப்படி, அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளில் எல்லாம் டிப்ஸ் வாங்கப்படுகிறது.

உணவு :

உணவு :

பெயரைப் பார்த்து ஆசைப்பட்டு ஆர்டர் செய்து விட்டு, வந்த பிறகு அதை வாயிலேயே வைக்க முடியவில்லை என்று எழுந்து சென்று விடக்கூடாது. ஏனென்றால் அங்கே உணவு மிச்சம் வைப்பதும் குற்றம். வடகொரியா மற்றும் தென் கொரியாவுக்கு இடையில் நடந்த போரை மக்கள் இன்றளவு நினைவில் வைத்திருக்கிறார்கள்.

அப்போது ஒரு வேலை உணவு கூட கிடைக்காமல் எவ்வளவு சிரமப்பட்டோம் என்று நினைப்பவர்கள் எங்கும் உணவினை வீணடிப்பதில்லை. ஹோட்டல்களுக்கு சென்றாலும் சரி, அல்லது விருந்தினர் வீடுகளுக்கு சென்றாலும் சரி.

உத்து பாக்கக்கூடாது :

உத்து பாக்கக்கூடாது :

நம் ஊருக்கு ஒரு வெளிநாட்டினர் யாராவது வந்தால் அவ்வளவு தான். வந்தவர்கள் திரும்ப போகும் வரையில் நம் கண்கள் அவர்களை விட்டு அகலாது. ஏதோ ஒரு அதிசயத்தை பார்ப்பது போல கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டேயிருப்போம். கொஞ்சம் வித்யாசமாக தெரிந்தாலே இப்படித்தான். ஆனால் இதே போல நீங்கள் கொரியாவிற்கு போய் செய்து விடாதீர்கள்.

அங்கே தனிமனித சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நாம் சுற்றுலாவிற்கு வந்த ஆர்வத்தில் போன் எடுத்து மினி போட்டோகிராபர் அவதராம் எல்லாம் அங்கே எடுத்து விடாதீர்கள். அவ்வூர் மக்களின் அனுமதியின்றி நீங்கள் போட்டோ எடுக்கக்கூடாது. மீறி எடுத்தால் அபாரதம் அல்லது சிறைத்தண்டை விதிக்கப்படும். இவற்றை விட அவ்வூர் மக்கள் நீங்கள் விசித்திரமாக பார்ப்பது போலவும் பார்க்கக்கூடாது.

வயது :

வயது :

நம்மூரில் முதியவர்கள் என்று சொன்னாலே மரியாதைக்குறைவாக நடத்த ஆரம்பித்துவிடுவார்கள். உனக்கெல்லாம் என்ன தெரியும், பேசாம நான் சொல்றத கேளூ என்று தான் துவங்குவார்கள்.

ஆனால் தென்கொரியாவில் இந்த கதையெல்லாம் நடக்காது. இளையவர்கள் தங்களை விட மூத்தவர்களுக்கு கண்டிப்பாக மரியாதை கொடுத்தே ஆக வேண்டும். அவர்களிடம் கடிந்து நடந்து கொள்ளக்கூடாது.

இயற்கை :

இயற்கை :

கழிவு என்பதை இங்கே எல்லாரும் அருவருப்பாகத் தான் பார்ப்பார்கள்,டாய்லெட் போகணும் என்பதையே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு ரெஸ்ட் ரூம் என்று நாசூக்காக சொல்லிக் கொள்ளும் நமக்கு கொரிய மக்களின் இந்த பழக்கம் சற்று விசித்திரமாகத்தான் இருக்கும்.அங்கே சிறுநீர்,மலத்தைப் பற்றி சாதரணமாக நண்பர்களிடம் பேசுகிறார்கள்.

சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம் இன்றைக்கு நீ நன்றாக மலம் கழித்தாயா என்ற கேள்வி இடம்பெறுமாம். இங்கே பொதுகழிப்பிடங்கள் எல்லாம் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. கழிவறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீம் பார்க் ஒன்றும் கட்டப்பட்டிருக்கிறது. இயற்கையாக நிகழக்கூடிய எதுவும் அசிங்கமானது அல்ல என்கிறார்கள் இந்த மக்கள்.

மது :

மது :

கொரிய மக்களிடையே ஒரு விசித்திர பழக்கம் இருக்கிறது. அதிகமாக வேலை செய்வார்கள், வார இறுதி நாட்கள் வந்து விட்டால் அதே அளவிற்கு குடித்து தீர்ப்பார்கள். உடன் பணியாற்றுபவர்களுடன் சேர்ந்து ஏன் சில நேரங்களில் தங்கள் பாஸுடன் கூட சேர்ந்து குடிப்பார்கள். பார்க்க கோட் சூட் எல்லாம் அணிந்து கொண்டிருப்பார்கள் ஆனால் குடித்து விட்டு சாலையோரத்தில் சாய்ந்து கிடப்பார்கள்.

நாமும் அவசரப்பட்டுக் கொண்டு உதவுகிறேன் என்று சொல்லி அவர்களை தூக்குவதோ அல்லது பிற முதலுதவி செய்வதோ கூடாது.

புகை :

புகை :

கொரியாவிற்கு சென்றால் உங்களால் நினைத்த இடங்களில் எல்லாம் நினைத்த நேரத்தில் புகை பிடித்து விட முடியாது. அதற்கென்ற தனி இடத்தை ஒதுக்கி வைத்திருப்பார்கள் அங்கே மட்டும் தான் நீங்கள் புகை பிடிக்க வேண்டும், மக்கள் கூடுகிற இடத்தில், பொருட்காட்சி போன்ற இடங்களில் எல்லாம் கண்டிப்பாக புகை பிடிப்பதற்கான இடம் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, June 5, 2018, 11:50 [IST]
Desktop Bottom Promotion