Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
உலகெங்கிலும் காணப்படும் விசித்திரமான சிலைகள் - புகைப்படத் தொகுப்பு!
உலகெங்கிலும் காணப்படும் விசித்திரமான சிலைகள் - புகைப்படத் தொகுப்பு!
நாம் அறிந்ததை, கண்டுபிடித்தத்தை, எதை செய்ய வேண்டும், ஏன் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் அதன் தாக்கம் என்ன, எதை எல்லாம் செய்யக் கூடாது என பலவற்றை நமக்கு பின் வரும் தலைமுறைக்கு கூற வேண்டும் என முன்னோர்கள் விளக்கும் வகையில் உருவாக்கிய கருவிகள் தான் சிலைகள்.
சில சிலைகள் வணங்கப்படுகின்றன. சில சிலைகள் போற்றப்படுகின்றன. சில சிலைகள் வரலாற்றை தாங்கி நிற்கின்றன. சில சிலைகள் அரசியல் செய்கின்றன. தன்னுள் தகவல், வாழ்வியல், வரலாறு அரசியல் கொண்டிருக்கும் பல சிலைகளை நாம் நம் வாழ்வில் கடந்து வந்திருப்போம். சில சிலைகள் நம்மை சிரிக்கவும் வைத்திருக்கின்றன, சில சிலைகள் நம்மை சிந்திக்கவும் வைத்திருக்கின்றன.

சிலைகள் என்றாலே நம் நினைவிற்கு வருவது மாமல்லபுரமாக தான் இருக்கும். பெரும் சிறப்புகளை கொண்டிக்கின்றன அந்த சிலைகள். இன்றும் சில தலைவர்களுக்கு இலட்சங்களும், கோடிகளும் கொட்டி சிலைகள் நிறுவப்படுகின்றன. காரணம், யாரும் அவர்களை மறந்துவிட கூடாது. அவர்களால் நாம் அடைந்த பயனை வரலாற்றில் வரும் தலைமுறையினர் இடையே நினைவுப்படுத்த வேண்டும் என்றே சிலைகள் நிறுவப்படுகின்றன.
சிலைகள் என்பது கலையை தாண்டி ஒரு இனத்தின் கலாச்சாரம், வரலாறு, சிறப்புகளை தாங்கி மண்மேல் நிற்கும் உணர்ச்சிகள் கொண்டிருக்கும் ஒரு கருவியாக தான் காண வேண்டும்.
ஆனால், இப்போதெல்லாம்... இதையெல்லாம் மனதில் வைத்து தான் சிலைகள் வைக்கப்படுகிறதா என்றால்... இல்லை என்பதே பெரிய உண்மை. தங்கள் தலைவரின் முகமா என்று ஆச்சரியப்படும் வகையில் சிலர் சிலை வைக்கிறார்கள். கொலையாளிகளுக்கும் கூட சில இடங்களில் சிலைகள் திறக்கப்படுவதை எண்ணி வியப்பதாக, நொந்துக் கொள்வதா?
சரி! அதை எல்லாம் ஒருபக்கம் புறம் தள்ளிவிடுவோம். இங்கே வேறுவிதமான சிலைகளை தான் நாம் காண இருக்கிறோம். இவை விளையாட்டாக, வினோதமாக, கேளிக்கையாக உலகெங்கிலும் ஆங்காங்கே காணப்படும் சிலைகள் ஆகும்... வாங்க பார்க்கலாம்....

#1
Image Source: Oddee
ஐஸ்லாந்தின்ரிகியவிக் எனும் பகுதியில் இருக்கும் விசித்திரமான சிலை. இந்த சிலையில் தலை பகுதிக்கு பதிலாக உருவமற்ற ஒரு பாறையை தலை பாகமாக உருவாக்கி இருக்கிறார்கள்.

#2
Image Source: Oddee
பெருவின் லிமா எனும் பகுதியில் இடம் பெற்றிருக்கும் El Parque del Amor எனும் சிலை. ரொமான்ஸ் நிலையில் காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வது போல இந்த சிலை தோற்றம் கொண்டிருக்கிறது.

#3
Image Source: Oddee
செக் குடியரஸின் பிராகா எனும் பகுதியில் இடம் பெற்றிருக்கிறது இந்த சிலை. தெளிவான முக / உடல் தோற்றம் இல்லாத மனித சிலை மீது மண்டை ஓடு இருப்பது போல தோற்றம் கொண்டிருக்கிறது.

#4
Image Source: Oddee
ஐரோப்பியாவின்செல்டென்ஹாம் இடத்தில் இடம் பெற்றிருகிறது இந்த சிலை.

#5
Image Source: Oddee
சுவீடனின்ஸ்டாக்ஹோம் எனும் இடத்தில் இந்த சிலை இருக்கிறது. மாடு விண்வெளி சென்றால் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் படியான உருவம் கொண்டிருக்கிறது இந்த சிலை.

#6
Image Source: Oddee
ஜப்பானின் டோக்கியோ பகுதியில் சாலை ஓராமாக நின்று பிளாட் பாரத்தில் நடந்து வரும் மக்களை மறைந்திருந்து வெடிக்கப் பார்ப்பது போல அமைந்திருக்கிறது இந்த கியூபிட் சிலை.

#7
Image Source: Oddee
அமெரிக்காவின் வர்செஸ்டர் எனும் இடத்தில் இருக்கிறது இந்த சிலை. ஆமையுடன் ஒரு ஆண் விளையாடி கொண்டிருப்பது போல இருக்கும் இந்த சிலையை"the turtlefucker" என்று அழைக்கிறார்கள்.

#8
Image Source: Oddee
வாசிங்க்டன் டி.சியில் ஹைன்ஸ் பாயின்ட் பார்க் இடத்தில் அமைந்திருக்கிறது"The Awakening" எனும் இந்த சிலை.

#9
Image Source: Oddee
போலாந்தின் வராக்லா எனும் பகுதியில் அமைந்திருக்கிறது தி பாஸிங் எனும் இந்த வித்தியாசமான சிலைகள்.

#10
Image Source: Oddee
ஸ்காட்லாந்தின் டண்டீ எனும் பகுதியில் நடைபாதை அருகே அமைந்திருக்கிறது இந்த சிலை. இதில் ஒரு பணக்கார நபர் மற்றொரு மனிதனை அடிமை போல கட்டி இழுத்து செல்வது போல இருக்கிறது.

#11
Image Source: Oddee
ஜெர்மனியின் சில்ட் எனும் பகுதியில் சாலையில் இடம் பெற்றிருக்கும் கிரீன் ஜெயின்ட் சிலைகள்.

#12
Image Source: Oddee
நியூயார்க்கில் இடம் பெற்றிருக்கும் தி விர்ஜின் மதர் சிலை. இந்த சிலை பாதி ரோபாட் மற்றும் பாதி மனிதன் போல உருவம் கொண்டிருக்கிறது.

#13
Image Source: Oddee
ஜெர்மனியின் பெர்லின் பகுதியல் இடம் பெற்றிருக்கும் ஒரு விசித்திரமான சிலை.

#14
Image Source: Oddee
நெதர்லாந்தின்யுட்ரிச்ட் எனும் இடத்தில், ஒரு கட்டிடத்தின் மேல் இருக்கிறது ஏலியன் வாகனமாக கருதப்படும் இந்த யு.எப்.ஓ சிலை. இந்த சிலையின் பெயர்"UFO has landed"

#15
Image Source: Oddee
இந்த சிலை எங்கே இடம் பெற்றிருக்கிறது என்ற தகவல் சரியாக அறியப்படவில்லை. ஆனால், இந்த சிலையில் இடம் பெற்றிருக்கும் பெண்களின் மார்பில் இருந்து நீர் பாய்ச்சி அடிப்பது போல ஃபவுண்டெயின் அமைக்கப்பட்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications











