தாயின் இறந்த உடலை பணத்திற்காக பல ஆண்டுகள் வீட்டிலேயே வைத்திருந்த மகன்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியினால் மனிதன் சோம்பேறி ஆகிவிட்டான் என்று மட்டும் சொல்லமுடியாது.மாறாக தொழில்நுட்ப வசதிகளின் உதவியுடன் குற்றங்களை செய்வதும் அதனை மறைப்பதையும் அதிகமாகி வருகின்றன.

நம்முடைய வசதிக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம் என்றாலும் அதனுடைய பயன்பாடு அதன் மீதான தாக்கம் எல்லாம் பல மடங்கு வீரியம் கொண்டதாகவே இருந்திடுகிறது. இயந்திரங்களுக்கு உணர்வு,பாசம் ஆகியவற்றை பற்றியெல்லாம் தெரியாது. கட்டளையிட்டால் செய்யும் அவ்வளவு தான்.

பாசம் பற்றி பேச வேண்டுமென்றால் முதலிடத்தில் நிற்பது அம்மா மட்டுமே. அவளது பாசத்திற்கும் அன்பிற்கும் ஈடு இணை எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.அதேயளவு நாம் திருப்பிக் கொடுக்கவில்லையென்றாலும் அந்த பாசத்திற்கான அதுவரை காலம் தாய் நமக்களித்த அரவணைபிற்காகவாது மரியாதை செலுத்தி வருகிறோமா என்ற கேள்வி நம்முன்னால் நிற்கிறது. இதற்கு ஒவ்வொருவரும் உங்களது மனசாட்சியிடம் பதில் கேட்டுக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பணம் :

பணம் :

இன்று எல்லாரும் பணத்திற்காக ஓடுகிற கூட்டமாக மாறிவிட்டோம். பகட்டான வாழ்க்கை முறைக்கு அடிமையாகிவிட்டோம் என்று கூட சொல்லலாம். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ரீதியில் தள்ளப்பட்டு விட்டிருக்கிறோம்.

இதைத் தவிர நம்மிடையே இருக்கக்கூடிய மிக மோசமான போக்கு என்ன தெரியுமா? வசதி..... நாம் நினைத்த மாதிரி, நமக்கு எந்த இடைஞ்சலும் வராத வகையில் ஆடம்பரமான வாழ்க்கை வேண்டும். இதற்கு இடைஞ்சலாக எது வந்தாலும் அதனை வீழ்த்திட நாம் தயங்குவதில்லை.

அம்மா :

அம்மா :

உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாகிவிட்ட அம்மாவை பராமரிக்க முடியாமல் தவித்த போது மனைவியின் உதவியுடன் பால்கனியிலிருந்து

அம்மாவை தள்ளிவிட்டு நாடகமாடிய மகனைப் பற்றிய செய்திகளை கடந்த சில மாதங்களுக்கு முன் கடந்து வந்திருப்போம். அதன் சிசிடிவி காட்சிகளும் சமூகவலைதளங்களில் மிக வேகமாய் பரவியது. இது எல்லாருக்கும் பெரும் அதிர்ச்சிகரமான சம்பவமாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இதே போன்றதொரு சம்பவம் கொல்கத்தாவில் இந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடந்திருக்கிறது.

நோக்கம் :

நோக்கம் :

இந்த சம்பவத்தின் நோக்கம் பணம் மட்டுமே பிரதானமாக இருந்திருக்கிறது. தாயின் பெயரில் வரக்கூடிய பென்ஷன் பணத்திற்காக கடந்த மூன்று வருடங்களாக தாயின் உடலை வீட்டின் ஃப்ரீசரிலேயே வைத்து பராமரித்திருக்கிறான் மகன். இது தந்தைக்கும் தெரிந்தே நடந்திருக்கிறது என்பது தான் பெரும் சோகம்.

போலீசார் அந்த வீட்டை சோதனையிட்ட போது பெரிய ஐஸ் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த அந்த தாயின் உடலையும்,மகனையும் கைது செய்திருக்கிறார்கள்.

மரணம் :

மரணம் :

ஏப்ரல் 7 ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு 84 வயதுடைய பினா மஜும்தர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அதே நாள் மாரடைப்பு ஏற்படுகிறது தீவிர சிகிச்சை அளித்தும் அவை எதுவும் பலனளிக்காமல் உயிரிழக்கிறார்.

மருத்துவமனையின் அறிக்கைப்பபடி பினா அன்றைய தினம் இரவு 9.55 மணிக்கு உயிரிழந்து விட்டார்.

அமைதியான சொர்கம் :

அமைதியான சொர்கம் :

பினாவின் உடலை வீட்டிற்கு கொண்டுவருகிறார்கள் மகன் சுபப்ரதா மஜும்தர் மற்றும் கணவர் கோபால் மஜும்தர். இந்த விஷயம் உறவினர்கள் சிலருக்கும் தெரியவர வீட்டிற்கு வந்துவிட்டிருக்கிறார்கள். பினாவின் இறுதிச்சடங்கு பற்றி எந்த பேச்சும் அவர்கள் எடுக்காததைக் கண்டு உறவினர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அப்போது என் தாயை சொர்கத்தில் சேர்க்கப்போகிறேன் அது மிகவும் அமைதியான சொர்க்கமாக இருக்கும். என்றிருக்கிறார்.

Image Courtesy

ஐஸ் பாக்ஸ் :

ஐஸ் பாக்ஸ் :

பல முறை கேட்டும் மகன் அதே பதிலைச் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு சில நாட்கள் கழித்து கேட்கையில் தாயின் உடலை மார்ச்சுவரியில் வைத்திருப்பதாக சொல்லியிருக்கிறார்.

இதன் பிறகு உறவினர்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டிருக்கிறார் சுபப்ரதா.தாயின் உடலை ஐஸ் பாக்ஸில் வைத்தவர் முதல் பாக்ஸ் கோளாறு ஏற்படவே இரண்டாவது பாக்ஸினை வாங்கி அதில் தாயின் உடலை வைத்திருக்கிறார்.

இதற்கு அதிக குளிர்ந்த டெம்ப்பரேச்சர் இருக்க வேண்டும். அது இல்லாததால் தான் முதல் பாக்ஸ் சரியாக வேலை செய்ய வில்லை என்று உணர்ந்த சுபப்ரதா முதல் தளத்தில் எப்போது ஏசி இயங்க வைத்தார்.

Image Courtesy

புகார் :

புகார் :

சுபப்ரதாவிற்கு இரண்டு மாடிகொண்ட வீடு கொல்கத்தாவில் இருக்கிறது. தரைத்தளத்தில் இவர்களும் இரண்டாவது தளத்தில் வாடகைக்கு ஒரு குடும்பமும் இருந்திருக்கிறது.

இந்நிலையில் மூன்று வருடங்கள் கழித்து சுபப்ரதா வீட்டில் வாடகைக்கு இருந்தவரிடமிருந்து போலீசாருக்கு ஒரு புகார் வருகிறது. அதில் எங்கள் வீட்டின் முதல் தளம் காலியாகவே இருக்கிறது ஆனால் அங்கே 24மணி நேரமும் அதிக டன் கொண்ட ஏசி இயங்கிக் கொண்டிருக்கிறது. இதுப் பற்றி அந்த வீட்டின் உரிமையாளரான சுபப்ரதாவிடம் கேட்கப்பட்ட போது சரியான பதிலில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

Image Courtesy

போலீஸ் விசாரணை :

போலீஸ் விசாரணை :

சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றிருக்கிறார்கள். ஏசி ஓடிக் கொண்டிருந்த முதல் தளத்தின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது வீடு முழுவதும் காலியாக இருக்கிறது ஒரு ஜாமானும் இல்லை ஒரு அறையில் இரண்டு பெரிய ஐஸ் பெட்டிகள் இருந்திருக்கிறது. அதனை தொழிற்சாலைகளில் பயன்படுத்துவார்கள் என்றிருக்கிறார்கள்.

முதல் பெட்டியை திறந்து பார்த்த போது காலியாக இருந்திருக்கிறது. இரண்டாவது பெட்டியை திறந்த போது அதற்குள் மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்த பினாவின் உடல் இருந்திருக்கிறது.

Image Courtesy

கைது :

கைது :

அந்த உடலை கைப்பற்றிய போலீசார் மகன் சுபப்ரதாவையும் கணவர் கோபாலையும் கைது செய்திருக்கிறார்கள். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பினா மற்றும் அவரது கணவர் இருவருமே உணவு பாதுகாப்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் வரை ஒய்வூதிய பணம் வந்திருக்கிறது. மகன் சுபப்ரதா ஒரு லெதர் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்.

Image Courtesy

 பணம் :

பணம் :

சுபப்ரதா கடந்து ஐந்து வருடங்களுக்கு முன்னரே பணியிலிருந்து விலகியிருக்கிறார். தொடர்ந்து தாயின் ஓய்வூதிய பணம் கிடைக்க வேண்டும் என்று நினைத்த சுபப்ரதா தந்தையின் உதவியுடன் இதை அரங்கேற்றியிருக்கிறார். ஏற்கனவே லெதர் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால் கெமிக்கல்கள் குறித்தெல்லாம் சுபப்ரதாவிற்கு தெரிந்திருக்கிறது.

உள்ளுருப்புகள் சிலவற்றை நீக்கிய சுபப்ரதா ஃபார்மல்டிஹைட் என்ற கெமிக்கலை பயன்படுத்தி உடல் கெட்டுப்போகாமல் இருக்கச் செய்திருக்கிறார். ஒவ்வொரு மாதமும் தாயின் கைவிரல் ரேகையை பயன்படுத்தி உயிருடன் இருப்பதாக காட்டி ஒய்வூதிய பணத்தை பெற்றிருக்கிறார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Son Kept his Mothers Body illegally for Three Years

Son Kept his Mothers Body illegally for Three Years
Story first published: Saturday, April 14, 2018, 10:14 [IST]