Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
சனி, ராகு, கேது என எல்லா தோஷங்களும் நீங்க ஒரேயொரு சிம்பிள் பரிகாரம் இது... செஞ்சு பாருங்க...
ராகு, கேது, சனி என எல்லா வகையான தோஷங்களையும் நீக்குவதற்காக வேறு வேறு பரிகாரங்கள் செய்வதற்கு பதிலாக, எல்லா தோஷங்களுக்கும் ஒரே ஒரு சிம்பிள் பரிகாரத்தைச் செய்ய வேண்டும். அதைத் தான் இங்கே குறிப்பிட்டுள்ளோ
சனி தோஷம், குரு தோஷம், ராகு, கேது தோஷம், கால சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம், மாங்கல்ய சனி தோஷம், ராகு, கேது என நம்மிடம் தோஷங்களுக்கு பஞ்சமே கிடையாது.

ஆனால் அவற்றை தீர்ப்பதற்கான பரிகாரங்களும் நிறைய இருந்தாலும் தோஷம் தீர்ந்த பாடில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த கட்டுரை ஒரு மிகச் சிறந்த தீர்வாக அமையும்.

தோஷங்கள்
தோஷங்களில் ஏராளமான வகைகள் உண்டு. மேற்சொன்னபடி, சனி, ராகு, கேது, செவ்வாய், கால சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், முன்னோர்களால் ஏற்பட்ட தோஷம், பித்ரு தோஷம் என்று அடுக்கிக் கொண்ட போகலாம். இதுபோன்று இன்னும் நிறைய தோஷங்கள் இருக்கின்றன.

தீர்வு
இந்த தோஷங்களில் ஏதாவது ஒன்று ஒவ்வொருவருக்கும் இருக்கத்தான் செய்கிறது. இந்த தோஷங்கள் உண்டாக 9 கிரகங்களுடைய நகர்வுகளும் இட மாற்றங்களும் தான் காரணமாக இருக்கின்றன. இவற்றை சரிசெய்ய ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பரிகாரங்கள் சொல்வதுண்டு. அதில் எல்லோருக்கும் தோஷங்கள் நிவர்த்தி ஆவதில்லை. சிலரோ ஏறி இறங்காத கோவிலே இருக்காது. செய்யாத பரிகாரங்களும் இருக்காது. யார் என்ன பரிகாரங்கள் சொன்னாலும் அதை செய்து பார்த்திருப்பார்கள். ஆனால் இவை எல்லா வகையான தோஷங்களுக்கும் ஒரே ஒரு பரிகாரத்தின் மூலமாக தீர்க்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியவில்லை. அதை முயற்சி செய்யுங்கள். எந்த மாதிரியான தோஷங்களும் நீங்கிவிடும்.

குருப்பெயர்ச்சி
இந்த வருடம் குருப்பெயர்ச்சி நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த குருப்பெயர்ச்சிக்குப் பினபாவது நம்முடைய நேரம் நல்ல நேரமாக வேண்டும். நினைத்தது நடக்க வேண்டும். தொழில் செழிக்க வேண்டும். கஷ்டங்கள் விலக வேண்டும். பண வரவு உண்டாகும். இப்படி பல்வேறு எண்ணங்கள் நம் எல்லோருடைய மனதுக்குள்ளேயும் ஓடிக் கொண்டு தான் இருக்கும். ஆனால் ஜாதகத்தில் குருவினால் ஏதேனும் தோஷங்கள் இருந்தால், குரு பெயர்ச்சியினால் சில சோதனைகள் உணடாகும். அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய எளிமையான பரிகாரம் ஒன்று இருக்கிறது. அது என்ன தெரியுமா?

குரு தோஷம் நீங்க பரிகாரம்
நம்மில் ஒருவருடைய ஜாதகத்தினில் குருவினால் ஏதேனும் தோஷங்கள் இருந்தால், அதிலிருந்து விடுபடுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். அந்த தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு வியாழக்கிழமைகளில் குரு திசை மற்றும் குரு புது்தி காலங்கள் வருகின்ற பொழுது, கோவிலுக்குச் சென்று குரு பகவானுக்கு முல்லை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். பிரசாதமாக நைவேத்தியம் செய்வதற்கு தயிர் சாதம் படைத்து, குருவுக்கு கொண்டைக்கடலை மாலை அணிவிக்க வேண்டும். அதன்பின்பு குரு காயத்ரி மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்து கொண்டிருக்க, தோஷங்கள் நீங்கும்.

குரு காயத்ரி மந்திரமும் பலனும்
குரு நம்மைப் பார்த்தால் கோடி நன்மைகள் உண்டானும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். குருவினுடைய பார்வை நம்மீது பட்டாலே போதும், நம்முடைய வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெற்றுவிட முடியும் என்று சொல்வார்கள். இதற்கு நேர்மாறாக ஏதாவது ஒரு விதத்தில் குரு உங்கள் மீது பட்டாலும் பல இன்னல்கள் உண்டாகும். அதற்கு மிக வலிமை மிக்க ஆயுதம் தான் இந்த மந்திரம். இந்த மந்திரம் என்னவென்றால்,
ஓம் விருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்தோ குருஹ் ப்ரசோதயாத்
இந்த மந்திரத்தின் பொருள் என்னவென்றால், உங்களுடைய இடப்பக்கத்தில், கொடியை வைத்திருக்கின்ற குரு பகவான், உங்களுடைய அருள் கரங்களினால், அருளை வாரி வழங்கும் ப்ரகஸ்பதியே என்னுடைய வாழை்வினில் உள்ள தீமைகளை அகற்றிவிட்டு, நன்மைகளைத் தாருங்கள் என்பது தான் இதன் அர்த்தம். அதனால் இந்த மந்திரத்தை தினமும் 108 முறை இந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்யுங்கள்.

சுக்கிர தோஷம்
ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரனுடைய பார்வை சரியில்லை என்றால், சுக்கிர தோஷம் இருந்தால், அதிலிருந்து விடுபட வேண்டுமென்றால், வெள்ளிக்கிழமைகளில் வணங்கி, பூஜை நடத்த வேண்டும். சுக்கிர தோஷம் உள்ளவர்களுக்கு சுக்கிர திசை மற்றும் சுக்கிர புத்தி காலங்களில் விரதங்கள் இருக்க வேண்டும். பூஜையின் போது, வெண் தாமரை மலர்களால் பூஜை செய்து, நெய்யினால் சமைக்கப்பட்ட பலகாரம் அல்லது நெய் சாதம் ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து சுக்கிரனுக்குரிய காயத்ரி மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யுங்கள். சுக்கிர தோஷங்கள் நீங்கும்.

சுக்கிர காயத்ரி மந்திரம்
நான் கும்பிடாத கடவுளே இல்லை. ஆனால் என்னுடைய வாழ்க்கையில் துன்பங்கள் மட்டும் தான் வருகிறது என்று புலமபுவதைப் பார்த்திருப்போம். இதற்கு மிக முக்கியமான காரணம் ஜாதக தோஷம் தான். நம்முடைய ஜாதக மாற்றங்கள் என்பதே நவ கிரகங்களைப் பொருத்ததுதான். அப்படி சுக்கிரனால் பாதிக்கப்பட்ட காயத்ரி மந்திரம் இதுதான்.
ஓம் அச்வத்வஜாய வித்மஹே
தனூஊர் அஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ர ப்ரசோதயாத்
இதை தினமும் மனதுக்குள் பாராயணம் செய்தால் துன்பங்கள் விலகி ஓடும்.

சனி தோஷங்கள்
ஒருவருடைய ஜாதகத்தில் சனி பகவானால், இருக்கும் தோஷம் இருக்கிறதே அப்பப்பா பாடாகப் படுத்தி எடுத்தி விடும். சனி தோஷத்தில் பல விஷயங்கள் உண்டு. அஷ்டம சனி, ஏழரை சனி, ஜென்ம சனி என பல வகையுண்டு. சனி தோஷங்கள் இருப்பவர்களாக இருந்தால், சனிக்கழமை நாட்களில் சனி திசை மற்றும் சனி புத்தி காலங்களில் விரதம் இருக்க வேண்டும். சனிக்கிழமைகளில் கருஞ்குவளை மலர்களால் அர்ச்சனை செய்து, எள் சாதத்தை நைவேத்தியம் செய்து, சனி பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை 26 முறை பாராயணம் செய்ய வேண்டும். அதேபோல் காகத்திற்கு சனிக்கிழமைகளில் காகத்திற்கு சாதம் வைத்து வந்தால், சனி தோஷங்கள் நீங்கும்.

கேது தோஷங்கள்
ஒருவருடைய ஜாதகத்தில் தோஷங்கள் ஏதாவது இருந்தால், அதிலிருந்து விடுபடுவதற்கு நீங்கள் விரதம் இருக்க வேண்டிய நாள் திங்கட்கிழமை தான். திங்கட்கிழமை கேது திசை மற்றும் கேது புத்தி ஆகிய காலங்களில் விரதங்கள் இருக்க வேண்டும். கேதுவுக்கு பல வண்ணங்களில் பல வகை மலர்களைக் கொண்டு, அர்ச்சனைகள் செய்யலாம். கேதுவுக்கு எலுமிச்சை சாதத்தை நைவேத்தியமாகப் படைத்து, காயத்ரி மந்திரத்தை சொல்லி ஜபிக்க வேண்டும். 108 முறை தொடர்ந்து ஜெபிப்பதோடு, விநாயகப் பெருமானையும் வழிபட்டு வர, கேது தோஷம் நீங்க வேண்டும்.



Click it and Unblock the Notifications











