Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்க கையில இந்த பண ரேகைகள் இருக்கா-ன்னு கொஞ்சம் பாருங்களேன்...!
உங்களுக்கான செல்வத்தின் ரகசியம் ஏற்கனவே உங்கள் கைரேகைகளில் குறியிடப்பட்டுள்ளதாக கைரேகை ஜோதிடம் கூறுகிறது. அதாவது கைரேகை ஒருவரது நிதி நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை தெளிவாக சொல்லுமாம். உதாரணமாக, உங்கள் கைகளில் உள்ள நிதி ரேகை நீளமாக இருந்தால், உங்களிடம் செல்வமானது அதிகளவு தேங்குவதோடு, குவியவும் செய்யும். அதே சமயம் கையில் உள்ள ரேகை, ஒருவர் எவ்வளவு செலவு செய்வார் என்பதையும் கூறும் என்பதால், அதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

நீங்கள் எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும், சம்பாதிக்கும் பணத்திற்கு அதிகமாக செலவுகளை செய்பவராயின், அவர்களது நிதி நிலைமை எப்போதும் சிறப்பாக இருக்காது. ஆகவே நீங்கள் உங்களது நிதி நிலைமையைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இந்த கட்டுரையில் கையில் உள்ள ரேகை ஒருவரது நிதி நிலைமை குறித்து கூறும் சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அறிகுறி #1
படத்தில் காட்டியவாறு கையில் நடு விரலை நோக்கி நேராக ஒரு ரேகை சென்றால், அது ஒருவரது நிதி நிலைமையைப் பற்றி தான் சொல்கிறது என்று அர்த்தம். ஒருவரது கையில் உள்ள இந்த ரேகையின் அடிப்பகுதி மிகவும் ஆழமாக காணப்பட்டால், அவர் இளம் வயதிலேயே செல்வந்தராக இருப்பாராம். ஒருவேளை இந்த ரேகையின் மேல் பகுதி ஆழமாக இருந்தால், அவர்கள் வாழ்வின் பிற்காலத்தில் செல்வந்தராகும் வாய்ப்புள்ளதைக் குறிக்குமாம். மேலும் இந்த ரேகை ஒருவரது வாழ்க்கை குறித்தும் கூறுகிறதாம். அதில் அடிப்பகுதியில் இருந்து நடுவிரலை நோக்கி செல்லும் ரேகை மிகவும் ஆழமாகவே இருந்தால், அவர்களது வாழ்க்கை நிலையானதாகவும், லாபகரமானதாகவும் இருக்குமாம்.

அறிகுறி #2
உங்கள் கையில் இருக்கும் பெருவிரலுக்கு அடிப்பகுதியில் இருந்து ஆள்காட்டி விரலை நோக்கி ரேகை செல்கிறதா? அப்படியானால் உங்களிடம் பணம் சம்பாதிப்பதற்கான ஏராளமான அற்புத வழிகள் உங்கள் கைவசம் இருக்கிறதாம். இந்த ரேகை ஒருவர் உடனே செல்வந்தர் ஆகப் போவதையோ அல்லது வாழ்வின் எந்நேரத்திலும் செல்வந்தர் ஆகும் வாய்ப்புள்ளதையோ குறிக்காது. இருப்பினும், இந்த ரேகை, உங்களுக்கும் பணம் அதிகம் சம்பாதிப்பதற்கான தகுதி மற்றும் ஆற்றல் இருப்பதைக் குறிக்கிறது. எனவே நிதி நிலைமையில் வெற்றி அடைய நினைத்தால், முயற்சியைக் கைவிடாதீர்கள்.

அறிகுறி #3
ஒருவரது கையில் உள்ள ரேகைகளில் பெருவிரலுக்கு அடியில் இருந்து சுண்டு விரலின் அடிப்பகுதியை நோக்கி ரேகை செல்லுமாயின், அவர்களுக்கு குடும்பத்தில் இருந்து பரம்பரை சொத்து கட்டாயம் வரும் என்பதைக் குறிக்குமாம். இத்தகைய ரேகை மிகவும் நீளமாக இருந்தால், வாழ்க்கையை நடத்துவதற்கு போதுமான பணம் கிடைப்பதைக் குறிக்கும். ஒருவேளை இந்த ரேகை நீளமாகவும், ஆழமாகவும் இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு கிடைக்கும் பரம்பரை சொத்து வாழ்வில் உறுதுணையாக இருக்க முடியாதாம். முக்கியமாக இந்த வகையான ரேகையைக் காண்பது மிகவும் அரிது.

அறிகுறி #4
படத்தில் காட்டப்பட்டவாறு பெருவிரலின் அடிப்பகுதியில் இருந்து, நடுவிரலை நோக்கி ரேகை செல்லுமாயின், அவர்கள் சுய தொழிலில் சிறப்பானவர்களாக இருப்பர் என்பதைக் குறிக்குமாம். இந்த ரேகை மிகவும் ஆழமாக காணப்பட்டால், அவர்கள் செய்யும் தொழிலில் சிறப்பான வளர்ச்சியை தொடர்ச்சியாக காண்பர். மேலும் இந்த வகை ரேகையைக் கொண்டவர்கள் மற்றவர்களுடன் சிறப்பான தொடர்பை கொண்டிருப்பார்கள் மற்றும் சிறந்த மார்கெட்டிங் திறனைக் கொண்டவர்களாகவும் இருப்பர்.

அறிகுறி #5
ஒருவரது பெருவிரலின் அடிப்பகுதியில் நிறைய சிறு ரேகைகள் இருந்தால், அது உங்கள் வாழ்வில் எவ்வளவு பணப்புழக்கம் இருக்கும் என்பதைக் குறிக்கும். அதிகமான ரேகையை ஒருவர் கொண்டிருந்தால், அவர்கள் அதிகளவு செல்வம் கொண்டவர்களாக இருப்பர்.

அறிகுறி #6
உங்கள் உள்ளங்கையின் மேற்பரப்பும் ஒருவரது பண விஷயத்தைப் பற்றி வெளிப்படுத்துமாம். தட்டையான உள்ளங்கையைக் கொண்டவர்கள் கையில் பணம் எப்போதுமே தங்காது. வளைவான உள்ளங்கையைக் கொண்டவர்கள் கையில் பணம் அதிகம் சேருமாம். அதாவது ஒருவர் கையால் நீரை எடுக்கும் போது, உள்ளங்கையில் நீர் தேங்கினால், அவர்களது கையில் பணம் சிறப்பாக நிலைத்திருக்கும். வேண்டுமானால், நீங்களே உங்களை சோதித்துப் பாருங்கள்.



Click it and Unblock the Notifications