For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ரஷ்ய புரட்சிக்கு வித்திட்ட கோர சம்பவம் இது தான்!

  |

  அதிகார வர்க்கம் மக்களை அடக்கி ஆள நினைப்பதும் அவர்களுக்கு எதிராக புரட்சி வெடித்து போராட்டம் நடத்துவதும் வாடிக்கை. வரலாறுகளில் இடம்பிடித்த பல புரட்சியாளர்களின் பங்களிப்பினால் தான் நாம் இன்றைக்கு வாழ்கிற சொகுசான வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்று சொல்லிடலாம்.

  இந்த புரட்சி ஒன்றும் ஒரு நாளில் ஏற்பட்டதாக இருக்காது. சமூகத்தில் நடக்கிற அவலங்களை எதிர்த்து தொடர்ந்து போராடும் போராளிகளால் உந்தப்பட்டு, களத்தில் இறங்கி போராட்டத்தில் இறங்குவது தான் மக்களின் ஒரே ஆயுதம், அவர்களின் பலமும் கூட.

  தமிழக அளவில் சமீபத்திய மக்கள் புரட்சியாக உலகம் முழுவதும் புகழ்ப்பெற்றது ஜல்லிக்கட்டிற்காக மக்கள் நடத்திய போராட்டம். தொடர்ந்து தற்போது காவிரி பிரச்சனைக்கும் ஸ்டர்லைட் பிரச்சனைக்கும் தொடர்ந்து மக்கள் வீதியில் இறங்கியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தங்களது படிப்பிற்காக,சட்டத்திற்காக, வாழ்வாதாரத்திற்கு என ஒவ்வொன்றுக்கும் நாம் போராடியே உரிமையை வாங்க வேண்டியிருக்கிறது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  வரலாறு :

  வரலாறு :

  அப்படி நடக்கிற போராட்டங்களில் சில சமயங்களில் அசம்பாவிதங்களும் நடப்பதுண்டு, வரலாற்றில் முதன் முறையாக நிகழ்ந்த மிகப்பெரிய அமைதி ஊர்வலம், அதை ராணுவத்தினரின் துணை கொண்டு ஒடுக்க நினைத்தது அரசு. விளைவு, நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். ஆனால் அரசுத் தரப்பில் 96 பேர் வரை மட்டுமே இறந்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

  இந்த நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை நடைப்பெற்றதால் இந்த படுகொலை சம்பவத்தை ரத்த ஞாயிறு என்றே விவரிக்கிறார்கள்.

  Image Courtesy

  ஞாயிறு காலை :

  ஞாயிறு காலை :

  ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்கும் போர் நடந்து கொண்டிருந்த சமயம். நகரத்தில் வாழ்ந்த மேட்டுக் குடி மக்கள், பணியாற்றி மாதச்சம்பளம் வாங்கியவர்கள் தங்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுவதாகவும், வேலைக்குச் சென்று வர பாதுகாப்பு இல்லை அதை மேம்படுத்தவும் என்று வலியுறுத்தி ஜார்ஜ் கப்பூன் தலைமையில் அமைதி ஊர்வலத்தை ஜனவரி 22,1905 ஆம் ஆண்டு நடத்துகிறார்கள்.

  இரண்டாம் ட்சார் நிக்கோலஸிடம் அவர்களது கோரிக்கைகளை அடங்கிய பெட்டிஷன் கொடுப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  Image Courtesy

  பனியில் உறைந்த ரத்தம் :

  பனியில் உறைந்த ரத்தம் :

  நிக்கோலஸ் வீட்டினை நெருங்குகையில் ராணுவத்தினரை விட்டு கூட்டத்தை கலைக்கச் சொல்கிறார். முதலில் வாளால் மக்களை முடிந்த அளவு வெட்டி சாய்க்கிறார்கள். ஆனால் கூட்டம் குறையவேயில்லை, துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பிக்கிறார்கள்.

  இதனால் நாளாபுறமும் சிதறி ஓடியதாலும் அடிபட்டு ஆயிரகணக்கான மக்கள் உயிரிழக்கிறார்கள். அன்றைய ஞாயிற்றுக் கிழமை காலையில் பனி படந்து காணப்பட்ட நகரம் முழுவதும் ரத்தச் சகதியால் மிதந்தது.

  இந்த சம்பவம் தான் ரஷ்ய புரட்சிக்கு வித்திட்டது என்று சொல்லலாம்.

  Image Courtesy

  வேலை நிறுத்தம் :

  வேலை நிறுத்தம் :

  ரஷ்ய வரலாற்றிலேயே மிகப்பெரிய வேலை நிறுத்தமாக 1905 ஆம் ஆண்டு நடந்த இதனை சொல்கிறார்கள். செயின்ட் பீட்டஸ்பெர்க் சாலையில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்று திரள்கிறார்கள். அங்கிருந்து அரண்மனையை நோக்கி ஊர்வலமாக சென்று நமது கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் கடிதம் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்கள்.

  Image Courtesy

  அமைதியை சிதைத்த ராணுவம் :

  அமைதியை சிதைத்த ராணுவம் :

  மன்னரின் கட்டளைப் படி அரண்மனைக்கு முன்னாலேயே ராணுவத்தால் தடுக்கப்படுகிறார்கள். கோரிக்கையை வலியுறுத்தும் கடிதத்தை கொடுத்த பிறகே நாங்கள் செல்வோம் என்றவுடன், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. அது பலனளிக்காமல் போகவே வானை நோக்கி துப்பாக்கியினால் சுட்டு மிரட்டுகிறார். மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்படத்துவங்கிய அடுத்த கணம் மக்களை நோக்கி சுட ஆரம்பிக்கிறார்கள்.

  இந்த நேரத்தில் அரண்மனைக் காவலர்களும் இணைந்து வாளால் மக்களை வெட்டி வீழ்த்த ஆரம்பித்தனர்.

  Image Courtesy

  கணக்கு :

  கணக்கு :

  அரசாங்க கணக்குப் படி இந்த கோர சம்பவத்தில் 96 பேர் கொல்லப்பட்டதாகவும் 200 பேர் வரை காயம்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமடைந்ததாகவும் போராட்டக்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.

  இந்த சம்பவத்திற்கு பிறகு மக்கள் ராணுவத்தினர் மீது துளியளவும் நம்பிக்கை கொள்ளவில்லை.

  Image Courtesy

  மேக்ஸிம் கார்கி :

  மேக்ஸிம் கார்கி :

  1905 ஆம் ஆண்டு நடைப்பெற்ற இந்த ரத்த ஞாயிறு புரட்சியில் பங்கேற்றவர்களில் ஒருவர் மேக்ஸிம் கார்கி.இவர் அந்த போராட்டத்தில் ஈடுபட்ட சில குழுவினர்களுடன் இணைந்து செர்ஜி விட்டில் என்பவரை சந்திக்கிறார். அதனால் தான் ரத்த ஞாயிறு படுகொலையில் இருந்து மேக்ஸிம் கார்கி உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து மேக்ஸிம் கார்கி அரசாங்கத்திற்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டார்.

  Image Courtesy

   தப்பி பிழைத்தவர் :

  தப்பி பிழைத்தவர் :

  இந்த கோர நிகழ்வில் தப்பிப்பிழைத்தவர்களில் ஒருவர் ஜார்ஜ் கப்பூன். இவரைச் சுற்றி பாதுகாப்பு வளையமாக நின்றிருந்த நாற்பது பேரும் கொல்லப்பட்டார்கள். அகதியாக மேக்ஸிம் கார்கி வீட்டில் தஞ்சமடைந்திருந்தார்.

  ரத்த ஞாயிறு நிகழ்வு குறித்த கோர முகம் அவரை வாட்டி வதைத்தது. இங்கே கடவுள் இல்லை என்று சூளுடைத்தார். அரசாங்கம் தொடர்ந்து தேடுவதை அறிந்த அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். இருந்தும் அரசாங்க பணியாளர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

  Image Courtesy

  மன்னருக்கு எதிராக :

  மன்னருக்கு எதிராக :

  மக்கள் மத்தியில் மன்னருக்கு எதிராக எதிர்ப்பு குரல் எல்லாம் எழ வில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் மன்னருக்கு ஆதரவாக அவரைப் பாராட்டி சில பாடல்களை எல்லாம் பாடினார்கள். மன்னரின் ஆதரவாளர்களாகவே இருந்தார்கள், அவர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள். தங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு அதனை நிறைவேற்றுவார் என்று பெரிதும் எதிர்ப்பார்த்தார்கள்.

  ஆனால் நிலைமை தலைகீழானது, அந்த நேரத்தில் மன்னர் அரண்மனையில் இல்லை என்றும் ஒரு தரப்பு சொல்லிக் கொண்டிருந்தது.

  Image Courtesy

  நான்கு லட்சம் பேர் :

  நான்கு லட்சம் பேர் :

  இந்த கோர சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வினை ஏற்படுத்தியது. நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைப்பெற்றன. இதில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பங்கேற்றனர். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக ஸ்ட்ரைக் தொடர்ந்தது.

  ஆசிரியர், மருத்துவர், இன்ஜினியர்கள் என எல்லா துறையினரும் இதில் பங்கேற்றனர். பெரும்பளவு பொதுமக்களின் ஆதரவு பெருகியது.

  Image Courtesy

   இரண்டே வழி :

  இரண்டே வழி :

  இப்போது மன்னர் முன்னால் இரண்டே இரண்டு வழிகள் மட்டும் இருக்கிறது. ஒன்று படையைக் கொண்டு புரட்சியாளர்களை ஒடுக்குவது இரண்டாவது மக்கள் கேட்பதைக் கொடுப்பது. முதல் முயற்சி பெரும் அவமானத்தையும் சேதத்தையும் கொடுக்கும். முதலில் நிகழ்ந்த ராணுவத் தாக்குதலுக்குத் தான் இந்த புரட்சி மீண்டும் ராணுவத்தின் உதவியை கோரினால்?

  மன்னர் இரண்டாவது முடிவையே எடுத்தார். அதன் படி அக்டோபர் முப்பதாம் தேதி அறிக்கையை வெளியிடுகிறார். இதனைத் தான் அக்டோபர் அறிக்கை என்று வரலாற்றில் குறிப்பிடுகிறார்கள்.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Shocking Story About Bloody Sunday Massacre

  Shocking Story About Bloody Sunday Massacre
  Story first published: Tuesday, April 3, 2018, 12:13 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more