மகன்களே பெற்றோரை கொலை செய்த கொடூரம்!

Posted By:
Subscribe to Boldsky

ஒரு கொலை வழக்கு இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. அமெரிக்காவையே உலுக்கிய கொலை வழக்க, அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக அப்படியொரு சம்பவம் நடந்திருப்பதாக வர்ணிக்கிறார்கள்.

இரண்டு இளைஞர்கள் வசதி வாய்ப்புக்கெல்லாம் பஞ்சமில்லை இவர்களில் ஒருவன் சர்வதேச அளவிலான டென்னிஸ் போட்டிகளில் எல்லாம் பங்கேற்றிருக்கிறான். அண்ணன் தம்பியான இவர்கள் இருவரும் சேர்ந்து தங்களது பெற்றோரையே மிக கொடூரமாக கொலை செய்திருப்பதாகத்தான் வழக்கு!

பெற்றவரைக் கொல்வார்களா? அப்படி என்ன காரணம் இருக்க முடியும் என்று அமெரிக்காவே அன்றைக்கு டிவி முன்னால் உட்கார்ந்திருந்தது, இந்த வழக்கின் ஒவ்வொரு அசைவுமே செய்தியாக்கப்பட்டன. அப்போது தான் கேபிள் கனெக்‌ஷன் பரவலாக அனைத்து வீடுகளுக்கும் கொடுக்கப்பட்ட சமயம் என்பதால் அமெரிக்கா முழுவதும் மிக எளிதாக தொற்றிக் கொண்டது இந்த பரபரப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜோஸ் குடும்பம் :

ஜோஸ் குடும்பம் :

ஜோஸ் என்ரிகு மெனிண்டெஸ் என்பவர் க்யூபாவின் ஹவானா என்ற ஊரில் பிறந்து வளர்கிறார். பின் வேலை வாய்ப்புகளைத் தேடி அமெரிக்காவிற்கு பயணமாகிறார் அங்கே லூயிஸ் என்பவரை காதலித்து 1963 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்கிறார்.

தொடர்ந்து தன்னை பொருளாதார அடிப்படையில் நிலை நிறுத்திக் கொள்ள நியூ யார்க் நகரத்திற்கு மாறுகிறார்கள். சினிமா, கார்ப்ரேட் என்று பல துறைகளில் புகுந்து வருகிறார் ஜோஸ்.

Image Courtesy

குழந்தைகள் :

குழந்தைகள் :

பிஸ்னஸ் ஓஹோ என்று வளருகிறது. இந்நிலையில் 1968 ஆம் ஆண்டு ஜோசப் லைல் என்ற முதல் மகன் பிறக்கிறான். அடுத்த மூன்றாண்டுகளில் ஜோசப்பின் தம்பி எரிக் பிறக்கிறான்.

அளவான குடும்பம் நிறைவான வாழ்க்கை என்று சென்று கொண்டிருக்கிறது. குழந்தைகளின் கல்வி எல்லாம் நியூ ஜெர்சியில் தான்.

Image Courtesy

அப்பாவின் கனவு :

அப்பாவின் கனவு :

ஜோஸ் தன் குழந்தைகள் மீதான கனவை நம்பிக்கையை அளவுக்கு அதிகமாக வைத்திருந்தார். மகன்கள் எப்போது முன்னணியில் இருக்கவேண்டும் என்பதையே அவர் விரும்பினார். அது கல்வியாக இருந்தாலும் சரி, விளையாட்டாக இருந்தாலும் சரி.

சராசரியாக ஒவ்வொரு பெற்றோரும் இப்படித்தானே நினைக்கிறார்கள்.

Image Courtesy

மேற்படிப்பு :

மேற்படிப்பு :

குழந்தைகளின் மேற்படிப்பிற்காக கலிஃபோர்னியாவிற்கு மாறினார்கள்.பள்ளியில் இருவருமே சராசரி மாணவர்களாகத்தான் இருந்தார்கள். இதனால் தந்தைக்கு சிறிது சங்கடம்,ஆனால் இருவருமே டென்னிஸ் விளையாட்டில் பின்னிபெடலெடுத்தார்கள்.

Image Courtesy

ஆரம்ப புள்ளி :

ஆரம்ப புள்ளி :

மூத்த மகன் ஜோசப் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இணைகிறார். அவருக்கு கல்வியில் ஆர்வமில்லை, தொடர்ந்து கல்லூரியில் பல தொந்தரவுகளை சந்திக்கிறார்.

இதே நேரத்தில் எரிக் நாவல்கள் எழுதுவதில் ஆர்வத்தை காட்டுகிறார். பல கதைகளை எழுதி திரைக்கதை எழுதும் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். அப்படி அவர் எழுதிய ஒரு கதை தான் மகனொருவன் பெற்றோரை பணத்திற்காக கொலை செய்வது.

Image Courtesy

கொன்றுவிடலாமா தம்பி ? :

கொன்றுவிடலாமா தம்பி ? :

தம்பியின் கதையை அண்ணன் படிக்கிறான், ஏற்கனவே கல்லூரியில் இருக்கிற சிக்கல்கள் தேர்வு முடிந்த விபரங்களை தந்தை கேட்டால் என்ன சொல்வது எப்போதும் விருப்பமில்லாததையே செய் செய் என்று வர்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட வாழ்க்கை தேவையா? அதை விட நம் வயது பையன்களைப் போல செலவு செய்யவும் அனுமதிப்பதில்லை இதனால் நண்பர்கள் மத்தியில் அவமானம் தான் மிஞ்சுகிறது. இருவரும் மாறி மாறி பெற்றோர் மீது புகார் சொல்கிறார்கள்.

அண்ணன் யோசனையை முன் வைக்கிறான். திட்டம் தீட்டுகிறார்கள்.

Image Courtesy

கொலை :

கொலை :

முதல் நாள் குடும்பத்துடன் மீன் பிடிக்கச் செல்கிறார் ஜோஸ் அங்கேயே நீரில் மூழ்கடித்து கொல்ல நினைக்கிறார்கள் ஆனால் அது சாத்தியப்படவில்லை. அதனால் மறு நாளைக்கு கொலையை தள்ளி வைத்திருந்தார்கள். ஆகஸ்ட் 20,1989 ஆம் ஆண்டு.

ஜோஸும் அவரது மனைவி லூயிஸும் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மகன்கள் இருவரும் வெளியில் சென்று விட்டார்கள். திடீரென்று இரவு பத்து மணியிருக்கும், முகமுடி அணிந்திருந்த நபர் உள்ளே நுழைகிறான்.

Image Courtesy

குண்டுகள் வெடித்தது :

குண்டுகள் வெடித்தது :

ஜோஸ் பதட்டத்துடன் கையை உயரத்தூக்குகிறார். லூயிஸ் திருடன் பணத்தையும் நகையையும் கொள்ளையடிக்கத்தான் வந்திருப்பான் என்று யூகித்து கழுத்தில் இருந்ததை கழற்றுகிறார் .

அதற்குள், முகமுடி அணிந்து வந்தவன் துப்பாக்கியை அழுத்த ஆரம்பிக்கிறான் ஜோஷும் லூயிஸும் ரத்த வெள்ளத்தில் அங்கேயே இறந்தார்கள்.

Image Courtesy

கொள்ளையன் :

கொள்ளையன் :

இரவு 11 மணிக்கு போலீஸ் நிலையத்திற்கு மூத்த மகன் ஜோசப் போன் செய்கிறான். நான் தம்பியும் தியேட்டருக்கு சென்றிருந்தோம். இரவு வீடு திரும்பி இப்போது தான் வீட்டிற்குள் நுழைகிறோம் பார்த்தால் அம்மாவையும் அப்பாவையும் யாரோ கொலை செய்திருக்கிறார்கள் என்று பதட்டத்துடன் சொல்கிறான்.

போலீஸ் விரைகிறது. ஒன்று பணத்தை கொள்ளையடிக்க இப்படி செய்திருக்க வேண்டும், பணம் நகை எதுவுமே திருட்டு போகவில்லை அப்படியானால் முன்விரோதம் ஏதும் காரணமா என்று விசாரிக்கிறார்கள். ஆனால் அப்படியெதுவும் காரணமில்லை என்று தெரியவருகிறது.

Image Courtesy

திடீர் பணக்காரர்கள் :

திடீர் பணக்காரர்கள் :

பெற்றோர் இறந்த பின்பு இரண்டு மகன்களும் திடீர் கோடீஸ்வரர்களாகத் தான் வலம் வந்தார்கள். நகரத்தில் மிக விலை உயர்ந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு வீட்டை மாற்றினார்கள்.

விலையுயர்ந்த கார்கள் தனித்தனியாக வாங்குகிறார்கள். எரிக் தனக்கு டென்னிஸ் கோச்சிங் அளிக்க சிறப்பு பயிற்சியாளரை நியமித்துக் கொள்கிறார். தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் எல்லாம் பங்கேற்க ஆரம்பிக்கிறார்

பெற்றோர் இறந்த ஆறு மாதங்களில் இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டாலர் வரை செலவு செய்திருக்கிறார்கள்.

Image Courtesy

 ஃபைல் க்ளோஸ் :

ஃபைல் க்ளோஸ் :

கொலையை இதுவரை யாருமே கண்டுபிடிக்கவில்லை, துப்பு துலங்காததால் போலீஸும் இந்த கேஸை க்ளோஸ் செய்துவிடலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது போலீஸ் நிலையத்திற்கு ஒரு பெண்மணி வருகிறார் ஜோஸ் மற்றும் லூயிஸ் கொலை வழக்கு தொடர்பாக உங்களிடம் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என்கிறார்.

வழக்கமாக ஏதேனும் யூகித்து சொல்லக்கூடியதாக இருக்கும் என்று நினைத்தபடி சொல்லுங்கள் என்கிறார் அந்த அதிகாரி...

அந்தப் பெண் சொன்னதைக் கேட்டு அடுத்த சில வினாடிகள் போலீஸ் நிலையமே அதிர்ந்தது.

Image Courtesy

கொலைகார மகன்கள் :

கொலைகார மகன்கள் :

ஆம், நான் உறுதியாக சொல்கிறேன், ஜோஸ் மற்றும் லூயிஸை கொலை செய்தது அவருடைய மகன்கள் தான். பெற்றோரின் இன்ஸூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்திருக்கிறார்கள். கடந்த ஆறு மாதத்தில் இவ்வளவு தொகையை செலவு செய்திருக்கிறார்கள் என்று யாரும் யோசிக்காத கோணத்திலிருந்து குற்றவாளியை அடையாளம் காட்டுகிறார் அந்தப் பெண்.

Image Courtesy

எப்படித் தெரியும்? :

எப்படித் தெரியும்? :

இதை எப்படி ஊர்ஜிதப்படுத்துவது என்று நினைத்த போலீஸ் அதிகாரிகள் உங்களுக்கு எப்படித் தெரியும் என கேட்கிறார்கள்.

என் கணவர் ஜெரோம் ஓஹில். ஒரு மனநல மருத்துவர். இரண்டு சகோதர்களுமே என் கணவரிடம் வந்து தங்கள் செய்த குற்றத்தை சொல்லி இதனால் மிகுந்த மன அழுத்தத்துடன் இருப்பதாகவும் அதனால் தங்களுக்கு உரிய சிகிச்சையளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

Image Courtesy

கைது :

கைது :

போலீஸ் விசாரிக்கிறது, அந்த பெண்மணி சொன்னது சரியென்று தெரிந்த பிறகு மகன்கள் தான் கொலைக் குற்றவாளிகள் என்று தெரிந்து போலீஸ் அவர்களை கைது செய்கிறது.

போலீஸ் கைது செய்ய வருகிறது என்பதை அறிந்த ஜோசப் வேறு நாட்டிற்கு தப்பிக்க நினைக்கிறார் ஆனால் போலீஸ் பிடியில் சிக்கிவிட்டார். அண்ணனை கைது செய்யும் போது தம்பி எரிக் இஸ்ரேலில் டென்னிஸ் டோர்னமெண்ட் விளையாடிக் கொண்டிருக்கிறார். விஷயம் தெரிவிக்கப்பட்டது மூன்று நாட்கள் கழித்து விமான நிலைய போலீஸிடம் சரண் அடைகிறார் எரிக்.

Image Courtesy

ட்ரயல் :

ட்ரயல் :

விஷயம் மெல்ல மெல்ல வெளி உலகத்தினருக்கு தெரிய வருகிறது. என்ன காரணத்திற்காக கொலை செய்திருப்பார்கள்? பெற்றோரையே கொலை செய்யத் துணிந்துவிட்டார்கள்? பணத்திற்காக இப்படியா? என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேச ஆரம்பித்தார்கள்.

பல கட்டங்களில் விசாரணை நடக்கிறது.

Image Courtesy

காரணம் :

காரணம் :

ஜோஸ் மற்றும் லூயிஸ் தம்பதிகளுக்கு பதினான்கு மில்லியன் டாலர் சொத்துக்கள் இருக்கின்றன அதோடு இன்ஸூரன்ஸ் பணமும் இருக்கிறது, அதனை கைப்பற்ற நினைத்தே மகன்களே இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றது போலீஸ் தரப்பு.

ஜோசப் மற்றும் எரிக் சார்பாக வாதிட்ட லெஸ்லி அப்ராம்சன் என்ற வழக்கறிஞர் ஜோஸ் மிகவும் கொடூரமானவர் தன்னுடைய இரண்டு மகன்களையும் குழந்தை என்று கூட பாராமல் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இது தெரிந்தும் லூயிஸ் தட்டி கேட்கவில்லை அதோடு மகன்களை அடித்து கொடுமைபடுத்தியிருக்கிறார் இதிலிருந்து தப்பிக்கவே அவர்கள் பெற்றோரை கொலை செய்தார்கள்.மற்றபடி பணத்திற்காக எல்லாம் கொலை நடக்கவில்லை என்று வாதிட்டார்.

தீர்ப்பு :

தீர்ப்பு :

பல கட்டங்களாக விசாரணை நடக்கிறது, நீதிபதிகள் மாறுகிறார்கள், மக்கள் மத்தியில் இந்த வழக்கு உயிர்ப்புடனே இருக்கிறது. சுமார் ஒரு வருடம் கழித்து எரிக் பொதுவெளியில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.

ஜோஸ் என் அப்பா அல்ல அவன் ஒரு கொலைகாரன். அவனை நாங்கள் கொல்லவில்லை என்றால் அவன் எங்களை கொன்றிருப்பான் என்கிறான். ஆனால் சாட்சிகளின் அடிப்படையிலும் மருத்துவ அறிக்கையின் படியும் மகன்களே கொலைக்குற்றவாளிகள் என்பது நிரூபணமாகிறது.

Image Courtesy

தண்டனை :

தண்டனை :

ஜூலை 2, 1996 இவர்களது இறுதித்தீர்ப்பு வாசிக்கப்படுகிறது. ஜோசப் மற்றும் எரிக் இருவருக்குமே வாழ்நாள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது. அதோடு பரோலில் வெளிவரமுடியாத அளவிற்கு கடுமையாக்கப்படுகிறது. ஆனால் தொடர்ந்து இருவரும் மேல் முறையீடு செய்கிறார்கள்.

1998 ஆம் ஆண்டு கலீபோர்னியா கோர்டில் தள்ளுபடி செய்யப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்படுகிறது 2003 ஆம் ஆண்டு ஹேபியஸ் கார்ப்பஸ் மனு தாக்கல் செய்யப்படுகிறது 2005ல் இன்னொரு முறை என தொடர்ந்து போராடுகிறார்கள்.

Image Courtesy

2017

2017

ஆனால் சட்டம் தன் நிலையிலிருந்து சிறிது கூட அவர்கள் பக்கம் திரும்பவேயில்லை. கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் சிறையிலேயே கழித்திருக்கிறார்கள் ஜோசப் மற்றும் எரிக்.

எரிக் 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஜோசப் 1996 ஆம் ஆண்டு ஒரு முறையும் 2003 ஆம் ஆண்டு என இரண்டு முறை திருமணம் செய்கிறார். கடிதங்கள் பரிமாறிக் கொள்வது செஸ் விளையாடுவது என இருவரும் பொழுதை கழிக்கிறார்கள். இவர்களின் வழக்கு பின்னணி குறித்து திரைப்படம் ஒன்றும் எடுக்கப்பட்டிருக்கிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Shocking Real Life Story About Sons Who killed their parents

Shocking Real Life Story About Sons Who killed their parents
Story first published: Friday, March 30, 2018, 16:08 [IST]