For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டைட்டானிக் கப்பல் விபத்திலிருந்து மீண்டவர்கள் பகிர்ந்த சில அதிர்ச்சித் தகவல்கள்!

டைட்டானிக் கப்பல் விபத்திலிருந்து மீண்டவர்கள் பகிர்ந்து கொண்ட சில பயங்கரமான அனுபவங்கள்

|

Recommended Video

டைட்டானிக் கப்பலிலிருந்து மீண்டவர்களின் உணர்வுப் பகிர்வுகள்..வீடியோ

ஆர் எம் எஸ் டைட்டானிக் கப்பல் பிரிட்டிஷ் பயணிகளை ஏற்றிக் கொண்டு வடக்கு அட்லாண்டிக் கடலில் பயணித்துக் கொண்டிருந்தது1912 ஆம் ஆண்டு ஏப்ரல் பதினைந்தாம் தேதி அன்று அதிகாலை கடலில் மூழ்கியது.

ஐஸ் பாறையில் மோதி விபத்திற்க்குள்ளானது என்று சொல்லப்பட்டது. அந்த காலத்தில் பொதுமக்களை ஏற்றிக் கொண்டு பயணித்த மிகப்பெரிய கப்பல் டைட்டானிக் மட்டும் தான். கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்திருந்தார்கள். அதோடு கப்பல் பயணம் என்பது மிக சாதரணம சாமானிய மக்களுக்கு எல்லாம் வாய்த்திடாது. உலகத்திலேயே மிகப்பெரும் பணக்காரார்களாக இருந்த செல்வந்தர்கள் தான் பெரும்பாலும் அந்த கப்பலில் இருந்திருக்கிறார்கள்.

சொகுசு வாழ்க்கைக்காகவும், வியாபாரத்திற்காகவும் தான் அந்தக் கப்பலில் அமெரிக்காவிற்கு பயணப்பட்டிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கப்பலில் :

கப்பலில் :

கப்பலில் பயணித்த பெரும் செல்வந்தர்களுக்கு ஃபர்ஸ்ட் க்ளாஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த முதல் வகுப்பில் என்னென்ன வசதிகள் இருந்தது தெரியுமா? ஜிம், ஸ்குவாஷ் கோர்ட்,டர்கிஷ் பாத், ஸ்டீம் ரூம், மசாஜ் ரூம், நீச்சல் குளம், நூலகம்,புகைப்பிடிக்கும் அறை,உயர் தர ரெஸ்ட்டாரண்ட் என சகல வசதிகளும் இருந்திருக்கிறது.

Image Courtesy

பாதுகாப்பு :

பாதுகாப்பு :

இவ்வளவு வசதிகள் செய்த கப்பலில் பாதுகாப்பிற்காக என்று எதுவும் செய்யாமலா விட்டிருப்பார்கள். பாதுகாப்பு அம்சங்களும் நிறையவே நிறைந்திருந்தன. வாட்டர் டைட் கம்பார்ட்மெண்ட்,ரிமோட் ஆக்டிவேட்டட் டோர் என எல்லாமே இருந்திருக்கிறது. ஆனால் மக்களை கப்பலிலிருந்து மீட்டு கரை சேர்க்க வேண்டிய லைஃப் போட் எனப்படுகிற படகுள் வெறும் ஆயிரத்திற்குள்ளாக தான் இருந்திருக்கிறது.

மொத்தமாக கப்பலில் இருந்த மக்களின் மூன்றில் ஒரு பங்கு தான் இது.

Image Courtesy

அந்த இரவு :

அந்த இரவு :

ஏப்ரல் பதினான்காம் தேதி இரவு 11.40 மணிக்கு டைட்டானிக் கப்பல் பெரிய ஐஸ் பாறையில் மோதி விடுகிறது. கப்பலின் உள்பாகும் பெரும் சேதத்திற்கு உள்ளாகிறது. கப்பலில் மொத்தம் பதினாறு வாட்டர் டைட் கம்பார்ட்மெண்ட் இருந்திருக்கிறது அவற்றில் ஐந்து கம்பார்ட்மெண்ட் திறந்து கொள்ள கப்பலுக்குள் தண்ணீர் வர ஆரம்பித்திருக்கிறது.

Image Courtesy

மணி 2.20 :

மணி 2.20 :

கொஞ்ச கொஞ்சமாக கப்பல் மூழ்க ஆரம்பிக்கிறது சரியாக 2.20 மணிக்கு கப்பல் முக்கால் வாசி மூழ்கிவிட்டிருந்தது. கப்பல் விபத்திற்குள்ளாகி மூழ்கும் தகவல் கரையில் இருப்பவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது அங்கிருந்து ஆர் எம் எஸ் கார்பதியா என்ற கப்பல் இரண்டு மணி நேரத்தில் வந்து உயிருக்கு போராடிய 700க்கும் மேற்பட்டவர்களை மீட்டுச் சென்றது.

மீட்கப்பட்டவர்களுக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையில் மிகப்பெரிய பாசப்போராட்டம் அன்றைக்கு நிகழ்ந்தது. மிகப்பெரிய விபத்திலிருந்து தப்பித்து உயிர் பிழைத்து வந்தவர்கள் அன்றைக்கு என்ன பகிர்ந்து கொண்டார்கள் அவர்களின் அனுபவம் எப்படியிருந்தது என்று பார்க்கலாம்.

Image Courtesy

போ... :

போ... :

தீடிரென்று எல்லாரும் பரபரப்பாக ஓட ஆரம்பித்தார்கள். அம்மாவிற்கு ஏதோ தவறாக பட்டது முன்னெச்சரிக்கையாக அம்மா போ... போ... என்றே கத்திக் கொண்டேயிருந்தார். அம்மாவின் முகம் இறுக்கமாகிக் கொண்டே போனது, அவர் நடக்கப்போகும் ஆபத்தை முன் கூட்டியே உணர்ந்திருந்தார். ஆனாலும் கடவுள் நம்மை காப்பார் என்று முழுவதுமாக நம்பினார்.

Image Courtesy

#6

#6

டைட்டானிக் கப்பலில் பயணித்த லூசியன் ஸ்மித் தன்னுடைய மனைவி எலோய்ஸ்வுடன் தேனிலவிற்கு சென்றிருக்கிறார். அப்போது அவரது மனைவி கர்ப்பமாக இருந்திருக்கிறார். கப்பல் விபத்தில் சிக்கி ஸ்மித் உயிரிழக்க, எலோய்ஸ் காப்பாற்றப்பட்டார். மருத்துவமனையில் குழந்தையை பிரசவித்தார். அந்த குழந்தை தான் இது.

கப்பல் விபத்தின் போது காணமல் போன ஸ்மித்தின் உடல் இன்று வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

Image Courtesy

#7

#7

இந்த விபத்தில் ஏராளமானோர் தங்களது உறவுகளை இழந்தார்கள் அவர்களின் ஒரு சாட்சி தான் இந்த குழந்தைகள். விபத்தின் போது இன்னும் விவரமறியாமல் மழலை மொழியில் பேசக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். பெற்றோர் இருவரும் உயிரிழக்க குழந்தைகளை மட்டும் மீட்டிருக்கிறார்கள்.

கரையில் இருந்த உறவினர்களோ குழந்தைகளும் இறந்திருக்கும் என்று நினைத்து விட்டிற்குக்கிறார்கள். அதன் பிறகு சில காலங்களுக்கு பிறகே குழந்தைகள் உயிருடன் இருப்பது தெரிந்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஒரு குழந்தை மைக்கேல் நான்கு வயது அதற்கு இளையவராக இருப்பது நவரட்டில் இரண்டு வயது.

Image Courtesy

#8

#8

கப்பல் விபத்திலிருந்து மீண்டு வந்தவர்களை அப்போதிருந்த மக்கள் ஒரு ஹீரோவாகத்தான் பார்த்தார்கள். ஏதோ மிகப்பெரிய சாகசம் செய்து விட்டு வந்தவர்கள், வரலாற்று நாயகர்கள் போலவே நடத்தப்பட்டார்கள்.

கப்பல் விபத்திலிருந்து உயிர் பிழைத்து வந்தவரிடத்தில் பெண்ணொருவர் ஆட்டோகிராப் வாங்கும் காட்சி.

Image Courtesy

#9

#9

டைட்டானிக் கப்பலில் பயணித்து, விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி அதிலிருந்து மீண்ட பாக்கியவான்கள் இவர்கள். இவர்கள் நால்வருக்குமே மகக்ள் அப்போது மிகுந்த உற்சாகமான வரவேற்பினை அளித்திருந்தார்கள்.

Image Courtesy

#10

#10

மிகப்பெரிய இந்த விபத்திற்கு பிறகு விபத்திற்கான காரணங்களை கண்டுபிடிக்க விசாரணை ஆணையத்தினை அமைத்திருந்தார்கள். விபத்திலிருந்து மீண்டவர்களிடத்தில் தொடர்ந்து விசாரணை நடந்தது.

இங்கே வரிசையில் நிற்பவர்கள் எல்லாம் டைட்டானிக் கப்பல் விபத்திலிருந்து மீண்டவர்கள் விசாரணை ஆணையத்திடம் தகவல் அளிப்பதற்காக வரிசையில் காத்திருக்கிறார்கள்.

Image Courtesy

#11

#11

ஃபெட்ரீக் ஃப்ளீட். பிரிட்டனைச் சேர்ந்த கப்பல் ஓட்டுநர் இவர் தான் இவ்வளவு பெரிய விபத்திற்கு காரணமான அந்த ஐஸ் மலையை முதன் முதலில் பார்த்து எச்சரித்திருக்கிறார்.

டைட்டானிக் கப்பல் சென்று கொண்டிருக்கும் வழித்தடத்தில் இவ்வளவு பெரிய மலையா என அதிர்ந்து துரிதமாக செயல்பட்டாலும் நிலைமை கை மீறிப்போய்விட்டது என்னவோ பெரும் சோகம்.

Image Courtesy

#12

#12

டைட்டானிக் கப்பல் விபத்திலிருந்து மீட்கப்பட்டவர்களை சவுதேம்டவுன் என்ற இடத்தில் ரயிலில் அழைத்து வரப்பட்டார்கள். அவர்களை பார்க்க பெரும் ஆவலுடன் காத்திருந்த உறவினர்களின் புகைப்படம் தான் இது.

Image Courtesy

#13

#13

ரயில் நிலையம் அழைத்து வரும் வரை காத்திருக்க முடியாது எனச் சொல்லி கப்பல் வருகின்ற துறைமுகத்திற்கே சென்று குழுமிய உறவினர்கள். அவர்களின் மனப்போராட்டங்களை நிச்சயமாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

Image Courtesy

#14

#14

இன்றைக்கு இருப்பது போல செய்தி சேனல்களின் லைவ்வோ அல்லது சமூக ஊடகங்களோ அப்போது இருக்கவில்லை. பெரும்பாலும் செய்தித்தாள்களையே நம்பியிருந்தார்கள். மிகப்பெரிய விபத்தாக இது கருதப்பட்டதால் நிலமையென்ன என்பதறிய மக்கள் செய்தி அலுவலக வாசல்களில் காத்துக்கிடந்தார்கள்.

Image Courtesy

#15

#15

டைட்டானிக் கப்பல் மூழ்கி கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை கர்பாத்தியா என்ற கப்பல் சென்று மீட்டது. பெரும் போராட்டத்திற்கு பிறகு உயிர் போய் பிழைத்து கர்பாத்தியா கப்பலில் வந்து கொண்டிருக்கும் மக்கள்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Shocking News From Titanic Survivors

Shocking News From Titanic Survivors
Story first published: Friday, March 2, 2018, 13:37 [IST]
Desktop Bottom Promotion