ஆரம்ப காலங்களில் பின்பற்றப்பட்ட கொடூர சடங்கு முறைகள்!

Posted By:
Subscribe to Boldsky

மனிதன் தோன்றிய அந்த காலத்திலிருந்தே பல்வேறு நம்பிக்கைகள் சார்ந்து இருந்திருக்கிறான். அவனது பழக்க வழக்கங்கள் பல விஷயங்களை உணர்த்தியிருக்கின்றன. அதோடு சில நம்பிக்கைகளும் அவனுள் ஏற்பட்டது. அப்படி தோன்றிய நம்பிக்கைகளில் ஒன்று தான் கடவுள் நம்பிக்கை.

கடவுளுக்காக உயிரையும் கொடுக்கலாம், கடவுளுக்காக உயிரயும் எடுக்கலாம் என்ற ரீதியில் அவனுடைய போக்கு இருந்திருக்கிறது. இந்த காலத்தில் மிருகப்பலி கொடுக்கப்படுவதையே தவறான செயல் என்று விமர்சனம் எழுந்து கொண்டிருக்கும் போது ஆரம்ப காலகட்டத்தில் மனிதனையே பலி கொடுத்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உயிருடன் எரிக்கப்படுவான் :

உயிருடன் எரிக்கப்படுவான் :

Image Courtesy :

ஆரம்ப காலத்தில் இப்படியொரு நடைமுறை இருந்திருக்கிறது. நெருப்பினை கடவுளாக பார்த்திருக்கிறார்கள். அதனால் கடவுளுடன் ஐக்கியமாகிறேன் என்று தாங்களாகவே முன் வந்து நெருப்பில் விழுந்தவர்கள் உண்டு. ஆனால், முதியவர்களை வலுக்கட்டாயமாக நெருப்பில் போடுவதும் நடந்திருக்கிறது. அப்படி போடும் போது அவர்களை மட்டும் போடாமல் உடல் இரண்டு மூன்று பணியாட்களையும் சேர்த்தே எரித்திருக்கிறார்கள்.

இறந்த பின்பும் அவருக்கு சேவை செய்யத்தான் இவர்களாம். சிலர் நெருப்பில் விழுவதற்கு முன்னால் மயக்க மருந்துகளை எடுத்திருக்கிறார்கள்.

அரசனுக்கு எங்கள் தலை :

அரசனுக்கு எங்கள் தலை :

Image Courtesy :

இப்போதிருக்கும் ஆப்ரிகாவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் டஹோமே என்ற இடத்தில் இந்த வழக்கம் இருக்கிறது. அங்கே மிகப்பெரிய திருவிழாவே நடக்குமாம்.

அதோடு அங்கிருக்கும் அரசர்கள் மற்றும் செல்வந்தர்களிடையே யார் அதிக மக்களை கொள்கிறார்கள் என்ற போட்டியே இருக்குமாம்.

அடிமைகள் ;

அடிமைகள் ;

Image Courtesy :

இதற்காகவென்றே அடிமைகளை பிடித்து வருவார்களாம், அதோடு போரில் பிடிக்கப்பட்டு வந்தவர்கள், குற்றவாளி என கைது செய்யப்பட்டவர்கள் என வகை தொகையில்லாமல் வெட்டிச் சாய்த்திருக்கிறார்கள்.

இப்படிச் செய்வதினால் அரசாளும் மன்னருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று நம்பியிருக்கிறார்கள்.

கர்சீஃப் :

கர்சீஃப் :

முதலில் அவர்களிடமும் காளியின் மகிமையைச் சொல்லி புரியவைப்பார்கள். பல நேரங்களில் அவர்களே ஒப்புக் கொள்வார்களாம். முடியாத பட்சத்தில் கர்சீஃப் அளவுள்ள துணியைக் கொண்டு அவரது மூக்கு மற்று வாயை அழுத்தி கொன்று விடுவார்களாம்.

பின்னர் அவர்களிடமிருந்த உடைமைகளை எடுத்துக் கொண்டு உடலை எரித்து விட்டு இவர்களும் தப்பி விடுவார்களாம்.

மலையின் முகட்டிலிருந்து :

மலையின் முகட்டிலிருந்து :

Image Courtesy :

மாயன் நாகரீகத்தில் வாழ்ந்த மக்கள் பல்வேறு நம்பிக்கைகளை கொண்டிருந்தார்கள். அவர்களின் நம்பிக்கைகளின் படி புதைக்குழிக்கு மனிதர்களை அனுப்பி வைத்தால் கடவுள் நம்மை சந்தோசமாக வாழ விடுவார் என்று நினைத்தார்கள்.

அதனால் தங்களுடன் வாழ்ந்த மக்களையே எதேதோ காரணங்களைச் சொல்லி மலையின் முகட்டிலிருந்து தள்ளிவிட்டார்கள்.

கீழ் உலகம் :

கீழ் உலகம் :

Image Courtesy :

மேலும் அவர்களுக்கு இன்னொரு நம்பிக்கையும் இருந்தது. இப்படி மலையிலிருந்து தள்ளிவிடுபவர்கள் இறப்பதில்லை, மாறாக கீழே இதே போன்று இன்னொரு உலகம் இருக்கிறது. அங்கே அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று நினைத்தார்கள்.

அந்தப் பகுதியில் இந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களில் பெரும்பான்மையான எலும்புகளில் முறிவு ஏற்பட்டதற்கான அடையாளம் இருக்கிறதாம்.

கட்டிடத்திற்கு :

கட்டிடத்திற்கு :

Image Courtesy :

இதுவரையில் கடவுளாக்காக,வாழ்நாள் அதிகரிக்க என்று மனிதனுக்காக மனிதன் கொல்லப்பட்டான் என்று பார்த்தோமல்லவா இங்கே பாருங்கள் கட்டிடம் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் மனிதன் பலி கொடுக்கப்பட்டிருக்கிறான்.

சீனாவின் ஆரம்ப காலத்தில் இந்த நடைமுறை இருந்திருக்கிறது.

இளவரசன் :

இளவரசன் :

Image Courtesy :

அரண்மனை,கோவில் என அவர்கள் கட்டிய கட்டிடங்கள் உறுதியாக இருக்க மனிதப்பலி கொடுத்தார்கள். சீனாவில் அடுத்து முடி சூட்டப்படும் இடத்திலிருந்த இளவரசனே ஒரு முறை பலி கொடுக்கப்பட்டான்.

எதற்குத் தெரியுமா? கட்டப்படும் அணை உறுதியுடன் இருக்க.

மூங்கில் :

மூங்கில் :

Image Courtesy :

ஆரம்ப கால ரோமானியர்களிடையே இந்த வழக்கம் இருந்திருக்கிறது. கழுத்தை நெறித்துக் கொல்வது,நீரில் மூழ்கடித்துக் கொள்வது ஆகியவை அங்கே சர்வ சாதரணமாக நடந்திருக்கிறது இவற்றையெல்லாம் தாண்டி மிகக் கொடிய வழக்கம் தான் மூங்கில் மரணம்.

தங்களில் இருப்பவர்களில் மிகக் கொடியவன் என்று குற்றம் சாட்டப்பட்ட நபரை மூங்கில் தயாரிக்கப்பட்ட கூண்டில் அடைக்கிறார்கள். அதை அப்படியே நெருப்பில் போட்டுவிடுகிறார்கள்.

தியாகங்கள் :

தியாகங்கள் :

Image Courtesy :

ஆஸ்டெக்ஸ் என்ற இன மக்கள் தியாகம் என்ற பெயரில் பல்வேறு விதத்தில் தற்கொலையையும் கொலையையும் தூண்டியிருக்கிறார்கள். ஒவ்வொன்றுமே ஒவ்வொரு கடவுளின் பெயரைச் சொல்லி நடந்திருக்கிறது.

சூரிய கடவுள் என்று வர்ணிக்கப்பட்ட Huitzilopochtliக்கு உயிருடன் இருக்கும் மனிதனின் இதயம் காணிக்கையாக வைக்க வேண்டும் என்றார்கள்.

கௌரவ தற்கொலை :

கௌரவ தற்கொலை :

Image Courtesy :

ஜப்பானில் இதனை பின்பற்றியிருக்கிறார்கள். இந்த வழக்கம் போர் வீரர்களிடையே தான் அதிகமிருந்திருக்கிறது. தான் தோற்றுவிட்டால் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டு தற்கொலை செய்து கொள்வது வழக்கமாக இருந்திருக்கிறது.

முதலில் அவர்கள் சுத்தமாக குளித்து வெள்ளை நிற ஆடை அணிந்து கொள்கிறார்கள்.அவர்களுக்கு விதவிதமான உணவுகள் பரிமாறப்படுகிறது. உணவு சாப்பிட்டு முடித்த பிறகு கத்தி வைக்கப்படுகிறது. அந்த கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தானே இறந்து விடுகிறார்.

குழந்தைகள் :

குழந்தைகள் :

Image Courtesy :

கேட்கவே சற்று பயங்கரமானதாக இருக்கிறது கேர்த்தகானியன் என்ற இன மக்களிடையே இந்த நடைமுறை வழக்கமாக இருந்திருக்கிறது. அந்தக் கூட்டத்தில் ஒரு குழந்தையை சுற்று அடிப்படையில் பலியிடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள்.

இப்படி பலி கொடுப்பதால் தங்களது ஒட்டுமொத்த சமுதாயமே வளம் பெறும் என்று நம்பினார்கள்.

நெருப்பு :

நெருப்பு :

Image Courtesy :

டோப்பெத் என்ற மிகப்பெரிய சிலையின் கையில் குழந்தை வைக்கப்படுகிறது. அங்கிருந்து குழந்தை நெருப்பு மூட்டப்பட்டிருக்கும் இடத்தில் குழந்தையை விழச் செய்கிறார்கள் .

இதனை பெரிய விழாவாகவே அவர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். தொடர்ந்து தங்கள் இனத்தில் வளமும் ஆரோக்கியமும் பெருகும் என்றே நினைத்திருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Shocking Human Sacrifice Rituals In Ancient Period

Shocking Human Sacrifice Rituals In Ancient Period
Story first published: Wednesday, March 28, 2018, 9:45 [IST]