TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
மண்டையோட்டினை நசுக்கி மேற்கொள்ளப்படும் வினோத கலாச்சாரம்!
நமக்கு அறிமுகமில்லாத அல்லது பரிச்சயமில்லாத விஷயம் என்று சொன்னால் அதனை சில மர்மங்களோடு அல்லது அமானுஷ்யங்களோடு தொடர்புபடுத்தி ஒவ்வொன்றையும் மிகைப்படுத்தி பேசுவோம்.
அமானுஷ்யங்கள் எல்லாமே யாருக்கும் தெரியாமல் இருக்கும் மர்மமான விஷயமல்ல, அதனை தெரிந்து கொள்ள புரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமலிருப்பது தான். நமக்கு முன்னால் வாழ்ந்து மறைந்த பல்வேறு மூதாதயர்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அவர்களின் படங்களைக் கூட பார்த்திருப்போம். அவற்றில் ஒன்றினைப் பற்றியும் அதைச் சுற்றி நடந்த விஷயங்களைப் பற்றியும் தான் இப்போது பேசப்போகிறோம்.
கூம்புத்தலைகள் :
பழங்காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் தலை இப்படித்தான் இருந்தது என்று சொல்லி கூம்பு வடிவத்திலான தலையுடைய மனிதர்களின் படங்கள் காண்பிக்கப்பட்டன. அதற்கு இன்னும் வலு சேர்க்கும் விதமாக கல்வெட்டுக்கள், கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் எல்லாம் கூம்புத்தலையுடனேயிருக்க விஷயத்தை கண்மூடித்தனமாக நம்ப ஆரம்பித்துவிட்டோம்.
ஏலியன் :
அதோடு.... எண்ணற்ற புரளிகளும் கிளம்பியது. இது மனித இனம் கிடையாது வேற்று கிரகத்தில் வசிக்கக்கூடிய ஏலியன்களின் தலை தான் இப்படியிருக்கும். முதலில் ஏலியன்கள் பூமியிலும் வசித்திருக்கிறார்கள் என்றும், ஏலியன்கள் மீண்டும் பூமிக்கு வரக்கூடும் என்றும் கிளப்பிவிடப்பட்டது.
ஆராய்ச்சி :
அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் இதனை முற்றிலுமாக மறுத்தனர். அது பார்க்க மனிதர்களின் எலும்பு தான். குறிப்பிட்ட இடத்தில் வாழக்கூடிய மனிதர்களுக்கு மட்டும் எப்படி தலையின் எலும்பு இப்படி மாறுகிறது. அதே காலத்தில் வாழ்ந்த பிற பகுதி மனிதர்களுக்கு எல்லாம் மண்டை ஓடுகள் மிகச் சாதரணமாகத்தானே இருந்திருக்கிறது.
ஒரு வேலை இங்கு பிறப்பவர்களின் உடல்வாகு அப்படியா? என்று குழம்பிப் போய் ஆராய்ச்சியில் தீவிரம் காட்டினர்.
முடிவு :
அவர்களின் எலும்புகள், அவர்களின் கலாச்சாரம்,வாழ்க்கை முறை,பழக்க வழக்கங்கள்,அன்றாட நடைமுறைகள் எல்லாம் தொடர் ஆராய்ச்சிகளின் மூலம் கண்டு கொள்ளப்பட்டன. முடிவில் அந்த கூம்பு வடிவத் தலையை செயற்கையாக உருவாக்கியிருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.
அதனை ஸ்கல் மாடிவிக்கேஷன் முறையில் மாற்றியிருக்கிறார்கள்.
எலும்பு :
மனித உடலிலேயே மிகவும் உறுதித் தன்மை கொண்டது என்றால் எலும்புகளைச் சொல்லலாம். அதன் வடிவத்தையே மாற்றியிருக்கிறார்களா? அது எப்படி சாத்தியமானது என்று தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
பல இடங்கள் :
இந்த எலும்பு விரிவாக்கிடும் நடைமுறை பல கலாச்சாரங்களில் இருந்திருக்கிறது. உலகின் பல பகுதி மக்களும் இதனை நடைமுறைபடுத்தியிருக்கிறார்கள். வடக்கு அமெரிக்காவில் வாழக்கூடிய சின்னோகன் என்கிற பழங்குடியின மக்கள், ஆசியாவில் வாழ்ந்த ஹுன்ஸ்,ஆப்ரிக்காவில் வாழ்ந்த மங்கபெட்டு பழங்குடியின மக்கள் ஆகியோரிடையே இந்த பழக்கம் இருந்திருக்கிறது.
மெக்ஸிகோ மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் வாழ்ந்த பழங்குடியின மக்களுக்கு மத்தியிலும் கூட இந்த பழக்கம் இருந்திருக்கிறது.
குழந்தை பருவம் :
இந்த கூம்பு வடிவ தலையை கொண்டு வருவதற்கு ஒரு குழந்தை பிறந்ததிலிருந்தே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தலையை ஒட்டி இரண்டு நீண்ட கம்புகளை வைத்து இறுக்க கட்டுகிறார்கள். தொடர்ந்து அவர்களுக்கு தேவையான வடிவம் கிடைக்கும் வரை அப்படியே வைத்திருக்கிறார்கள். சிலருக்கு மாதக்கணக்கிலும் இன்னும் சிலருக்கு வருடக்கணக்கிலும் இதற்கென மெனக்கெட வேண்டியிருக்கிறது.
அழகு :
இந்த கூம்பு வடிவத் தலையை அழகுக்காக என்று சிலர் சொல்கிறார்கள். காங்கோ பகுதியில் வாழ்ந்த பழங்குடியின மக்களிடையே இப்படி கூம்பு வடிவ தலை தான் அந்தஸ்த்தானது என்று நம்பினார்கள். 90களின் மத்தியில் கூட இந்த நடைமுறை இருந்திருக்கிறது. அரசாங்க இந்த முறையை முற்றிலுமாக தடை செய்யும் வரை இந்த முறையை பின்பற்றி மண்டையோட்டின் வடிவத்தை மாற்றியிருக்கிறார்கள்.
14000 :
ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அங்கே இதே போன்ற கூம்பு வடிவ தலையுடைய எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அதன் வயது சுமார் 14000 ஆண்டுகள் இருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது.
குழந்தைகள் :
சாதரணமாக விபத்தினாலோ அல்லது ஏதேனும் வேறு காரணங்களால் எலும்பு உடையும் போது அல்லது சிறிய க்ராக் விழுந்தால் கூட அதனை சரி செய்ய எவ்வளவு மெனக்கெடுகிறோம். அதோடு அது எவ்வளவு வலி நிறைந்ததாக இருக்கிறது? இப்படியிருக்கையில் பிறந்த குழந்தையின் மண்டையோடு மெலிதாக முழுதாக இன்னும் வளர்ச்சிப் பெற்றிருக்காத நிலையில் அதனை நசுக்குவது என்பது முட்டாள்தனமானது.
மரணம் :
மெக்ஸிகோவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இப்படி மண்டையோட்டின் எலும்பினை மாற்றக்கூடிய முயற்சியினால் பல குழந்தைகள் இறந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சமூக அங்கீகாரம் :
வடக்கு அமெரிக்காவில் வாழ்ந்த சினூக் என்ற இன மக்களிடையே இந்த தலையின் வடிவத்தை மாற்றிக் கொள்வது என்பது பெரிய சமூக கடமையாக செய்திருக்கிறார்கள். அது அவர்களுக்கு அந்தஸ்த்து தரக்கூடிய விஷயமாகவும் இருந்திருக்கிறது.
ஆப்ரிக்காவில் வாழ்ந்த மங்கபெட்டு என்ற பழங்குடியின மக்கள் இந்த தலையை தங்களுக்கான ஒரு தகுதியாக கருதியிருக்கிறார்கள்.
பெரு நாட்டில்... :
பெரு நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இதே போன்றதொரு விசித்திர தலையுடைய எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டன. மேற்ச்சொன்ன காரணங்களால் மேற்கொள்ளப்பட்ட கூம்பு வடிவமாக இல்லாது இது சற்று விசித்திரமானதாக இருந்தது.
மண்டைஓடு 25 சதவீதம் பெரிதாகவும் 60 சதவீதம் வரை கனமானதாகவும் இருந்திருக்கிறது.அதாவது சராசரி மனிதனின் எலும்புக்கூட்டின் அளவை விட இது சற்று கனமானதாக இருந்திருக்கிறது.
இன்றளவும் :
கேட்கவே சற்று பயங்கரமானதாய் இருக்கக்கூடும் இந்த நடைமுறை இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது. உலகின் பல பகுதிகளிலும் அரசாங்கமே இதற்கு தடை விதித்திருந்தாலும் பசிபிக் கடலின் தெற்கு பகுதியில் இருக்கக்கூடிய வனட்டு என்ற இடத்தில் வாழக்கூடிய பழங்குயின மக்கள் மட்டும் இன்றும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.