தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு நடக்கும் கொடூர சித்ரவதைகள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

'கே' அல்லது ’லெஸ்பியன்’ எனப்படக்கூடிய பாலின ஈர்ப்பு பற்றிய விழிப்புணர்வு அது தொடர்பான தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாக இங்கே நமக்கு தெரிந்து கொண்டிருக்கும் நேரத்தில் அமெரிக்காவில் பல படி முன்னே சென்று விட்டிருக்கிறார்கள்.

பெரும்பாலும் இந்த பாலின ஈர்ப்பு பெரும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. நம்மூரில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இதற்கு எதிர்ப்பு இருக்கிறது. அமெரிக்காவில் தன்பாலின ஈர்ப்பு கொண்டோரை அதிலிருந்து மீட்கிறோம் என்று சொல்லி கே கன்வர்சன் தெரபி நடக்கிறது.

கன்வர்சன் தெரபி என்ற பெயரில் பல வகையான கொடுமைகள் நடந்து கொண்டிருக்கிறது.மனநல மருத்துவர்கள் கூறுகையில் இது மிகவும் வன்மையாக கண்டிக்கவேண்டியது,இப்படியான தெரபிகள் மூலமாக அவர்களின் பாலின ஈர்ப்பை நாம் எப்படி மாற்ற முடியும். இது மிகவும் கொடூரமானது, அவர்கள் நினைப்பது போல இது ஒன்றும் மனநல பாதிப்பு அல்ல என்று சொல்லியிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்ன நடக்கிறது? :

என்ன நடக்கிறது? :

இதனை எப்படி நடத்த வேண்டும் என்ற வழிமுறைகள் மற்றும் திட்டங்கள் எதுவும் இல்லை. இதனை 1960களிலேயே ஆரம்பித்துவிட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அவர்களுக்கு மயக்க மருந்து மற்றும் எலக்ட்ரிக் ஷாக் கொடுப்பதையே வழக்கமாக வைத்திருந்தார்கள்.

இந்த சம பாலின ஈர்ப்பு தவறானது என்றும் இதிலிருந்து நீங்கள் மீண்டு வர வேண்டும் என்று சொல்லி மூளைச் சலவை செய்யப்படுகிறது. இதைத்தவிர அங்கே என்னென்ன கொடூரங்கள் நடக்கிறது பாருங்கள்.

Image Courtesy

எயிட்ஸ் :

எயிட்ஸ் :

முதலில் அவர்களை பயமுறுத்தி, தங்களுக்கு ஏதோ மிகப்பெரிய நோய் ஏற்பட்டிற்கிறது என்ற உணர்வினை ஏற்படுத்துகிறார்கள். அவர்களை முதலில் தாழ்வு மனப்பான்மையில் தள்ளுவது தான் முதல் நோக்கமாக இருக்கிறது. அதன் பிறகு பயத்தை உண்டாக்குகிறார்கள்.

இப்படி ஒரேபாலினத்தினருடன் ஈர்ப்பு கொண்டிருப்பவர்களுக்கு பிறரை விட அதிகமாக எயிட்ஸ் நோய் தாக்கும் என்று நம்பவைக்கப்படுகிறது.

Image Courtesy

பார்ன் :

பார்ன் :

தொடர்ந்து தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களின் பார்ன் வீடியோக்களை பார்க்க வற்புறுத்தப்படுகிறார்கள். தொடர்ந்து மாதக்கணக்காக இப்படியான வீடியோக்களை பார்ப்பதால் அவர்களுக்கு சலிப்பு தட்டும் என்ற எண்ணத்தில் இப்படி செய்யப்படுகிறது.

Image Courtesy

டார்ச்சர் :

டார்ச்சர் :

உடலில் சூடு வைப்பது, உணவு கொடுக்காமல் பட்டினி போடுவது, எலெக்ட்ரிக் ஷாக் கொடுப்பது, ஆகியவற்றை தொடர்ந்து செய்கிறார்கள். இதனால் பலர் தற்கொலை செய்து கொள்வதும் நடக்கிறது. ஹாஸ்டலில் தங்கி படிக்க வைக்கப்பட்ட 17வயது மகள் லெஸ்பியனாக இருக்குமோ என்று பெற்றோருக்கு சந்தேகம். மகள் எவ்வளவோ முறை சொல்லிப் பார்த்தும் பெற்றோர் கேட்கவில்லை கேம்ப்பில் சேர்த்தார்கள்.

Image Courtesy

லெஸ்பியன் மகள் :

லெஸ்பியன் மகள் :

வாரத்திற்கு ஒரு நாள் பெற்றோர் வந்து பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள். வந்த போது, மகள் மிகவும் பயந்து முகத்துடன் இருந்தார், அதோடு பதற்றத்துடன் தன்னை இங்கேயிருந்து அழைத்துச் சென்று விடும்படி கெஞ்சினாள்.

மகள் லெஸ்பியனாகத்தான் இருக்கிறாள், அதனால் அவளால் இங்கே கொடுக்கும் தெரபிகளை சமாளிக்க முடியாமல் அழைத்துச் செல்ல சொல்கிறாள் என்று நினைத்துக் கொண்டார்கள். இன்னும் கொஞ்ச நாள் தான், நீ குணமானதும் உன்னை இங்கேயிருந்து அழைத்துச் செல்கிறோம் என்று சமாதனப்படுத்திவிட்டு சென்றார்கள் பெற்றோர்.

தற்கொலை :

தற்கொலை :

ஒரே மாதத்தில் மகள் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோருக்கு தகவல் கிடைக்கிறது, மகள் எழுதி வைத்ததாக பெற்றோருக்கு ஒரு கடிதமும் கொடுக்கிறார்கள். அதில், அம்மா அப்பா.... என்னை மன்னித்துவிடுங்கள் இங்கே தொடர்ந்து இருந்தால் என்னை நானே முழுவதுமாக வெறுத்திடுவேன் போல என்னை நான் மிகவும் நேசிக்கிறேன்.

இது என்னுடைய குறையல்ல உங்களுடைய பார்வையில் தான் குறை இருக்கிறது திருந்துங்கள்... என்று எழுதியிருக்கிறது.

அப்பா :

அப்பா :

தன்பாலின ஈர்ப்பு பெரும்பாலும் குழந்தைக்ளுக்கு தந்தையிடமிருந்து தான் வருகிறது என்று நம்புகிறார்கள். இதனால் தந்தையுடன் நடந்த நினைவுகளை பகிர்ந்து கொள்ளச் சொல்லி கேட்கப்படுகிறது. அதில் சிறப்பாக அல்லது கவலைப்படும்படி ஏதுமில்லை எனும் போது,இவர்களாகவே தந்தையைப் பற்றிய தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்துகிறார்கள்.

தந்தையால் தான் உனக்கு இந்த நிலைமை வந்திருக்கிறது, நீ தந்தையிடமிருந்து விலகி வந்து விடு என்று பேசுகிறார்கள்.

பிறப்புறுப்பு :

பிறப்புறுப்பு :

ஆணின் பிறப்புறுப்பில் எலக்ட்ரிக்கல் பேட் மூலமாக எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்படுகிறது, இதுவும் தெரபியின் ஓர் அங்கமாக பார்க்கிறார்கள்.

நிர்வாணமாக இருக்கச் சொல்லிவிட்டு அவர்களுக்கு தன்பாலின ஈர்ப்பு பார்ன் வீடியோக்கள் போட்டு காட்டப்படுகிறது, அதன் போது இவர்களுக்கு விந்து வெளியேறினால் பயங்கரமாகவும், கொடூரமாகவும் தாக்கப்படுகிறார்கள்.

குடும்பம் :

குடும்பம் :

தன்பாலின ஈர்ப்பு கொண்டுள்ள நபர் மட்டுமல்ல அவரது மொத்த குடும்பத்திற்கும் கவுன்சிலிங் நடக்கிறது. விவரமறியாத சிறிய குழந்தையாக இருந்தாலும் கூட அதற்கும் கவுன்சிலிங் என்ற பெயரில் தன் மூத்த சகோதரன் அல்லது சகோதரிக்கு மிகப்பெரிய குறை இருக்கிறது என்ற ரீதியில் ஏற்றப்படுகிறது.

பெரும்பாலும் தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் தன்னை கிண்டல் செய்வார்கள் என்றே பயப்படுகிறார்கள், அவர்களின் பயத்தை பயன்படுத்திக் கொண்டு அவரது பள்ளி,கல்லூரி,உடன் பணிபுரியும் நண்பர்களிடம் எல்லாம் உன்னைப் பற்றி சொல்வோம் என்று மிரட்டப்படுகிறார்கள்.

சித்திரவதை :

சித்திரவதை :

அவர்களை இது மன ரீதியாக சித்திரவதை செய்ய இந்த வழியை கையாள்கிறார்கள். நீ குழந்தையாக இருக்கும் போது யாராவது உன்னை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்ததால் தான் உனக்கு இப்படியான குறை ஏற்பட்டிருக்கிறது என்று நம்ப வைக்கிறார்கள்.

குழந்தைப் பருவத்திலிருந்து உனக்கு நடந்த பாலியல் அத்துமீறலினால் தான் இந்த குறை என்று நம்ப வைக்கிறார்கள்.

ஆண் பெண் :

ஆண் பெண் :

கேம்ப்பிற்கு அழைத்து வரப்படும் தன்பாலின ஈர்ப்பாளார்களை இதிலிருந்து மீட்கிறேன் என்று சொல்லி எதிர்பாலின ஈர்பாளர்களுடன் அதிக நேரம் செலவிட வற்புறுத்துகிறார்கள்.

மறுக்கும் நபர்களுக்கு அடியும் உதையும் விழுகிறது, அதோடு எமோஷனலாகவும் டார்ச்சர் செய்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Shocking Facts About Gay Conversion Camps

Shocking Facts About Gay Conversion Camps
Story first published: Saturday, March 3, 2018, 15:21 [IST]