Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் சூரியன் ராகுவின் நட்சத்திரம் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
உலகின் டாப் 10 பணக்கார குட்டி நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளில் சில ஆயிரம் பேரே வாழ்கிறார்களாம் -
இந்த 4 ராசிக்காரங்க எல்லோருக்கும் பிரச்சினைகளை கொடுப்பதற்காகவே பிறந்த ஆபத்தான ஆன்மாக்களாம் -
2 மாம்பழமும் 6 பிரட்டும் இருந்தா.. ஸ்கூல் விட்டு வர பிள்ளைகளுக்கு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் செஞ்சு குடுங்க... -
International Yoga Day 2026: சர்வதேச யோகா தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? இந்த வருட யோகா தினத்தின் சிறப்பு என் -
சனி பகவான் நிலையால் இனி 2027 வரை இந்த 3 ராசிக்காரங்க நல்ல வளர்ச்சியை காண்பார்களாம்!
மனித மாமிசத்தால் உருவாக்கப்பட்ட ஆடையை பார்த்திருக்கிறீர்களா?
மனித மாமிசத்தால் உருவாக்கப்பட்ட ஜாக்கெட்டினை விற்பதாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்றைய தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அழைத்துச் செல்கிறதோ இல்லையோ தடாலடியான வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
மனிதனின் தேடலில் நாளுக்கு நாள் புதுப்புது விஷயங்களை கண்டுபிடித்துக் கொண்டேயிருக்கிறேன். அவனது கண்டுபிடிப்புகள் மனிதர்களின் வசதிக்காக என்ற அடைமொழியுடன் வந்தாலும் இப்போது அடுத்த பரிணாமத்தை பெற்றிருக்கிறது. இப்போதெல்லாம் கனிபலிசம் எனப்படக்கூடிய மனிதக்கறியை யாரும் சாப்பிடுவதில்லை என்றாலும் ஆங்காங்கே நரமாமிசம் சாப்பிட்டதாக அரிதாக கைதுகளும் நடக்கிறது. கடந்தாண்டு டோக்கியோவில் நரமாமிச ஹோட்டல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் தற்போது இன்னொரு சர்ச்சை எழுந்திருக்கிறது.

மனிதக் கறி :
விலங்குகளைக் கொன்று அதன் தோலில் செய்யப்படுகிற லெதர் ஜாக்கெட்,ஷூ,பேக் போன்றவற்றை எல்லாம் விரும்பி பயன்படுத்தியிருப்போம் அல்லவா? இனி அதேபோல மனிதக் கறியினால் தயாரிக்கப்பட்ட ஜாக்கெட் விற்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

பேஷன் டிசைனர் :
கைலா அரினா மற்றும் டோபி பரோன் ஆகிய இருவரும் பேஷன் டிசைனர்கள் ஆவர். இவர்களின் தனித்தன்மையே பயங்கரமான அச்சம் விளைவிக்கக்கூடிய உடைகளை டிசைவன் செய்வது வாடிக்கை.
ஆஸ்திரேலியாவின் ப்ரிஸ்பேனைச் சேர்ந்த இவர்கள் தான் மனிதத்தோலினால் செய்யப்பட்ட ப்ராஜெக்ட் துவக்கியிருக்கிறார்கள்.

திறமை :
இவர்களது திறமையால் பேரும் புகழும் அடைந்தவர்கள் பேஷன் துறையில் தனி முத்திரையை படைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள்.அதனால் இந்த பயங்கரமான முயற்சியை முன்னெடுத்திருக்கிறார்கள்.

சர்வதேச வெளிச்சம் :
இருவரும் சேர்ந்து சீரியல் கில்லர்களைப் போல மனிதர்களை கொன்று குவித்து அதன் மூலமாகா அவர்களின் தோல்களைப் பெற்று உடை,அணிகலன்கள்,ஷூ,பர்ஸ்,தொப்பி, இவ்வளவு ஏன் நாற்காலி கூட செய்து விற்பதாக செய்திகள் வெளியானது.
அவர்களின் விற்பனைப் பொருட்களைப் பார்த்ததும் சர்வதேச அளவில் இந்த விஷயம் சூடு பிடித்தது.

ஜாக்கெட் :
இவர்கள் தயாரித்ததிலேயே மிகவும் பெயர் பெற்றது எட் ஜின் என்ற பெயர் கொண்ட ஜாக்கெட் தான். அந்த ஜாக்கெட்டில் பார்க்க மனித முகம் மற்றும் உறுப்புகள் அப்படியே தெரியும்.
எட் ஜின் என்பவர் ஒரு சீரியல் கில்லர், இவர் அணிந்திருந்த லெதர் ஜாக்கெட்டில் மனிதக்கறி இருப்பதாக கூறி கைது செய்யப்பட்டார்.

திரை ரசிகர்கள் :
ஹாரர் திரைப்படங்களை ரசிப்பவர்கள் இவரையும் இவரது ஜாக்கெட்டையும் மறந்திருக்க மாட்டார்கள்.அதனாலேயே இவர்களின் ஜாக்கெட்டிற்கு எட் ஜின் பெயரையே வைத்துவிட்டார்கள்.

சர்ச்சைகள் :
மக்கள் மத்தியில் பரவிய வேகத்திலேயே புரளிகளும் வேகமாக பரவியது. இவர்கள் இருவரும் கொலைகாரர்கள், பணத்தாசை காட்டி கொலை செய்கிறார்கள், இவர்கள் வசியம் செய்யத் தெரிந்தவர்கள் என்று என்னென்னவோ சொல்ல ஆரம்பித்தார்கள்.

உண்மை என்ன? :
உண்மையில் அரினா மற்றும் பரோன் மனிதர்களைக் கொன்று அவர்களின் தோலைப் பிய்த்து இந்த ஜாக்கெட்டினை தயாரிக்கவில்லை. வழக்கமாக பயன்படுத்துகிற விலங்குகளின் தோலைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதோடு விற்பனை யுக்தியாக அதில் மனித முகங்கள், உறுப்புகள் இருப்பது போல டிசைன் செய்திருக்கிறார்கள்.

மெனக்கெடல் :
இப்படியான ஓர் ஐடியா வந்ததுமே இருவருமே நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். டிசைன் செய்வதை விடவும் அந்த லெதர் குறித்த ஆய்வு தான் பல நாட்கள் ஓடியிருக்கிறது.
பல நாட்கள் முயற்சிக்குப் பிறகு வழக்கமாக பயன்படுத்துகிற லெதரில் சிலிகான் மற்றும் லேடெக்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி மனித உறுப்புகளைப் போல வடிமைத்திருக்கிறார்கள்.

ரசிகர்கள் :
உண்மை தெரியவந்ததும் இன்னும் ரசிகர்கள் கூடிவிட்டார்களாம்.... பலரும் இந்த ஜாக்கெட்டினை வாங்க ஆர்வம் காட்டியதைத் தொடர்ந்து பல்வேறு பொருட்களை அப்படியே விற்க முடிவு செய்து விட்டார்கள் . மேலும் ஐபோன் கவர், லைட் கவர், பெல்ட்,கிட்டார் இசைக்கருவியை பயன்படுத்துகிறவர்கள் அணிகிற ஸ்ட்ராப்,பர்ஸ் என பல்வேறு பொருட்களை தயாரித்திருக்கிறார்கள்.

வரலாறு :
இப்போது என்றல்ல வரலாற்றிலேயே மனித தோலை பயன்படுத்தி ஆடை அணிந்ததாக குறிப்புகள் இருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் அவற்றை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அவை பிரபலமடையவில்லை அதோடு பெரும்பாலன மக்கள் பயன்படுத்தவில்லை மிக சிலரே பயன்படுத்தியதாலோ என்னவோ காலப்போக்கில் அழிந்துவிட்டது.

லேப் ஸ்கின் :
இதற்கு மக்கள் மத்தியில் கிடைத்திருக்கக்கூடிய வரவேற்பினைப் பொருத்து ஆய்வுக்கூடத்தில் மனிதனின் சருமத்தைப் போலவே செயற்கையாக உருவாக்க முடியுமா என்பது குறித்து ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார் டினா கோர்ஜங்க்.
ஆடைகளின் உலகத்தில் இந்த ஆய்வின் முடிவு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்.



Click it and Unblock the Notifications