முரட்டுத்தனமான காதல்... காதலனின் இரத்தத்தில் குளிக்க விரும்பிய காதலி...

By Staff
Subscribe to Boldsky

ஆன்லைன் டேட்டிங் என்பது அனைவருக்கும் நல்ல அனுபவத்தை கொடுத்திடுவது அல்ல. நிறைய பேர் ஆன்லைன் டேட்டிங் மூலமாக தங்கள் பணத்தை, பொருட்களை இழந்துள்ளனர். சிலரது வினோத ஆசைகள் ஆன்லைன் டேட்டிங் மூலம் நிறைவேறி இருக்கலாம். சிலரது ஆன்லைன் டேட்டிங் மிக மோசமானதாக அமைந்திருக்கலாம். சிலர் எல்லை மீறி நடந்துக் கொண்டு அபாயத்திலும் சிக்கி இருக்கிறார்கள்.

With A Single Date She Was Obsessed With Him And Wanted To Bathe In His Blood!

ஆனால், எந்த ஒரு நபரும் இப்படியான பெண்ணிடம் ஆன்லைன் டேட்டிங்கில் சிக்கியிருக்க மாட்டார்கள். இனிமேல் யாரும் இப்படியான பெண்ணிடம் சிக்கிவிடவும் கூடாது. ஒரே நாள் டேட்டிங்கில் தீராத ஆசைக் கொண்ட அந்த பெண் ஒரு காதலனின் இரத்தத்தில் குளிக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். ஏறத்தாழ 65,000க்கும் மேற்பட்ட செய்திகளை ஒரே இரவில் அனுப்பி திணறடித்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆன்லைன் டேட்டிங்!

ஆன்லைன் டேட்டிங்!

அந்த ஆண்... ஒரு ஆன்லைன் டேட்டிங் தளத்தின் வாயுலாக தான் இந்த பெண்ணை தொடர்புக் கொண்டிருக்கிறார். அந்த பெண் பேச துவங்கிய விரைவிலேயே அந்த ஆண் மீது மிகுந்த ஈர்ப்பும், தனக்கான ஆண் இவர் தான் என்றும் முடிவுக்கு வந்துவிட்டார்.

இவர்கள் இருவர் மத்தியில் நிறைய ஒற்றுமைகள் இருந்தது அந்த பெண்ணுக்கு ஈர்ப்பை அதிகரித்தது. இருவரின் பிறந்த நாளும் ஒன்று தான். இருவரும் சைவ உணவு பிரியர்கள்.

காதல்..

காதல்..

இப்படியான பல ஒற்றுமைகள் அடுத்தடுத்து அந்த பெண்ணை மிகுந்த ஆர்வத்திற்கு ஆளாக்க. அந்த ஆண் மீது காதல் வயப்பட்டார். மேலும், காதலை தேர்வு செய்வதென்பது எல்லாமே கச்சிதமாக இருக்கிறதா என்பதை வைத்து அல்ல, இது ஒரு பயணம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம், என்று தத்துவமாக கூறியிருக்கிறார் இந்த கிரேசி பெண்மணி.

டெக்ஸ்ட் மெசேஜ்!

டெக்ஸ்ட் மெசேஜ்!

"உன் இரத்தத்தை வைத்து நான் என்ன செய்வேன்... நான் உன் இரத்தத்தில் குளிக்க விரும்புகிறேன்." என்று ஒரு செய்தியை அனுப்பியுள்ளார் இந்த பெண்மணி. இப்படியான செய்தியை ரிசீவ் செய்தவுடன்... அந்த பெண்ணுடனான தொடர்பை துண்டித்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார் அந்த ஆண். இந்த பெண் மிகவும் அபாயமானவள் என்று உணர்ந்தே இந்த முடிவை எடுத்திருக்கிறார் அந்த ஆண்.

ஆனால், அந்த பெண் தொடர்ந்து செய்திகள் அனுப்பிக் கொண்டே இருந்திருக்கிறார். சில நூறு செய்திகள் என்றாலே தலைசுற்றி விடும். அந்த பெண்ணோ... 65000 செய்திகளை அனுப்பி காதலனை திணறடித்துள்ளார்.

கம்மியா தானே...

கம்மியா தானே...

ஏன் இத்தனை செய்திகள் அனுப்பினாய் என்று கேள்வி கேட்டதற்கு... நான் அவ்வளவு பெரிதாக ஒன்றும் செய்திகள் அனுப்பவில்லை. நான் அவனை விட்டு பிரியவோ... அவன் என்னை விட்டு பிரியவோ என் மனம் இடம் கொடுக்கவில்லை. அவன் என்னை விட்டு செல்ல கூடாது என்பதற்காக தான் அத்தனை செய்திகள் எனுப்பினேன் என்று கூலாக பதில் அளித்துள்ளார் அந்த கிரேசி பெண்மணி.

பேரார்வம்!

பேரார்வம்!

காதல் என்பதை காட்டிலும்... அந்த ஆண் மீது பேரார்வம் கொண்டிருக்கிறார் இந்த பெண். அந்த ஆண் தனது வீட்டில் இல்லாத போது.. அவரது வீட்டுக்குள் முரட்டுத்தனமாய் நுழைந்து, அந்த ஆணின் குளியறையில் குளித்துள்ளார் இவர். மேலும், தான் வந்த காரில்... கசாப்பு கடையில் ஆடுகளை வெட்ட பயன்படுத்தும் கத்தியையும் உடன் கொண்டு வந்திருக்கிறார் இந்த பெண். இதனால்... இவரை போலீஸ் கைது செய்தனர்.

அப்பாவி!

அப்பாவி!

நான் மிகவும் அவனை காதலிக்கிறேன். நான் ஒரு அப்பாவி.. எனது காதல் நேர்மையானது... நான் அவனிடம் தான் உண்மையான காதலை உணர்ந்தேன் என்று பரிதாபமாக பேசியிருக்கிறார் அந்த பெண். இப்போது அந்த பெண் கைதாகி விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இவர் நிஜமாகவே கொடூரமான குணங்கள் கொண்ட பெண்ணா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று பரிசோதனை செய்து வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    With A Single Date She Was Obsessed With Him And Wanted To Bathe In His Blood!

    They went for a single date and after that, the woman was so obsessed with the man that she sent him over 500 messages on a single day and even threatened him of her desire to bathe in his blood!
    Story first published: Saturday, May 26, 2018, 10:41 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more