லிப்ஸ்டிக் போட்டுக் கொள்ள விரும்பிய சிறுவனை குடும்பத்தினர் என்ன செய்தார்கள்?

சிறுவன் ஒருவன் லிப்ஸ்டிக் அணிய வீட்டில் பெரிய பிரச்சனை இதனை உறவுக்கார அக்கா அண்ணன்கள் சேர்ந்து எப்படி தீர்க்கிறார்கள். அதோடு இவ்வளவு காலமாக பழக்கப்பட்டுக் கிடந்த ஒரு நடைமுறையை மாற்றியிருக்கிறார்கள்.

எத்தனையோ தொழில்நுட்ப வளர்ச்சி, முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்று பெருமையாக சொல்லிக்கொண்டாலும் சில விஷயங்களில் இன்னமும் பழமை மாறாமல் கடைபிடித்து வருகிறோம். உதாரணத்திற்கு இன்று எப்படி இப்ப எல்லாம் யாருங்க என்று சொல்லிக் கொண்டு மறைமுகமாக அந்த நபரின் சாதிய புன்புலத்தை தெரிந்து கொள்ள துடிக்கிறோமோ அதே போல இன்னொரு விஷயம் அப்படியே பழமையுடன் இருக்கிறது.

அது ஆண் பெண் வித்யாசத்தை காட்டுவதில் அமைந்திருக்கிறது. நீ ஆண் உன் நடை,உடை,பாவனை இப்படித்தான் இருக்க வேண்டும் நீ இந்திந்த வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்று சொல்லி ஒன்றை கட்டமைத்து இருக்கிறார்கள். அந்த ஆண் குழந்தையின் விருப்பம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இவர்கள் முன்னரே ஒரு பிம்பம் உருவாக்கி வைத்துவிட்டதால் அதை விடுத்து சற்று வித்யாசமாக என்ன செய்தாலும் அந்த குழந்தை எதோ தவறு செய்து விட்டதாக பார்க்கப்படுகிறான். சில சமயங்களில் இதற்காகவே அந்த குழந்தைக்கு தண்டனை எல்லாம் கிடைக்கிறது.

இளவயதில் தன்னுள் தெரிகிற பெண்மைக்கான மாற்றங்களை வெளியில் சொல்ல முடியாமல், அதை வெளிப்படுத்துவதால் பல்வேறு கேலிக் கிண்டலை சந்திக்கும் குழந்தைகள் இதனாலேயே வீட்டை விட்டு ஓடி வருகிறார்கள். ஒரு ஆணாக இருந்து இதெல்லாம் செய்யலாமா? என்று சொல்லி சொல்லியே அவர்களின் இயல்பை சிதைக்க நினைப்பவர்களுக்கு பதில் சொல்ல முடியாது அவர்களுக்கு வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 #1

#1

திக்‌ஷா பிஜ்லானி என்ற பெண்மணி தன் வீட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தன்னுடைய சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவு பகிரப்பட்டதிலிருந்து திக்‌ஷாவிற்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அப்படி அவர் அதில் என்ன சொன்னார் என்று இனி பார்க்கலாம்.... நான் குழந்தையாக இருக்கும் போது அம்மாவின் சேலை கட்டிக் கொள்வது போல துப்பட்டாவால் கட்டிக் கொள்வேன். மேக்கப் போட்டுக் கொள்வேன் அப்போது எல்லாரும் கைதட்டி ரசிப்பார்கள். பாராட்டுவார்கள் அப்பா என்னை தூக்கி முத்தம் எல்லாம் கொடுப்பார்.

இப்போது ஒரு கேள்வி.... இதே நேரத்தில் நான் ஒரு ஆண் குழந்தையாக இருந்து இப்படி சேலை கட்டிக் கொண்டு மேக்கப் போட்டுக் கொண்டால் பாராட்டியிருப்பார்களா??? என்ற கேள்வி எழுகிறது.

#2

#2

திக்‌ஷாவின் உறவினர் தம்பி ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒன்பது வயது பிற ஆண் குழந்தைகளைப் போல வெயிலில் கிரிக்கெட் விளையாட அவனுக்கு பிடிக்கவில்லை, சைக்கிள் ஓட்ட பிடிக்கவில்லை,பொம்மை கார்கள் வைத்துக் கொண்டு விளையாட அவன் விரும்பவில்லை மாறாக அவன் தன்னை அழகுப்படுத்திக் கொள்ள விரும்பினான்.

சமையல் கற்றுக் கொள்ள விரும்பினான், லிப்ஸ்டிக் போட்டக் கொள்ள விரும்பினான்,நகங்களுக்கு கலர் கலராக நெயில் பாலிஷ் போட்டுக் கொள்ள விரும்பினான். ஒரு ஆண் குழந்தை இதையெல்லாம் பிடிக்கும் என்று சொன்னாலே ஏற இறங்க பார்த்து திட்டித்தீர்பவர்கள் சும்மா விடுவார்களா?

 #3

#3

இதில் தவறெதுவும் இல்லை தான் ஆனால் பாக்குறவங்க என்ன பேசுவாங்க என்று பிறர் என்ன நினைப்பார்களோ என்று நினைத்துக் கொண்டு இதெல்லாம் பெரும் தவறான காரியம் என்று சொல்லப்படுகிறது அதோடு அந்த குழந்தையை திட்டியும், அடித்தும் துன்புறுத்துகிறார்கள். இல்லையென்றால் கேலி கிண்டல் செய்தே அந்த குழந்தையை பெரும் குற்ற உணர்வில் தள்ளி விடுவார்கள்.

#4

#4

அதனைப் பார்த்து பயந்து எங்கே தன்னை எல்லாரும் ஒதுக்கி விடுவார்களோ என்று பயந்து பிறரிடமிருந்து தன்னை தனிமைபடுத்திக் கொள்வான். ஒரு கட்டத்தில் இந்த இடத்தை விட்டே செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறான். நான் பெரிய குற்றவாளி, பிறர் செய்யாத ஒரு குற்றத்தை செய்துவிட்டேன் என்ற எண்ணத்தை விதைத்துவிடுவார்கள்.

அந்த குழந்தையை பிறரிடமிருந்து ஒதுக்கி வீட்டை விட்டே ஓடிவிடுகிறார்கள்.

#5

#5

இந்த நிலைமையை தன் வீட்டில் மாற்ற நினைத்திருக்கிறார் திக்‌ஷா. காலங்கலமாக பின்பற்று வருகிற இந்த நிலைமையை மாற்றுவது என்பது சாதரணம் கிடையாது. அந்த அனுபவங்களை தான் திக்‌ஷா தன்னுடைய சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

முதலில் ஆணென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை முதலில் உடைக்க வேண்டும் என்று எண்ணினார் திக்‌ஷா. இதற்காக தன்னுடைய சகோதரர் மற்றும் உறவுக்கார நண்பர்களுடன் இணைந்து இதற்கான வேலையை ஆரம்பித்தார்.

#6

#6

ஒன்பது வயதே நிரம்பிய அந்த தம்பியின் எண்ணத்தை மாற்றும் வகையில் எல்லாரும் அந்த சிறுவனுக்கு பிடித்த சிகப்பு நிறத்தில் லிப்ஷ்டிக் போட்டுக் கொள்ள ஆரம்பித்தனர். முதலில் பெரியவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

குழந்தைப் பருவத்தில் இருந்தே தன் விருப்பங்களை வெளியே சொல்லக்கூடாது அப்படி சொல்வது என்பதே தவறானது என்று கற்றுக் கொடுப்பது மிகவும் ஆபத்தானது.

#7

#7

தன் அக்கா,அண்ணன்கள் எல்லாரும் தனக்கு சப்போர்டிவாக இருப்பதைப் பார்த்து அந்த தம்பிக்கும் தைரியம் வந்துவிட்டது. இதன் பின்னர் நடந்தது தான் ஹைலைட்டான விஷயம். ஒரு முறை தன் தங்கையின் சைக்கிளை எடுத்து ஓட்ட ஆரம்பித்திருக்கிறான்.

உடனே ஏன் பெண் பிள்ளை பயன்படுத்தும் சைக்கிளை ஓட்டுகிறாய் போய் உன் அண்ணனின் சைக்கிளை எடுத்து ஓட்டு என்று சொல்லியிருக்கிறார்கள்.கடந்த முறை அழுந்து கொண்டே வீட்டிற்குள் சென்று தன் அறையில் ஒளிந்து கொள்வதை விடுத்து அவர்களை எதிர்த்து பதில் பேசியிருக்கிறான்.

#8

#8

தன் பெற்றோர், தன் வயதொத்த சிறுவர்கள் எல்லாரும் ஒரு விருப்பத்திலும் அவர்களை விட தான் மட்டும் தனியாக வித்யாசமாக இருப்பதாய் உணர்கிறான். ஒரு பக்கம் தங்களுக்கு அடுத்த ஜெனரேசனான தம்பி இன்னொரு பக்கம் தங்களுக்கு முந்தைய ஜெனரசனான பெற்றோர் மற்றும் உறவினர்கள்.

இருவருக்கும் இடையில் ஒரு பாலமாய் இருந்து கையாண்டிருக்கிறார்கள்.

Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, June 26, 2018, 15:04 [IST]
Desktop Bottom Promotion