Latest Updates
-
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா?
உங்களோட ஏழு தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் பச்சரிசி பரிகாரம்... உடனே செஞ்சிடுங்க
இங்கே சில பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை பாவங்களைத் தீர்க்கக் கூடியவை. இந்த தலைமுறை மட்டுமல்ல ஏழு தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஆற்றல் கொண்டது.
ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களையும் தீர்க்கும் பச்சரிசி - என்ன செய்ய வேண்டும்?

பச்சரிசியில் நெய் மணக்க பொங்கல் வைப்பதற்கு தெரியும். அதிரசம் செய்வோம் என்று பச்சரிசியால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நம்முடைய பாட்டி காலம் முதல் வழிவழியாகச் சொல்லி, நமக்குத் தெரிந்திருக்கும். ஆனால் நீங்கள் கவனித்து இருக்கிறீர்களா என்று தெரியவில்லை. ஆன்மீகத்துக்கும் பச்சரிசிக்கும் இருக்கிற தொடர்பை நீங்கள் கவனித்திருக்கீறீர்களா?

ஆன்மீகம்
நிறைய ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு நாம் பச்சரிசியைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அதுபற்றிய கவனம் நமக்குத் தேவையில்லை. ஆனால் ஏழேழு ஜென்மத்துக்கும் செய்த பாவங்களைக் கூட பச்சிரிசி பரிகாரம் மூலம் தீர்க்க முடியும் என்கின்றனர் ஆன்மீகப் பெரியோர்கள்.

பாவங்கள்
நமக்கு தெரிந்தே நாம் செய்த பாவங்களையும் தெரியாமல் செய்திருக்கும் பல பாவங்களையும் அதனால் உண்டாகும் விளைவுகளையும் போக்குவதற்கென்றே பச்சரிசி பரிகாரங்கள் இருக்கின்றது. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம். பாவத்தைக் கழுவ காசிக்குதான் போகணும் என்று சொல்வார்கள். ஆனால் மனதால் உணர்ந்து, இந்த சின்ன பச்சரிசி பரிகாரத்தைச் செய்தாலே பாவங்கள் அனைத்தும் ஒரு பிடி பச்சரிசியிலேயே தீரும்.

சனிக்கிழமை
சனிக்கிழமை நாளில் காலையில் நேரமாக எழுந்து குளித்துவிட்டு, ஒரு கை நிறைய பச்சரிசியை அள்ளிக் கொண்டு, சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். பின்னர் அதை அப்படியே உள்ளங்கையில் மூடி வைத்துக் கொண்டே விநாயகப் பெருமானை மூன்று மூன்று முறை சுற்றி வர வேண்டும். அதன்பின்பு விநாயகர் சிலையைச் சுற்றிலும் இந்த பச்சரிசியைத் தூவி விட வேண்டும். அப்படி நாம் போட்ட பச்சரிசிகளை முழுமையாக எறும்புகள் தூக்கிச் சென்றுவிட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் தீர்ந்து போகும்.

எறும்புகள்
நாம் வீசிய அரிசியை எறும்புகள் மழைக்காலத்தில் வைத்து சாப்பிடுவதற்காக சேமித்து வைத்துக் கொள்ளும். எறும்பினுடைய எச்சிலானது பச்சரிசியின் மீது பட்டுவிட்டாலே போதும், பச்சரிசிக்கு கெட்டுப் போகும் தன்மையானது நீங்கிவிடும்.
இந்த பச்சரிசியை எறும்புகள் சாப்பிட்டு முடிக்க கிட்டதட்ட இரண்டறை வருடங்கள் எடுத்துக் கொள்ளும். இந்த இரண்டறை ஆண்டுகள் வரையிலும் எறும்புகளின் கூட்டினை முப்பத்து முக்கோடி தேவர்களும் கவனித்துக் கொண்டே இருப்பார்களாம்.

கிரக நிலைகள்
இரண்டறை ஆண்டுகளுக்கு ஒரு முறை கிரக நிலைகள் அனைத்தும் மாறும். அப்படி மாறியதும் பாவங்களின் வீரியங்கள் வலுவிழந்து போய்விடும். அதனால் அடிக்கடி பெரியோர்கள் அடிக்கடி எறும்புகளுக்கு அரிசி இரையாகப் போட வேண்டும் என்று சொல்வார்கள்.

சனி பகவான்
ஒரு எறும்பு நாம் போடுகின்ற பச்சரிசியைச் சாப்பிட்டால், 108 பிராமணர்களுக்கு அன்னதானம் போட்டதற்கும் அவர்கள் நிறைவாகச் சாப்பிட்டதற்கும் சமம். இப்படிச் செய்வதன் மூலமாக, சனி பகவானின் தொல்லைகள் கூட உங்களை நெருங்காது. இதன்மூலம் மிகக் கொடுமையான விளைவுகளைத் தரக் கூடிய அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஏழரைச்சனி, கண்ட சனி ஆகியவற்றால் உண்டாகும் தீங்குகளும் உங்களை நெருங்காது.



Click it and Unblock the Notifications
