வரலாற்று பக்கங்களில் இருந்து மறைக்கப்பட்ட 2ம் உலகப் போர் புகைப்படங்கள்!

Subscribe to Boldsky

உலகில் பல நூற்றாண்டுகளுக்கு முன் இதைவிட கொடிய போர்கள், ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான மரணங்களை, இழப்புகளை, நிகழ்ந்துள்ளன. ஆனால், சமீபத்தில் நடந்ததாக வரலாறு தன்னுள் மிகுந்த வடுக்கள் மற்றும் மீளா துயரத்துடன் கொண்டிருக்கும் ஒரு இரத்த சுவடு முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்.

சில உலக தலைவர்களின் பகை, பொறாமை மற்றும் அகந்தை போன்ற காரணத்தால், எண்ணற்ற கனவுகளும், திறமைகளும் கொண்டிருந்த இலட்சக்கணக்கான மக்கள் எதற்காக சாகிறோம், எதனால் சாகிறோம் என்றே அறியாமல் கொத்துக் கொத்துகாக செத்து மடிந்தனர்.

Rare World War Photos which is Believed as Lost Pages of History.

All Image Source: pxleyes

அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான், சோவியத் யூனியன் போன்ற பல நாடுகளில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையில் உலகப்போர் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது என்றே கூறலாம். ஒரு சில நாடுகளில் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் விதவை கோலமிட்டு நிர்கதியாய் தெருவில் நின்றனர். வயதானவர்கள், இளைஞர்கள், பச்சிளம் குழந்தைகள் என்ற வயது பேதமின்றி வெடி குண்டுகள் அவர்களின் உடல்களை சிதைத்து சென்றன.

ஊர் முழுக்க புகை மண்டலம், சுவாசிக்கும் காற்றில் கூட நச்சு என மக்கள் நிம்மதியாய் மூச்சு விட முடியாத நிலை. அணு ஆயுதத்தின் வீரியம் எத்தகையது, அது மண் மற்றும் மனிதரின் உடலில் எத்தனை ஆண்டுகள் நீண்ட பெரும் வடுவினை ஏற்படுத்தி செல்கிறது என்பதை உலகிற்கு எடுத்துரைத்து அறிமுகம் செய்த நிகழ்வு உலகப்போர்.

இனி இப்படி ஒரு அசம்பாவிதம் எக்காரணம் கொண்டு நடந்துவிட கூடாது என்பதற்காக உலக நாடுகள் ஒன்றிணைந்து சில சட்டத்திட்டங்களை ஏற்படுத்தின. ஆனால், அந்த சட்டத்திட்டங்களை மீறி இப்போதும் ஓரிரு நாடுகள் செயற்பட்டு தான் வருகின்றன.

போர் விமானங்கள், கப்பல்கள், பீரங்கி, துப்பாக்கி, அணு குண்டுகள், பிணக்குவியல்கள் என உலகப் போரின் போது எடுக்கப்பட்ட சில கொடூரமான தாக்கம் கொண்டிருக்கும் புகைப்படங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

போர் பயிற்சியின் போது இராணுவ வீரர்கள்...

Image Source:NYhistoryblog

#2

#2

வெற்றிக் கொண்ட இடத்தில் தங்கள் நாட்டு தேசிய கொடியை பறக்கவிடும் இராணுவ வீரர்கள்...

Image Source:Acepilots

#3

#3

உலகப்போர் தாக்குதலின் போது உருக்குலைந்த லண்டன் நகரம், தீயணைக்கும் வீரர்கள்..

Image Source: Illinois

#4

#4

போர் விமானத்தில் பறந்தபடி துப்பாக்கிச்சூடு நடத்தும் விமானப்படை வீரர்...

Image Source: Illinois

#5

#5

தலைமை இராணுவப்படை அதிகாரிகளின் க்ரூப் போட்டோ...

Image Source: Wiki

#6

#6

போர் பகுதியில் பீரங்கி ஓட்டி வரும் இராணுவ வீரர்...

Image Source: Ptatransitauthority

#7

#7

போர் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருக்கும் டர்ன்பெர்ரி மருத்துவமனை நர்ஸ் ஊழியர்கள்.

Image Source:Maybole

#8

#8

தாக்குதலுக்காக பறந்துக் கொண்டிருக்கும் போர் விமானம்...

Image Source: Phombo

#9

#9

போர் நடந்து உருக்குலைந்து போன ஒரு பகுதியில் ஏதுமறியாது அமர்ந்திருக்கும் சிறுவர்கள்...

Image Source:BBC

#10

#10

போரின் போது தாக்குதலில் உயிரிழந்து கடற்கரையில் பிணக்குவியலாய் கிடைக்கும் இராணுவ வீரர்கள்...

Image Source: Wordwar2

#11

#11

பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் நாடுகளுக்கு இடையே நடந்த போர் காட்சி. ஜெர்மனிக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடத்திக் கொண்டிருக்கும் பிரெஞ்சு வீரர்கள்...

Image Source:Encyc

#12

#12

இராணுவப்படை தலைமை அதிகாரிகளின் க்ரூப் போட்டோ...

Image Source:NHs

#13

#13

முதல் நாள் போரின் போது இறந்த இராணுவ வீரர்களின் உடல்களை, தனியாக எடுத்து புதைக்க ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்த சமயத்தில்...

Image Source: Zaki

#14

#14

ஹிட்லர் மற்றும் முசோலினி ஒன்றாக பேசி சிரித்தப்படி காரில் பயணிக்கும் போது எடுத்தப் புகைப்படம்...

Image Source: 1BP

#15

#15

ஆபரேஷன் ஸ்ட்ராங்கள்: வெடிக்குண்டு தாக்குதல் காரணத்தால் புகை மண்டலமாய் காட்சி அளிக்கும் நகரம். வானில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்.

Image Source:3BP

#16

#16

இரண்டாம் உலகப் போரின் போது வெடிகுண்டு தாக்குதலின் காரணத்தால் உருக்குலைந்து காணப்படும் வால்டன்பர்க்.

Image Source:2BP

#17

#17

நிர்வாண நிலையில் மிக கொடிய மூறையில் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு அடைக்கப்பட்டிருக்கும் போர் கைதிகள்.

Image Source:3BP

#18

#18

போருக்காக ஒரு பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு டஎடுத்து செல்லப்படும் போர் கருவிகள் மற்றும் வாகனங்கள்.

Image Source:Ptatransitauthority

#19

#19

போரில் தாக்குதல் நடத்திய பிறகு இராணுவ துறைமுகத்திற்கு திரும்பும் போர் கப்பல்கள்...

Image Source:2BP

#20

#20

தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் போர் விமானங்கள்...

Image Source:Isuart

#21

#21

போரின் நடுவே அந்நாட்டு சிறுமிகள் மற்றும் பெண்களிடம் பேசி கொண்டிருக்கும் போர் வீரர்கள்..

Image Source:Bigpicture

#22

#22

போர் காலத்தின் போது நெதர்லாந்து...

Image Source:MHA

#23

#23

பேர்ல் ஹார்பர் தாக்குதலின் போது...

Image Source:WW2

#24

#24

ஒரு பகுதியில் வெற்றியை கொண்டாடும் ஹிட்லர் படை இராணுவ வீரர்கள்... கொடி ஏந்தி செல்லும் காட்சி...

Image Source:Iinet

#25

#25

போர் தாக்குதலின் போது, தங்கள் இருப்பிடத்தை இழந்து சோகமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் முதிய தம்பதி.

Image Source: Archives

#26

#26

தாக்குதலின் போது கட்டிடங்களில் தீப்பற்றி எரியும் காட்சி, அலறியடித்து கொண்டு ஓடும் மக்கள்...

Image Source:WW2

#27

#27

உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற எந்த பாகுபாடும் இல்லை. உலகப் போர் தாக்குதலின் போது அனைவரும் ஈவிரக்கமின்றி சுட்டி கொல்லபப்ட்டனர். காரில் பயணித்தபடி குண்டடி பட்டு இறந்தவர்கள்.

Image Source:WW42

#28

#28

பறவை கூட்டம் போல வானில் சீறிப்பாயும் போர் விமானங்கள்...

Image Source: WW42

#29

#29

நேரடி தாக்குதலுக்கு ஆளாகி, சிதைந்து கிடக்கும் பீரங்கி...

Image Source: WW42

#30

#30

எதிரி படையின் வான்வழி தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள கூட்டமாக பதுங்கி இருக்கும் இராணுவ வீரர்கள்.

Image Source: WW42

#31

#31

போர் நிறுத்தம் மற்றும் அமைதி வேண்டி நடத்தப்பட்ட விழா புகைப்படம்.

Image Source: 1900s

#32

#32

போர் நிறுத்த அறிவிப்பின் போது நகர வீதியில் மக்கள்

Image Source: Telegram

#33

#33

துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்...

Image Source: MH

#34

#34

போருக்கான ஆயுத்தப் பணிகளில் இராணுவ வீரர்கள்...

Image Source: FDBs

#35

#35

போரின் போது வெடிக் குண்டினை செலுத்த தயார் நிலையில் இருக்கும் இராணுவ வீரர்கள்...

Image Source: 2incolour

#36

#36

இராணுவப் படையில் ஆப்ரிக்கன்-அமெரிக்க வீரர்கள்...

Image Source: Twom

#37

#37

போர் இடைவேளை நேரத்தில் ஓய்வெடுக்கும் இராணுவ வீரர்கள்...

Image Source: Twom

#38

#38

இராணுவ கப்பல் விமான தளத்தில் இருந்து தாக்குதலுக்காக சீறி பாயும் போர் விமானம்...

Image Source: Twom

#39

#39

இராணுவ பெண் அதிகாரிகள்...

Image Source: Wiki

#40

#40

வானில் இருந்து பாராசூட்டில் மூலம் குதித்து தாக்குதல் நடத்தும் வீரர்களிடம் உரையாற்றிக் கொண்டிருக்கும்ஐசன்ஹோவர்

Image Source:Veteranshour

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Rare World War Photos which is Believed as Lost Pages of History.

    The Most Terrible Things That Happened in Last Century is World War. Countries like America, Japan, Russia, Germany had seen lot of damages and deaths in this Era. Here we have shown some rare world war photos which is believed as lost pages of History.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more