For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பிரபலம் ஒரு காலத்துல உயிர் பிழைக்க நாய் உணவை சாப்பிட்டவர்... # Random Facts

By John
|

இன்னிக்கி உலகத்துல மக்கள் அதிகமா என்டர்டெயின் ஆக என்னெல்லாம் தேடி போவாங்களோ, அதுல பெரும்பாலான துறைகள்ல இவரோட பங்களிப்பு இருக்கு.

சின்ன குழந்தைங்கள்ல இருந்து இளைஞர்கள், மிடில் ஏஜ் மக்கள்னு பலத்தரப்பட்ட மக்களை சிரிக்க வைக்கவும், கேளிக்கை உலகத்துக்கு கூட்டிட்டு போகவும் இவரு ஒருத்தரால தான் முடியும்.

Random Facts 21

ஆனா, தன்னோட இளமை காலத்துல இவரு பெரிய ஏழை. சாப்பிடு போதுமான உணவு கூட இல்ல. இன்னும் சொல்ல போனா, தன்னோட உயிர் பிழைக்க இவர் நாய் உணவு கூட சாப்பிட்டிருக்கார்.... யார் இவர்.....?

இன்னிக்கி Random Factsல நாம பார்க்க போற உண்மைகள் உங்களுக்கு நிச்சயமா சுவாரஸ்யமானதா இருக்கும்னு நம்புறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

நீங்க ஒரு நபர் மேல ரொம்ப அட்ராக்ட் ஆயிட்டீங்கனு வெச்சுக்குங்க... அதுக்கு அப்பறம்.., உங்கள சிரிக்க வைக்கிறது அவங்களுக்கு ரொம்ப ஈசி ஆயிடும். இதுக்கு காரணம் அவங்க உங்கள புரிஞ்சுக்குட்டு உங்களுக்கு பிடிச்ச மாதிரி பேசுறாங்களா? இல்ல, அவங்க பிடிச்சதால மொக்க ஜோக்குக்கு எல்லாம் நீங்க சிரிக்கிறீங்களாங்கிறது கடவுளுக்கு தான் வெளிச்சம்.

#2

#2

நீங்க வெயிட்லாஸ் பண்ண முடியாமா திண்டாடுறீங்களா? எத்தனையோ டயட் ட்ரை பண்ணியும் உடல் எடைய குறைக்க முடியலையா? கவலைய விடுங்க.. ஒரு நைட் முழுக்கு நீங்க தூங்காம இருந்தா 161 கலோரிகள் குறைக்க முடியுமாம். ஆனா, என்ன இதனால உடலுறுப்பு இயக்கங்கள் கம்மி ஆயிடும், டயர்டா இருப்பீங்க, கவன சிதறல் எல்லாம் ஏற்படும்.

#3

#3

மைக்ரோ ஓவன் நிச்சயம் உங்களுக்கு தெரிஞ்ச கருவியா தான் இருந்தாகணும். ஐ.டி கம்பெனியில வர்க் பண்ற நபரா நீங்க இருந்தா.. நிச்சயமா பயன்படுத்தியும் பார்த்திருப்பீங்க. ஏன்னா, பெரும்பாலான கம்பெனிகள்ல இந்த கருவிய டீ, காபி, உணவு சூடு பண்ண வெச்சிருப்பாங்க. இதுல உங்களுக்கு தெரியாத ஒரு ஆச்சரியமான உண்மை இருக்கு. மைக்ரோ ஓவன் உணவ சூடு பண்ண எடுத்துக்குற கரண்ட விட, அதோட கிளாக் வர்க் பண்ண எடுத்துக்குற கரண்ட் தான் அதிகமாம். அடடே! ஆச்சரியக்குறி!!!

#4

#4

பொண்ணுங்க தங்கள யார் ஒருத்தர் அதிகமா சிரிக்க வைக்கிறாங்களோ, அவங்க மேல ரொம்ப ட்ராக்ட் ஆயிடுவாங்கலாம். அதனால தான், அதிகமா சிரிக்க வைக்கிற துணைகளின் இல்வாழ்க்கை ரொம்ப ஆரோக்கியமா இருக்காம். எனவே, ஆண் வர்க்கமே.. பொண்டாட்டிய நல்ல ஜோக்கா சொல்லி கமகமன்னு சிரிக்க வைங்க. டி போட்டு பேசாதன்னு சொன்னா, காபி போட்டு பேசவான்னு எரிச்சல் ஊற்ற மாதிரி காமெடி பண்ணி டைவர்ஸ் வாங்கிக்காதிங்க.

#5

#5

இதுவொரு மனோத்தத்துவ உண்மைங்க.. அதாவது, ஒருத்தரோட நாள நல்லப்படியா ஆக்க, ஒரே ஒரு நிமிஷம் அவங்க கூட நல்லப்படியா பேசுனா போதுமாம். அதே மாதிரி, ஒரே ஒரு வார்த்தையினால ஒருத்தர் வாழ்நாள் முழுக்க வறுத்தப்பட வைக்கவும் முடியுமாம். முடிஞ்சா வரைக்கும் எல்லாத்தையும் சிரிக்கவும், நேசிக்கவும் கத்துக்கங்க.

#6

#6

முதலையின் கால்கள் மிக வேகமாக ஓடக் கூடிய திறன் கொண்டிருக்குமாம். ஆனால், அதனால அவ்வளவு எளிதா திரும்ப முடியாதாம். எனவே, t தான் விரைட்டும் இரை வளைந்து, நெளிந்து பயணித்தால் முதலையால் சீக்கிரம் நெருங்க இயலாதாம்.

#7

#7

வால்ட் டிஸ்னி பத்தி நாம எல்லாரும் தெரிஞ்சு வெச்சிருப்போம். நிறையா கார்டூன் பார்த்திருப்போம். ஆனா, டிஸ்னி உருவாக்கிய வால்ட் டிஸ்னி தன்னோட ஆரம்பக்கட்ட வாழ்க்கையில ரொம்பவே ஏழையா இருந்தாராம். எந்த அளவுக்குன்னா, தன்னோட உயிரை காப்பாத்திக்க நாய் உணவு கூட அவர் சாப்பிட்டிருக்கிறாராம்.

#8

#8

கத்தி கூச்சலிட்டு யாராச்சு பேசினால், அவர் ரொம்ப ஆக்ரோஷமாக இருக்கிறார், கோபத்தில் இருக்கிறார், அவருக்கு ஏதோ நடக்க கூடாது நடந்துவிட்டது போல என்று நாம் அறிந்துக் கொள்வோம் இல்லையா.

ஆனால், பேரமைதி தான் உச்சக்கட்டமான ஆக்ரோஷத்தின் எல்லை என்றும். அவர்கள் மனதில் கிடைக்கும் உளைச்சலின் வீரியம் பெரியளவில் இருக்கும் என்றும் மனோத்தத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆகையால், தான் சோகமான நேரத்தல் அழாமல், கோபமடையாமல் அமைதியாக இருக்கும் நபர்களுடன் எப்போதும் யாராவது உடன் இருக்க வேண்டும். அவர்களை ஆசுவாசப்படுத்த வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.

#9

#9

ஒரு காலத்தில் ஒவ்வொரு கோகோ கோலா பாட்டில்லும் ஒன்பது மில்லி கிராம் கொகைன் அளவு இருந்ததாக ஒரு தகவல் கூறுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இப்படியான தகவல் இணையங்களில் அடிக்கடி உலா வருவது வழக்கம்.

#10

#10

ரூபிக் கியூப் விளையாட்டு நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். விளையாட தெரியவில்லை என்றாலும், சிலர் முயற்சித்து இருக்கலாம்., சிலர் காட்சி பொருளாகவாவது அதை கண்டிருக்கலாம்.

உங்களுக்கு தெரியுமா? உலகிலேயே அதிகமாக விற்பனையான பொருள் ரூபிக் கியூப் தான். இதற்கு அடுத்து அதிகம் விற்பனையான இரண்டாவது பொருள் ஐ-போன் என்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: facts உண்மைகள்
English summary

Random Facts 21

From worlds best selling product to what makes a girl to attract to a person more... Today we have given you a lot of interesting random facts. That surely amaze you.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more