For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்விக்காக இப்படியெல்லாமா?? அதிர்ச்சியளிக்கும் புகைப்படங்கள்!

இந்தக் குழந்தைகள் எல்லாம் தங்கள் பள்ளிக்கு எப்படி பயணிக்கிறார்கள் என்று பாருங்கள்

|

Recommended Video

கல்விக்காக மிக ஆபத்தான பாதையில் செல்லும் சிறுவர்கள்- வீடியோ

பள்ளி செல்லும் குழந்தை இருந்தாலே வீடு பயங்கர கலேபரமாய் இருக்கும். காலையில் பள்ளி கிளம்பும் நிறத்தில் வீடே தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டு பள்ளிக்கு கிளம்புவார்கள். அதுவும் சேர்ந்த செல்ல கூட்டணியிருந்தால் அவர்களின் சண்டையைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

காலையில் எழுப்புவதிலிருந்து அவர்களை தயார் செய்து, காலை உணவை சாப்பிட வைத்து, பேக் மற்றும் லன்ச் பேக் செய்து கொடுத்து ஸ்கூல் வேன் அல்லது ஆட்டோவில் சென்று ஏற்றிவிடுவதற்குள் போதும் போதும் என்றாகிடும்.

இங்கே சில குழந்தைகளும் பள்ளிக்குச் செல்கிறார்கள், பள்ளிக்கு செல்லும் வழியில் அவர்கள் சந்திக்கிற சில சாகசங்களை நீங்களே பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலையை குடைத்து ஓர் வழி :

மலையை குடைத்து ஓர் வழி :

நாமெல்லாம் ட்ரக்கிங் என்று எப்போதாவது செல்லும் வழியைத் தான் இவர்கள் தினமும் பள்ளிக்குச் செல்லவும் திரும்பவும் பயன்படுத்துகிறார்கள். சீனாவின் குலு என்ற ஊரில் இருக்கக்கூடிய இந்த பள்ளி தான், உலகிலேயே மிகவும் ஆபத்தான இடத்தில் அமைந்திருக்கக்கூடிய பள்ளி என்று சொல்லப்படுகிறது.

மலையின் பக்கவாட்டில் ஒரு அடி அகலம் மட்டுமே வழித்தடம் இருக்கும். கொஞ்சம் கால் இடறினாலும் அதளபாதாளத்திற்கு செல்ல வேண்டியது தான். இப்படியே ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து மணி நேரம் பயணம் செய்யவேண்டும். சில நேரங்களில் குதிரையில் கூட பயணிக்கிறார்கள்.

Image Courtesy

ஏணியில் ஏறினாள் தான் முன்னேற்றம் :

ஏணியில் ஏறினாள் தான் முன்னேற்றம் :

இந்தப் பள்ளிக்கூடமும் சைனாவில் தான் இருக்கிறது. ஹாங் ஜியவான் என்னும் கிராமத்திலிருந்து மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்றால் அங்கே ஓர் மலையை கடக்க வேண்டும். இவர்கள் சற்று ஆசுவாசப்படும் படி ஒரு ஐடியாவை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மலையை குடைத்து மேலே ஏறுவதற்காக ஆங்காங்கே ஏணிப்படிகளை வைத்திருக்கிறார்கள். பாதுகாப்பு என்றால் என்ன என்று கேட்கும் அளவில் இருக்கிறது அதில் தான் தினமும் குழந்தைகள் சென்று வருகிறார்கள்.

Image Courtesy

 நிமிர்த்தக்கூடியவர்கள் நாங்கள் :

நிமிர்த்தக்கூடியவர்கள் நாங்கள் :

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களுடைய கல்வியை விட்டுத்தரமாட்டார்கள் என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம்.

இந்தோனேசியாவில் இருக்கும் லெபாக் என்ற ஊரில் தான் இந்தப் பாலம் இருக்கிறது. கிராமத்தில் இருக்கக்கூடிய சிறுவர் சிறுமியர்கள், பள்ளிக்கூடத்திற்கு சென்றாக வேண்டும் என்றால் இந்த ஆற்றை கடந்தாக வேண்டும். இந்த ஆற்றை கடக்க ஒரே வழி இப்படி உடைந்து தொங்கிக் கொண்டிருக்கும் இந்த பாலம் மட்டுமே.

Image Courtesy

வானம் தாண்டி பறப்போம் :

வானம் தாண்டி பறப்போம் :

கொலும்பியாவில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்றுவர இப்படி ஸ்டீல் கேபிளில் பிடித்து தொங்கியபடி 800மீட்டர் வரை பயணிக்கிறார்கள். ரியோ நீக்ரோ ஆற்றிலிருந்து 400 மீட்டர் உயரம் இது.

Image Courtesy

தலைநகரமே :

தலைநகரமே :

இந்த புகைப்படம் டெல்லியில் எடுக்கப்படிருக்கிறது. குதிரை வண்டியில் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும் வருங்கால இந்தியாவின் தூண்கள்.

சரி விஷயத்திற்கு வருவோம்..... இந்த வண்டியில் சரியாக எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என்று எண்ணிச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

Image Courtesy

த்ரில்லான ஸ்கூல் வாழ்கை :

த்ரில்லான ஸ்கூல் வாழ்கை :

இப்படிச் செல்ல பயந்தால் எங்கள் வாழ்க்கையே கவிழ்ந்திடும் என்று சொல்கிறார்களோ என்னவோ? இந்தோனேஷியாவில் இருக்கும் சிலாங்கப் கிராமத்திலிருந்து பள்ளிக்கூடத்திற்கு சென்று வரும் மாணவர்கள்.

Image Courtesy

ட்ரிப் போகல ஸ்கூலுக்குத்தான் :

ட்ரிப் போகல ஸ்கூலுக்குத்தான் :

பார்த்தாலே ஒரு கணம் திக்கென்று இருக்கிறது தானே.... உண்மையிலேயே இந்த பிஞ்சுக் குழந்தைகள் பள்ளிக்குத் தான் செல்கிறார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கும் ரிஹல் ப்ராவின்ஸில் வசிக்கும் குழந்தைகள் டயர் ட்யூபினைக் கொண்டு ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் சென்று வருகிறார்கள்.

குழந்தையை ஸ்கூல் வேனில் அனுப்பி விட்டு மாலை வீடு திரும்பும் வரை பதைதைப்புடன் காத்திருக்கும் நகரத்து பெற்றோர்கள் எல்லாம் எம்மாத்திரம்?

Image Courtesy

கரணம் தப்பினால் மரணம் :

கரணம் தப்பினால் மரணம் :

படிப்பிற்காக உயிரை கொடுக்கலாம் என்று நினைத்து விட்டார்கள் போலும் இந்த மாணவர்கள் சைனாவின் தெற்கு குவான்க்‌ஷி என்ற மிகவும் ஏழ்மையான கிராமத்திலிருந்து படிக்க வருகிறவர்கள்.

பள்ளிக்கு வந்த சிறுவர்களை திடிரென காணவில்லை என்று ஆசிரியர் புகார் அளித்ததன் பேரில் மாணவர்கள் தீவிரமாக தேடப்பட்டார்கள். புகார் அளித்த அன்றைய தினமே மாலையில் ஒரு பேருந்தின் அடியில் இஞ்சினுக்கு இடுக்கில் உட்கார்ந்து கொண்டு பயணம் செய்து கொண்டிருந்தவர்களை வழியில் பார்த்தவர்கள் மீட்டிருக்கிறார்கள்.

Image Courtesy

 விசாரணையில் :

விசாரணையில் :

விசாரணையில், இப்படியே எண்பது கிலோ மீட்டர் வரை பயணித்திருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக தங்கள் பெற்றோர் வீட்டிற்கு வரவில்லை என்றும் அவர்களைத் தேடித்தான் சென்றோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதோடு கையில் பணம் இல்லாததால் இப்படியான ஆபத்தான பயணம் மேற்கொண்டதாக குழந்தைகள் சொல்லியிருக்கிறார்கள்.

Image Courtesy

பாலஸ்தீனத்தின் இரும்பு மனுஷி :

பாலஸ்தீனத்தின் இரும்பு மனுஷி :

2010 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த படம் . பாலஸ்தீனத்தை சேர்ந்த இந்த சிறுமி பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருக்க அவர் பின்னால் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சில அடி தூரத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

துப்பாக்கி குண்டுகள் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்து விட்டாரோ என்னவோ மிகவும் தைரியமாக நடந்து சென்ற இந்த சிறுமியின் படம் விருதுகளையும் பெற்றிருக்கிறது. இந்த படத்தை போட்டோகிராபர் அமர் என்பவர் எடுத்திருக்கிறார் .

Image Courtesy

இது தான் எங்கள் பள்ளிக்கூடம் :

இது தான் எங்கள் பள்ளிக்கூடம் :

இதைப் பார்த்தாவது கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திடுங்கள். காஷ் குனார் அகதிகள் முகாமில் 2009 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் தான் இது, இது கிழக்கு ஆப்கானிஸ்தானில் இருக்கிறது.

இங்கே அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் குழந்தைகள் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பலகையை தயார் செய்து அதில் எழுதி கல்வி கற்கிறார்கள்.

Image Courtesy

எப்படியும் போகத்தான் வேணும் :

எப்படியும் போகத்தான் வேணும் :

எப்பாடு பட்டாவது பள்ளிக்கு போயாக வேண்டும் என்று நினைத்தில் தவறில்லை தான் ஆனால் அதற்காக இப்படி ஆபத்தான பயணங்களை மேற்கொண்டால்????

பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுவர்கள் இஸ்லாமாபாத் ஹைவேஸில் நின்று கொண்டிருந்த பேருந்தில் இப்படி பயணிக்கிறார்கள்.

Image Courtesy

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் :

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் :

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் உழைக்கிறார்கள், பணம் சம்பாதிக்கிறார்கள், என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்த காலம் போய் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று சொல்லி இப்படி வெள்ளத்திலும் குழந்தைகளை பள்ளிக்கு சுமந்து செல்கிறார்கள்.

சென்ட்ரல் ஜாவா அருகில் இருக்கும் ஜரகுங் ஆற்றை கடக்கும் பெற்றோர்கள்.

Image Courtesy

சல்யூட் :

சல்யூட் :

துருக்கியைச் சேர்ந்த ராணுவ வீரர் துப்பாக்கி பாதுகாப்புடன் குழந்தைகளை அவர்களின் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்கிறார். இவர்கள் யாருமே விவிஐபி வீட்டு குழந்தைகள் அல்ல.... துருக்கி நாட்டுக் குழந்தைகள்.

இவர்கள் கடக்கும் இடம் துருக்கி மற்றும் ஈராக் பார்டர் என்று சொல்லப்படக்கூடிய ப்ராவின்ஸ் ஆஃப் சிர்னாக்.

Image Courtesy

உறைந்த குழந்தை :

உறைந்த குழந்தை :

ஃப்ரோசன் கிட் என்ற பெயரில் இந்த வாரத்தின் துவக்கத்தில் இணையத்தில் வைரலான குழந்தை இவன். சீனாவில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. கிட்டத்தட்ட அங்கே டெம்ப்பரேச்சர் மைனஸ் 9 டிகிரியில் இருந்திருக்கிறது.

தென் மேற்கு சீனாவின் யுனான் ப்ராவின்ஸில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் பள்ளிக்கு கிளம்பிய சிறுவன் தான் ப்ரோசன் கிட் என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறான்.

Image Courtesy

பள்ளிக்கு போகணும்.... படிக்கணும்... :

பள்ளிக்கு போகணும்.... படிக்கணும்... :

மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த வாங் ஃப்யூமன் பள்ளிக்குத் தினமும் நடந்தே செல்வார். தான் வசிக்கும் இடத்திலிருந்து 4.5 கிலோ மீட்டர் வரை நடந்தே வந்திருக்கிறான் வாங் ஃப்யூமன் என்ற அந்த சிறுவன், கடும் பனிப்பொழிவு இருந்ததினால் அவனது தலை முழுவதும் பனி போர்த்தியிருந்தது. கன்னங்கள் சிவந்து, புருவங்களிலும் பனிப் பூத்திருந்தது. ஃப்யூமன் அணிந்திருந்த சட்டை மிகவும் லேசான சட்டை என்பதால் அவர் கை கால்களும் பனியில் சிவந்திருந்தன.

Image Courtesy

அம்மா இல்ல :

அம்மா இல்ல :

இதனைப் பார்த்து கண்கலங்கிய ஆசிரியை இச்சிறுவனை போட்டோ பிடித்து காரணத்தைச் சொல்லி இணையத்தில் பகிர மிகவும் வைரலாக பரவியது. அத்துடன் சிறுவனுக்கு உதவிகளும் குவிந்து வருகிறது. சிறுவனைப் பற்றி விசாரிக்கையில் அப்பாவை வீட்டிற்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிறது என்றும், அம்மா எங்கோ சென்று விட்டார்கள் என்றும் சொல்லியிருக்கிறான்.

தற்போது அக்கா மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறான்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Power Of Education

Lets See how did these kids travel their School Journey.
Story first published: Friday, January 12, 2018, 10:23 [IST]
Desktop Bottom Promotion