For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாலியல் வன்கொடுமைக்கு அரசியல்வாதிகள் சொன்ன பகீர் காரணங்கள்!

இந்தியாவில் அதிகப்படியான பாலியல் வன்முறை சம்பவங்கள் நடப்பதற்கு அரசியல்வாதிகள் எதிர்வினைடாற்றி பெறும் சர்ச்சைக்குண்டான விஷயங்களைப் பற்றி இதில் பார்க்கலாம்.

|

ஒரு சம்பவம் நடக்கும் போது அதைப் பற்றி தொடர்ந்து பேசுவது விவாதிப்பது என்று தொடர்கிறது. அதன் பிறகு இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் கிடைத்தவுடன் இதை மறந்து விடுவோம். இந்தியா முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்து தூக்கி வீசப்பட்ட நிர்பயாவின் சம்பவம்.

விவாதத்தை கிளப்பிய அதே வேகத்தில் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் குறைந்திருக்கிறத அஎன்று கேட்டால் இல்லை என்பது தான் பதிலாய் வருகிறது. அடிப்படை புரிதலே தவறாக இருக்கிற காரணத்தால் இதை இன்னமும் குறைக்க முடியவில்லை என்று ஒரு புறம் நாம் பேசினாலும் இன்னொரு புறம் நாம் தேர்ந்தெடுத்த தலைவர்கள்.

Politicians Thought About Rape in India

சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில்,பொறுப்பில் இருப்பவர்கள் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாகவும், அது நடப்பதற்கான காரணங்களாக என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆஸாராம் பாபு :

ஆஸாராம் பாபு :

ஆன்மீகத் தலைவரான இவர் டெல்லியில் நடந்த நிர்பயா சம்பவத்தின் போது இதைச் சொல்லியிருக்கிறார். அந்த ஐந்தாறு நபர்களை மட்டும் குற்றவாளிகளாக குற்றம் சாட்டமுடியாது. அந்த பெண் தன்னை தாக்க வந்தவர்களிடம் மன்றாடியிருக்க வேண்டும் தன்னை விட்டுவிடுமாறு அவர்களிடம் கெஞ்சியிருக்க வேண்டும். இதனால் அவளது மானமும் வாழ்க்கையும் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றார்.

 முலாய்ம்சிங் யாதவ் :

முலாய்ம்சிங் யாதவ் :

சமாஜ்வாதி கட்சி தலைவராக இருந்த முலாய்ம் சிங் யாதவ் ஆண் ஆண் தான் அவன் தவறு செய்யவான். ஆண் பெண் இருவரும் ஒரு நாளும் சமம் ஆக முடியாது.மும்பையில் இரண்டு அல்லது மூன்று பேருக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது இப்படியான சட்டங்களை எல்லாம் மாற்ற வேண்டும்.

இப்படி திரித்து சொல்லப்படுகிற பொய்யான வழக்கு தொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுதின் தவாலிகர் :

சுதின் தவாலிகர் :

சுதின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது இதைச் சொல்லியிருக்கிறார். தங்களுடைய பாதுகாப்பிற்காக பெண்கள் பொது இடங்களில் அரை குறை ஆடை அணிந்து வரக்கூடாது. பப் கலாச்சாரம் இந்தியாவிற்கு சிறிதும் பொருந்தாத கலாச்சாரம். நமக்கு மேற்கத்திய கலாச்சாரம் தேவையில்லை. இளைஞர்கள் குடிக்கு அடிமையாகி விடுகிறார்கள் இது பெரும் தீங்கினை ஏற்படுத்தும்.

கோவாவில் கோவில்களும் சர்ச்சுகளும் நிறைந்திருக்கிறது. இங்கு பப் டூரிசம் வேண்டாம் என்றிருக்கிறார்.

பாபுலால் கவுர் :

பாபுலால் கவுர் :

மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர் பா.ஜ.க கட்சியை சேர்ந்தவர். பாலியல் வன்கொடுமைக்கு ஆண் பெண் இருவருமே காரணம். இது சில நேரங்களில் சரியாகவும் சில நேரங்களில் தவறாகவும் இருக்கிறது. புகார் பதிவு செய்வதால் மட்டும் எதுவும் நடந்து விடாது. எந்த அரசாங்கத்தாலும் பாலியல் வன்கொடுமை நடக்காமல் தடுத்துவிட முடியாது.

சம்பவம் நடந்த பிறகு தான் அதற்கான நடவடிக்கை எடுக்க முடியும். ஒரு பெண்ணின் சம்மதில்லாமல் அவளை யாரும் தொட முடியாது.

விபா ராவ் :

விபா ராவ் :

சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள மாநில பெண்கள் கமிஷனில் உறுப்பினராக இருக்கும் போது இதைச் சொல்லியிருக்கிறார். பெண்கள் தங்கள் உடல் தெரியும்படியான ஆடைகளை அணிகிறார்கள் அவர்களது செயல்கள் எவ்வளவு பெரிய தீங்கினை தங்களுக்கு செய்கிறது என்பதை உணராமல் இருக்கிறார்கள்.

கூட்டு குடும்ப முறை குறைந்த வருவது,ஹிந்து புராணங்களில் கூறியிருக்கக்கூடிய விஷயங்களை கடைபிடிக்காமல் விடுவது தான் பாலியல் வன்கொடுமை அதிகரிக்க காரணம்.

Image Courtesy

அபு அஸ்மி :

அபு அஸ்மி :

சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்தபோது இதனைச் சொல்லியிருக்கிறார். தங்களது உறவினரல்லாத ஆண்களுடன் பெண்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். ஆண்களுடன் இரவில் ஊர் சுற்ற என்ன அவசியம் இருக்கிறது? அதை முதலில் நிறுத்த வேண்டும்.

மேற்கத்திய கலாச்சாரம் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பதால் தான் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம். அதோடு இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் எல்லாம் கிராமங்களில் பெண்கள் முறையாக உடையணிந்து வீட்டிற்குள்ளேயே இருப்பதால் அங்கு எல்லாம் இந்த குற்றங்கள் குறைவு என்கிறார்

அஷோக் சிங்ஹால் :

அஷோக் சிங்ஹால் :

விஎச்பி தலைவரான இவர் மேற்கத்திய கலாச்சாரம் தான் இந்தியாவில் பாலியல் வன்கொடுமை நடப்பதற்கான காரணம். எல்லா விதத்திலும் நாம் நாகரிகத்தை எதிர்நோக்கி செல்வதால் தான் இந்தப் பிரச்சனை.

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆள்வதற்கு முன்னால் வரை இங்கே கன்னித்தன்மை பாதுகாப்பாக இருந்தது ஆனால் அதற்கு பிறகு எல்லாம் மாறிவிட்டது.

தர்மவீர் கோயட் :

தர்மவீர் கோயட் :

ஹரியானாவில் தொடர்ந்து பாலியல் குற்ற வழக்குகள் அதிகரிப்பது குறித்து ஹிசார் காங்கிரஸ் அமைப்பை சேர்ந்த இவரிடம் கேட்கப்பட்ட போது 90 சதவீத பாலியல் குற்ற வழக்குகள் பெண்களின் ஒப்புதலுடனே நடக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.

இந்த பாலியல் வன்கொடுமை கதைகள் ஒவ்வொன்றும் திரித்து கதையாக்கப்படுகிறது. ஊடகங்கள் இதையே திரும்ப திரும்ப சொல்லி விஷயத்தை பூதகரமாக காட்டுகிறார்கள். அவை குறித்து நாம் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.

Image Courtesy

மம்தா பானர்ஜி :

மம்தா பானர்ஜி :

அகில இந்திய திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சுருமான மம்தா பேனர்ஜி இதுப் பற்றி கூறுகையில் ஆணும் பெண்ணும் எந்த இடைவேளியும் இன்றி மிக நெருக்கமாக பழகுவது தான் இந்தப் பிரச்சனைக்கு காரணம் என்றிருக்கிறார்.

இது என்னவோ ஒப்பன் மார்கெட் போல இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் பாலியல் வன்கொடுமை வழக்குகளை அதிகமாக காட்டி ஏதோ இங்கே தொடர்ந்து பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக சித்தரிக்கிறார்கள்.

தினேஷ் ரெட்டி :

தினேஷ் ரெட்டி :

அந்திராவின் போலீஸ் உயர் அதிகாரியான இவர், இன்று எல்லாருக்கும் செல்வம் அதிகரித்து விட்டது. எல்லாரும் மேற்கத்திய கலாச்சாரத்தையே பின்பற்ற நினைக்கிறார்கள். இப்படி நாகரிகமாக இருக்கிற பெண்களுக்கு தான் பாலியல் வன்கொடுமை நடக்கிறது.

நீங்கள் அதிகம் எனர்ஜி தருகிற உணவினை எடுத்துக் கொண்டால் பொழுது போக்க எதாவது செய்ய வேண்டுமே என்று தோன்றும். மிக அடிப்படையான ஒரு விஷயம் என்ன தெரியுமா இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் எல்லாம் போலீஸ் கட்டுப்பாட்டில் இல்லை

கிரண் பேடி :

கிரண் பேடி :

முன்னால் ஐபிஎஸ் அதிகாரியும் பாஜகவைச் சேர்ந்தவருமான இவர், இது இயற்கையான விஷயம் தான் ஆண் பறவை பெண் பறவையை தேடிப் போவது போலத் தான் இதுவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Politicians Thought About Rape in India

Politicians Thought About Rape in India
Story first published: Wednesday, April 18, 2018, 10:17 [IST]
Desktop Bottom Promotion