For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி - உண்மையா? பொய்யா? (வீடியோ)

பாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி - உண்மையா? பொய்யா? (வீடியோ)

By Vivek Sivanandam
|

இன்றையை காலக்கட்டத்தில் வெறும் ஒரு கிளிக்கில் செய்திகளை படிக்க முடியும் என்பதால், வதந்திகளும் பொய்யான செய்திகளும் திரும்ப திரும்ப சுற்று வருவதற்கான வாய்ப்புகளும் மிக அதிகமாக உள்ளன.

இணையத்தில் தாங்கள் பார்க்கும் அனைத்தையும் கண்மூடித்தனமாக மக்கள் நம்பும் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன மற்றும் அது உண்மையா பொய்யா என கண்டறிய கூட நம் மக்கள் முயற்சிப்பது இல்லை.

Hoax Alert! People Claim Pig Gave Birth To Half-human Half-pig

இதன் காரணமாக, குழப்பமும் பயமும் காட்டுத்தீ போல பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், இது போன்ற சூழ்நிலைகளில் அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வது மிகவும் முக்கியமான ஒன்றாகிறது.

இதோ! அது போன்ற ஒரு சம்பவத்தில் மக்கள், வித்தியாசமாக இருக்கும் ஒரு விலங்கின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெறித்தனமாக பகிர்ந்துள்ளனர். அந்த விலங்கு பாதி பன்றி போலவும், மீதி பாதி மனித குழந்தை போலவும் உள்ளது.

மேலும் அந்த வதந்தியில், கென்யாவில் தாய் பன்றி ஒன்று விசித்திரமாக தோற்றமளிக்கும் மரபணுமாற்றப்பட்ட மனித பன்றியை ஈன்றெடுத்ததாக கூறப்பட்டுள்ளது.

அந்த மரபணு மாற்றப்பட்ட மனித பன்றியை பற்றிய முழு உண்மையையும் இங்கே காணலாம்.


அது உண்மைக் குழந்தை அல்ல!

ஒரு சின்ன ஆராய்ச்சியின் படி, இணையத்தில் உலா வரும் 'மரபணுமாற்றப்பட்ட மனித பன்றி'யின் புகைப்படம் உண்மையான உயிருள்ள படைப்பு இல்லை என தெளிவாகிறது. இத்தாலிய கலைஞர் மகனுகோ லய்ரா என்பவரால் சிலிக்கானால் செய்யப்பட்ட படைப்பாகும்.

அது ஒரு போட்டோசூட்!

இந்த புகைப்படங்கள் அக்கலைஞரின் எட்சி தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அந்த சிலிக்கான் சிற்பமானது மிகவும் தத்ரூபமாக தெரியவேண்டும் என்பதற்காக, தொழுவத்தை போன்ற அமைப்பை ஏற்படுத்தி வைக்கப்பட்டது. தாய் பன்றியும் கூட அந்த புகைப்படத்தில் காணப்பட்டது.

உண்மையில் இது ஒரு புரளி!

இந்த புகைப்படம் உண்மையா பொய்யா என பயந்துகொண்டு இருந்தவர்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில் இது புரளியை தவிர வேறொன்றும் இல்லை.

இது போன்ற சுவாரஸ்யமான பல தகவல்களை தெரிந்துகொள்ளவும், புரளிகளை ஆராய்ந்து உண்மையை அறிந்துகொள்ளவும் இந்த தளத்தை பின்தொடருங்கள்.

English summary

Hoax Alert! People Claim Pig Gave Birth To Half-human Half-pig

Do you think that this half-human pig is a real thing? Find out as we reveal you the details if this is real or hoax!
Desktop Bottom Promotion