Latest Updates
-
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
இந்த ரூன் மந்திர எழுத்தில் ஒன்றை தேர்ந்தெடுங்க... உங்களுக்கான மறைமுக ரகசிய செய்தியை தெரிஞ்சிக்கோங்க.
இந்த ரூன் என்னும் மந்திர எழுத்தில் உங்களுக்குப் பிடித்ததை தேர்ந்தெடுத்து அதில் உள்ள மறைந்திருக்கும் செய்தி என்ன என்று பார்க்கலாம்.
இந்த உலகம் உங்களிடம் என்ன சொல்ல வருகிறது என்பதை இந்த பிரபஞ்ச மொழியைக் கொண்டு நாம் அறிந்து கொள்ளலாம்.
இந்த ரூன் என்ற மந்திர வார்த்தைகள் நமது வாழ்க்கையில் மறைந்துள்ள விஷயங்களை பிரதிபலிக்கிறது. இந்த ரூன்கள் சாதாரண எழுத்துக்கள் அல்ல. இது ஒரு பிரபஞ்ச சக்தியின் ரகசிய குறியீடு எனலாம். இந்த ரூன் களின் ஆற்றலைக் கொண்டு நம் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இந்த ரூன்கள் 98AD காலத்தை சேர்ந்தது. அந்த காலத்தில் ஜெர்மானிய தாந்திரீகர்கள் இந்த மந்திர எழுத்துக்களை பயன்படுத்தி வந்தனர். சரி வாங்க இப்பொழுது இந்த ரூன்களைக் கொண்டு நம்ம அதிர்ஷ்டத்தை இப்பொழுது பார்க்கலாம்.

உருஷ்( தலை கீழ் நிலை)
இந்த ரூன் தான் உங்கள் விருப்பம் என்றால் முதலில் இதைப்பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது தரம் மற்றும் கட்டுப்பாட்டை குறிக்கும் அடையாளம். இது உங்கள் புதுமை, அல்லது பாலியல் உடல் நல வலிமைக்கு உதவுகிறது. சுருக்கமாக சொன்னால் உங்கள் தொழில் சார்ந்த படைப்பு திறன், உறவு மற்றும் குடும்பத்தை தொடங்க நம்பிக்கையுடன் செயல்பட உதவும்.

அன்சுஸ்(நேராக நிலை)
இது தெய்வீக மூச்சினை அடையாளமாக திகழ்கிறது. இந்த ரூனை நீங்கள் தேர்ந்தெடுத்தால் உங்கள் சொந்த உள்ளுணர்வு மற்றும் நம்பகத்தன்மைக்கு உதவியாக இருக்கும். இது எதிர்காலத்தை திருத்தும் விதத்திலும் மற்ற மக்களுடன் பரஸ்பர உறவை கட்டியெழுப்பும் விதமாக இருக்க உதவும். நீங்கள் திருமண செய்யத் திட்டமிட்டால் இந்த ரூனை தேர்ந்தெடுப்பது நன்மை அளிக்கும். இருவருக்கிடையே ஒரு பரஸ்பர புரிதல் ஏற்பட உதவும்.

செபோ
இது ஆசிர்வதித்தனின் அடையாளமாக திகழ்கிறது. இந்த ரூனை நீங்கள் தேர்ந்தெடுத்தால் அதிர்ஷ்டம் உங்களை நோக்கி வரும். இது காதல் மற்றும் உறவை இணைக்கும் ஒரு நேர்மறையான அறிகுறியாகும். மேலும் செல்வ செழுமைக்கும், உலகளாவிய இணைப்புக்கும் பெரிதும் உதவும்.

தூரிசாஷ்(எதிர்மறை நிலை)
இது போர் அல்லது துன்பம் என்பதை குறிக்கும் அடையாளமாகும். உங்கள் மனதில் இருக்கும் மன அழுத்தம் போன்றவற்றை கையாள இது சரியான நிலை ஆகும். இது உங்கள் உணர்ச்சிகளுக்கு வலுக்கொடுத்து உங்கள் இலக்கை நோக்கி சரியான பாதையில் செல்ல உதவுகிறது.

ரைதோ
இது சுழற்சி அல்லது பயணத்தின் அடையாளமாகும். நீங்கள் இந்த ரூனை தேர்வு செய்தால் பயணம் மேற்கொள்ள தயாராக இருப்பீர்கள். மேலும் இது உங்கள் வெளிநாட்டு பயணத்தில் ஏற்படும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின்மை பற்றியும் தெரிவிக்கும்.

ஹாகாலஸ்(மீள முடியாத நிலை)
இது கடும் என்ற அடையாளத்தை குறிக்கிறது. இது உங்கள் விருப்பம் என்றால் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உங்கள் வழியில் வருகின்றன என்பதை காட்டுகிறது. இதில் நேர்மையான தீர்வு இல்லாவிட்டாலும் சில ஆரோக்கியமான மாற்றங்களை உருவாக்க முடியும். ஆரோக்கியம், செல்வ செழிப்பு, அமைதி ஆகியவற்றை மேம்படுத்தும்.

ரூன் யோகா
இந்த குறியீட்டின் வடிவில் நின்ு கொண்டு கைகளை குறியீட்டில் உள்ளது போன்று சரியான நிலையில் வைத்து சூரியனை நோக்கி பிராண வாயுவை உள்ளிழுத்து நீங்கள் மனதில் நினைப்பதை இந்த பிரபஞ்சத்திடம் கூறுங்கள். இதை தொடர்ந்து ஜெபித்து கொண்டே மூச்சை உள்ளே இழுத்து இதை செய்து வாருங்கள். நீங்கள் நினைத்தது நடக்கும். பிறகு இந்த பிரபஞ்சமே உங்கள் வசப்படும்.

நேரம் இல்லை என்றால்
யோகா பயிற்சி செய்ய உங்களுக்கு போதிய நேரம் இல்லை என்றால் நீங்கள் தேர்ந்தெடுத்த குறியீட்டை தினமும் பத்து நிமிடங்கள் மனதார பார்த்து வாருங்கள். அப்படியே உங்கள் மனதில் நினைப்பதை இந்த பிரபஞ்சத்திற்கு கட்டளை இடுங்கள். உதாரணமாக" பிரபஞ்ச சக்தியே என்னுடைய செல்வ செழிப்பு வளர்ச்சி பெற வேண்டும்" என்று கட்டளை இடுங்கள். உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக செல்வ செழிப்பு மேம்பட்டு மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.



Click it and Unblock the Notifications