TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
பர்ஃபெக்ட் டைமில் எடுக்கப்பட்ட அட்டகாசமான புகைப்படங்கள் #RarePhotoCollection
கலைகளில் இந்த தலைமுறையினரிடம் காணப்படும் பெரும் ஈர்ப்பாக இருப்பது நடனமும், புகைப்படமும் தான். அதனால் தான் இப்போது மொபைகள் கூட மியூசிக் கேட்க மற்றும் புகைப்படம் எடுக்க சிறந்ததாக இருக்க வேண்டும் என்று அதிகமானோர் விரும்புகிறார்கள். அதற்கு ஏற்ப மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் வரிசையாக 7,8,9 என அடுத்தடுத்த வெர்ஷன் மொபைல்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன.
புகைப்படம் என்பது அழகான கலை. செல்ஃபியாக இருந்தாலுமே கூட அதை எங்க கோணத்தில் எடுக்க வேண்டும், வெளிச்சம் எப்படியாக கேமராக்குள் புக வேண்டும் என்பதை எல்லாம் சரியாக கணித்து எடுத்தால் உலக லெவல் போட்டோகிரபியாக மாறிவிடும். இதனுடன் போட்டோஷாப், லைட்ரூம் என எடிட்டிங் டூல்களும் இணைந்துவிட்டால் அதன் ரிசல்ட் பன்மடங்கு உயரும்.
ஒரு படத்தை எடுக்க ஒரு வருடம் காத்திருக்கும் கலைஞர்களும் இருக்கிறார்கள். போட்டோகிரபிக்கு முதலில் அவசியம் பொறுமை, காத்திருப்பு. இல்லையேல் சிறந்த ரிசல்ட் காண இயலாது.
இங்கே, இந்த தொகுப்பில் நாம் காணவிருக்கும் படங்களும் அப்படியானவை தான். இதில் சில படங்கள் போட்டோஷாப் செய்யப்பட்டவை என்றும் பல இணையங்களில் பகிரப்பட்டுள்ளது. போட்டோவோ, போட்டோஷாப்போ... இப்படியான படங்களை நாம் காண்பது மிகவும் அரிது....
சரி! வாங்க பார்க்கலாம்.....
#1 ஒட்டகச்சிவிங்கி
#Fact_Check: உலகின் உயரமான விலங்கு ஒட்டகச்சிவிங்கி. இதன் கால்கள் மட்டுமே மனிதர்களை விட உயரமானது. ஏறத்தாழ ஆறு அடிக்கும் உயரமானது ஒட்டகச்சிவிங்கியின் கால்கள். குறுகிய எல்லையை மணிக்கு 35 மைல் வேகத்திலும், நீண்ட தூரம் கொண்ட எல்லை எனில் மணிக்கு பத்து மைல் வேகத்திலும் கடக்க கூடியது ஒட்டகச்சிவிங்கி.
#2 மின்னல்
#Fact_Check: மின்னல் என்பது சக்திவாய்ந்த மின்சாரம் வெடிப்பது போன்ற செயலாகும். இது இடி இடிக்கும் போது மின்னல்கள் தோன்றுவது இயல்பு. மின்னல் என்பது மேகங்களுக்கு உள்ளும், அதன் இடையேயும், மேகத்தில் இருந்து நிலம் வரையிலும் கூட உருவாகலாம்.
Image Credit:PhotoDiod / Flickr
#3 நாய்
#Fact_Check: நாய்களுக்கும் கனவு வரும். மனிதர்களுக்கு கனவுகளில் பல நிலைகள் இருப்பது போலவே, நாய்களுக்கும் கனவுகளில் பல நிலைகள் இருக்கின்றன.REM எனப்படும் ரேபிட் ஐ மொவ்மென்ட் நாய்கள் கனவுகளின் போதும் ஏற்படுகிறது. இதனை நாம் நாய் உறக்கத்தின் போது படுத்துக் கொண்டே ஓடுவது போல அசைவதை வைத்து கண்டறியலாம்.
#4 போர்விமானம்
#Fact_Check: 1983ல் இஸ்ரேலை சேர்ந்த போர் விமானி ஒருவர், எப். 15 ரக போர் விமானத்தை ஒற்றை சிறகுடன் வெற்றிகரமாக தரையிறக்கினார்.
Image Credit:Ensign John Gay/U.S. Navy
#5 நிலா
#Fact_Check: நிலாவின் கருமையான பக்கம் என்பதே ஒரு பொய். நிலாவின் அனைத்து புறமும் ஒரே அளவிலான சூரிய வெளிச்சம் தான் படுகிறது. ஆனால், நிலா பூமியை சுற்றும் கோணமும், பூமியில் இருந்து காணும் போது தென்படும் அதன் முகப்பும் தான் நிலாவின் ஒருபுறம் கருமையாக மாறுவது போல தோன்றுகிறது.
Image Credit:Chris Thomas
#6 ஐக்கிய நாடுகள்
#Fact_Check: ஐ.நா 80 நாடுகளில் வசிக்கும் எட்டு கோடி மக்களுக்கு உணவு வழங்கி வருகிறது. உலகில் ஏழ்மை ஒழிய வேண்டும் என்று போராடி வருகிறது ஐநா. இதனால் வரை நூறு கோடி பேரின் வாழ்க்கை தரம் உயர உதவியுள்ளது.
#7 குத்துச்சண்டை
#Fact_Check: குத்துச்சண்டை விளையாட்டு தாய் பாக்ஸிங் (Muay Thai) எனும் விளையாட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பங்குபெறும் வீரர்கள் கை மற்றும் கால்களை கொண்டு தன்னை எதிர்த்து சண்டையிடும் வீரரை தாக்கலாம். இது உடற்பயிற்சி மற்றும் உடல் வலிமையை அதிகரிக்கும் விளையாட்டாக காணப்படுகிறது.
#8 ஒலிம்பிக்
#Fact_Check: 2012ல் லண்டனில் ஒலிம்பிக் நடைபெற்றது. இது முதல் முறையோ, இரண்டாம் முறையோ அல்ல. லண்டனில் அது மூன்றாவது ஒலிம்பிக் போட்டியாகும். மூன்று முறை மாடர்ன் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய பெருமை லண்டனுக்கு இருக்கிறது. மேலும், முதல் பாராலிம்பிக் போட்டிகள் நடத்திய பெருமையும் லண்டனுக்கே உண்டு. இது 1948ல் போரில் காயமுற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டது.
Image Credit:REUTERS/Luke MacGrego
#9 வானவில்
#Fact_Check: வானவில் தோன்றுவது சூரியனின் கோணத்தை சார்ந்து உள்ளது. சூரியன் 42 டிகிரி ஆங்கிளில் இருக்கும் போது வானவில் நன்கு தெரியும் என்று கூறப்படுகிறது. இதனால் தான் பெரும்பாலும் சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனத்தின் போது வானவில் தோன்றுகிறது என்றும் அறியப்படுகிறது.
Image Credit:Florian Schüppel
#10 சுதந்திரதேவி சிலை
#Fact_Check: சுதந்திர தேவி சிலை என்று கூறப்படும், அச்சிலையின் முழுப் பெயர் "Liberty Enlightening the World" என்பதாகும். இந்த சிலையை பிரான்ஸ் நாடு 1886ல் அமெரிக்காவிற்கு பரிசாக அளித்தது. இந்த சிலையின் தலை பாரிஸ் வேர்ல்டு ஃபேரில் 1878ம் ஆண்டு வைக்கப்பட்டிருந்தது.
Image Credit:JAY FINE
#11 ஒபாமா
#Fact_Check: ஒபாமாவின் முழுப்பெயர் பாரக் ஹுசைன் ஒபாமா II. இவரது தந்தை கென்யாவை சேர்ந்தவர். அம்மா கன்சாஸ் சேர்ந்தவர். தனது 6 - 10வது வயது வரை இந்தோனேசியாவில் தனது அம்மா மற்றும் வளர்ப்பு தந்தையுடன் வசித்து வந்தார் ஒபாமா. பிறகு 1971ல் தனது தாத்தா - பாட்டியுடன் சேர்ந்த ஹவாயில் வாழ துவங்கினார் ஓபாமா.
Image Credit:CAROLYN KASTER
#12 நீச்சல்
#Fact_Check: நீச்சலடிக்கும் போதுதான் மனித உடலில் இருக்கும் அனைத்து முக்கிய தசைகளும் வர்க்-அவுட் ஆகின்றன. யானைகளால் ஒரு நாளுக்கு இருபது மைல் தூரம் வரை நீச்சலடிக்க முடியும். எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட 2500 ஆண்டுகள் பழமையான ஓவியத்தை வைத்து பார்க்கும் போது குறைந்தபட்சம் மனிதர்கள் பத்தாயிரம் ஆண்டுகளாக நீச்சலடிக்கும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள் என்று அறியப்படுகிறது.
Image Credit: ADAM PRETTY
#13 குழந்தைகள்
#Fact_Check: எந்த குழந்தைகள்' அதிகம் கற்கிறார்களோ, அவர்கள் தான் சுட்டித் தனமாக இருப்பார்கள். குழந்தைகள் கருவில் 23 வது வாரத்தில் இருந்து கற்க துவங்குகிறார்கள். வெளியே தன்னை சுற்றி இருப்பவர்கள் பேசுவது, இசைப்பது போன்றவற்றை கேட்டு கற்க துவங்குகிறார்கள்.
#14 ஆமை
#Fact_Check: பார்க்க ஒற்றை ஓடு போல இருந்தாலும், ஆமையின் ஓட்டில் அறுபது வேறுபட்டு எலும்புகள் இருக்கின்றன. ஆமையின் தனித்துவமே அதன் ஓடு தான். இந்த ஓட்டில் எலும்புகள் இன்றுடன், ஒன்று பிணைந்திருக்கும்.
Image Credit:STEPHANE DUCANDAS
#15 ஆரஞ்சு
#Fact_Check: ஆரஞ்சு உண்மையில் ஒரு பெர்ரி வகை பழமாம். உலகில் விளையும் மொத்த ஆரஞ்சுகளில் இருபது சதவிதம் மட்டுமே பழங்களாக விற்கப்படுகின்றன. மற்றவை எல்லாம் ஜூஸ், எக்ஸ்ட்ராக்ட் மற்றும் பதப்படுத்தி விற்கப்படுகின்றன. ஆரஞ்சு மரம் நூறு ஆண்டுகள் ஆயுள் கொண்டது. இவை முப்பது அடி வரை உயரும்.