Latest Updates
-
இன்றைய ராசிபலன் 01 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நீண்டநாள் ஆசை நிறைவேறப்போகுதாம் -
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம்
உங்க கையில இந்த ரேகைகள் எப்படி இருக்குன்னு பாருங்க... இதனால் என்ன மாதிரியான பிரச்னைகள் வரும்
இங்கே உங்களுடைய கை ரேகைகளை வைத்து குழந்தை பாக்கியம் எப்படி இருக்கும் என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது.
கைரேகை ஜோதிடம் என்பது எல்லாரிடமும் பிரபலமான ஒன்று. நமது உள்ளங்கை ரேகையை கொண்டே நம் ஜாதகத்தை கணித்து பேசுவது தான் இந்த கைரேகை ஜோதிடம் என்பது. நமது உள்ளங்கைகளில் உள்ள மேடு போன்ற பகுதி சுக்ரன் மேடாகும் .

இது தான் நமது வாழ்வில் ஏற்படும் காதல், நெருக்கம் இவற்றை பற்றிய விவரங்களை சொல்லுகிறது. உள்ளங்கைகளில் உள்ள மேடு போன்ற பகுதியின் வடிவம், தோற்றம் இவற்றை கொண்டு தான் நம் சுறுசுறுப்பு, காதல், தாம்பத்ய வாழ்க்கை போன்றவற்றை கணித்து ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கருத்தரிப்பதில் பிரச்சினை
இந்த சுக்ர மேட்டை சுற்றி நிறைய கோடுகள் போன்று ரேகைகள் இருக்கும். இந்த கோடுகள் தான் நமது தாம்பத்ய வாழ்க்கை மற்றும் கருத்தரித்தல் போன்ற விஷயங்களை கூறுகிறது. இந்த கோடுகள் சுக்ர மேட்டிற்கு கீழே அல்லது சுக்ர மேட்டை சுற்றியோ அல்லது அதனுள்ளயோ காணப்படலாம்.

சுக்ர மேட்டு ரேகைகள்
இந்த கோடுகள் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் வேறுபடும். சுக்ர மேட்டில் காணப்படும் இந்த ரேகைகளைக் கொண்டு அவர்களின் சந்ததி வளம் எப்படி இருக்கும் என்று சொல்லலாம். அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
பெண்கள்

கருச்சிதைவு
சுக்ர மேட்டில் நிறைய கோடுகள் பின்னிப் பிணைந்து வலை போன்று காணப்படுவது பெண்களுக்கு கருச்சிதைவு பிரச்சினை இருக்கும் என்பதை காட்டுகிறது.

குழந்தையின்மை
சுக்ர மேட்டின் வலது புறத்தில் பிரேஸ்லெட் போன்ற கோடுகள் வெளிப்புறமாக காணப்படுவது அவர்களுக்கு குழந்தையின்மை பிரச்சினையை குறிக்கிறது.

வயதான கர்ப்பம்
இதே அந்த பிரேஸ்லெட் போன்ற வளைவு சுக்ர மேட்டின் உட்புறமாக தென்பட்டால் ரெம்ப வருடம் கழித்து குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதை காட்டுகிறது. வயதான பிறகு தான் இந்த பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கருப்பை பிரச்சினைகள்
இதுவே இந்த கோடுகள் ஆயுள் ரேகையை வெட்டிக் கொண்டு சுக்ர மேட்டை நோக்கி சென்றால் கருத்தரிப்பதில் பிரச்சினைகள், கர்ப்பபை கட்டிகள், சிறுநீர் பாதை தொற்று போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

செக்ஸ் பிரச்சினை
நிறைய குறியீடுகள் கைகள் முழுவதும் தென்பட்டால் தாம்பத்ய வாழ்க்கையில் சிரமம் ஏற்படும்.

விபத்து
சுண்டு விரலிருந்து நடுவிரலை நோக்கி ஒரு நேரான கோடு தென்பட்டால் விபத்து மற்றும் குழந்தையின்மை ஏற்படலாம்.

மலட்டுத்தன்மை
உள்ளங்கையின் வலது புறத்தில் நடுவிரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் இடையே கிராஸ் மார்க் இருந்தால் மலட்டுத்தன்மை நேரலாம்.

ஆண்கள்
விந்தணுக்கள் குறைவு
ஆண்களுக்கு சுக்ர மேட்டில் கிலாஸ் மார்க் தென்பட்டால் விந்தணுக்கள் குறைவு, புரோஸ்டேட் சுரப்பி குறைபாடுகள், ஆண் மலட்டுத்தன்மை ஏற்படும்.

செக்ஸ் பிரச்சினை
ஆயுள் ரேகை சுக்ர மேட்டு பகுதியின் மீது சென்றாலோ அல்லது பெருவிரலில் இருந்து சிறிய வளைவு தொடங்கி மணிக்கட்டை நோக்கி சென்றாலோ தாம்பத்ய வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திப்பார்கள்.



Click it and Unblock the Notifications