For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சைக்கோ பிணந்தின்னி: கொன்று கண்களை வேகவைத்தும், மூளையை வறுத்தும் தின்றக் கொடூரம்!

|

சைக்கோ பிணந்தின்னி மனிதன், வாக்குவாதத்தில் ஏற்பட்டு சண்டையில் முடிந்த நிகழ்வில். ஒரு இளைஞரின் கண்களை சுடுதண்ணியில் வேக வைத்து, தனது 12 வயது காதலியுடன் சேர்ந்து சாப்பிட்டதாக பகீர் வாக்குமூலம் அளித்துள்ளான்.

Paedophile cannibal: Arkady Zverev faces charges of murder, abusing a dead body and sex with a minor!

Youtube

அர்காடி ஸ்வெரெவ் (22), அலெக்செண்டர் போபோவிச் (21) எனும் இளைஞரை தலையில் வலுவாக அடித்து கொன்றது மட்டுமின்றி. அவரது மண்டையை பிளந்து, மூளையை எடுத்து மைக்ரோவேவ் ஓவனில் அதிகப்படியான வெப்ப நிலையில் மூன்று நிமிடங்கள் சமைத்து அதை சாப்பிட்டிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரஷ்யன்!

ரஷ்யன்!

ரஷ்யாவை சேர்ந்த இந்த அர்காடி எனும் இளைஞர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாராணைக்கு அழைச் செல்லப்பட்ட போது, மிக அமைதியாகவும், விலாவாரியாகவும் தான் செய்த அனைத்து செயலையும் மிக கூலாக வாக்குமூலமாக அளித்துள்ளார்.

ரஷ்யாவின் செய்ன்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே இருக்கும் கிரோவ்ஸ்கி மாவட்ட நீதிமன்றத்தில் தான் இந்த இந்த வழக்கு நடந்திருக்கிறது.

Image Source: east2west news

உடைந்தை!

உடைந்தை!

அர்காடியின் இந்த கொலை குற்றத்திற்கு உடைந்தையாக இருந்த அவரது காதலி (12) மிக இளையவர் என்பதாலும், அவரது எதிர்காலம் குறித்தும் கருத்தில் கொண்டு அவரை பற்றிய தகவல்கள் அனைத்தும் இரகசியமாக வைக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அர்காடி உடன் சேர்ந்து இவரும் கொலை குற்றம் மற்றும் பிணந்தின்னி செயலில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source: 47 news/east2west news

குற்றங்கள்!

குற்றங்கள்!

குற்றவாளி அர்காடி மீது அலெக்சாண்டரை கொலை செய்தது, பிணத்தை கொடுமை செய்து வாட்டி எடுத்தது மற்றும் மைனர் பெண்ணுடன் செக்ஸுவல் உறவில் இருந்தது போன்ற குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றங்கள் அனைத்திற்கும் சேர்த்து அர்காடிக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் என வழக்கறிஞர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்னர்.

Image Source: east2west news

வெள்ளை துணியில்!

வெள்ளை துணியில்!

குற்றம் நடந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்த போது, அந்த பாழடைந்த வீட்டின் உள் அறையில் கொலை செய்யப்பட்ட அலெக்சாண்டரின் உடல் ஒரு வெள்ளை துணியில் இரத்தக் கரையுடன் மூடிவைக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சம்பவ இடத்தில் அர்காடி மற்றும் அவரது 12 வயது காதலி மனித உடல் பாகத்தை சமைத்து உண்ண பயன்படுத்திய சமையல் கருவிகளும் கண்டெடுக்கப்பட்டன.

Image Source : Anna Liesowska /east2west news

கஸ்டடி!

கஸ்டடி!

இந்த இரக்கமற்ற கொலை வழக்கில், அர்காடியை போலீசார் இரண்டு மாதங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேலும், அர்காடியே தானாக முன்வந்து கோடாரியை வைத்து தான் அலெக்சாண்டரின் உடலை துண்டு, துண்டாக வெட்டினேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளான்.

Image Source: IC/east2west news

மருத்துவமனை!

மருத்துவமனை!

அர்காடி உடன் இந்த வழக்கில் உடைந்தையாக இருந்த சக குற்றவாளியான 12 வயது சிறுமியை ஒரு மாதம் மனநல நிபுணரிடம் சிகிச்சை பெற அனுமதித்துள்ளனர் என ரஷ்யா ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. குற்ற வழக்குகளில் தண்டனையை ஏற்கும் அளவிற்கு அர்காடியின் காதலிக்கு வயதில்லை என்பதால், அவருக்கு தண்டனை வழங்க முடியாது என கூறப்படுகிறது.

ஆனால், அர்காடி கொலை, பிணத்தை துன்புறுத்தியது, மற்றும் மைனர் பெண்ணை கற்பழித்தது என அனைத்து வழக்குகளுக்கும் உரிய தண்டனையை பெறுவார்.

Image Source: east2west news

பசி!

பசி!

அர்காடி நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்த போது மேலுமொரு அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறான். அதில், தனது முன்னாள் காதலி மாடி ஜன்னலில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்த போது, தலை சிதறி அவரது மூளை வெளி வந்து இறந்துவிட்டார். அப்போதில் இருந்து மூளையை சுவைக்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது என்று கூறியுள்ளான் அர்காடி.

Image Source: east2west news

திட்டம்!

திட்டம்!

காதலியுடன் வேறு ஊருக்கு செல்ல திட்டமிட்ட போது விமானம் அல்லது ரயிலில் வேறு இடத்திற்கு சென்றால் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று அறிந்து, வாடகை கார் மூலம் காதலியுடன் ஊரைவிட்டு சென்றுள்ளான் அர்காடி. அவர்கள் சென்ற இடம் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க். அங்கே கே.எப்.சி ரெஸ்டாரண்டில் அவர்கள் சந்தித்த அலெக்சாண்டர் போபோவிச் அவர்களுக்கு குறைந்த வாடகையில் வீடுப் பிடித்து தருகிறேன் என்று கூறியுள்ளார்.

Image Source: east2west news

சண்டை!

சண்டை!

வாடகை பணத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டு வாக்குவாதம் சண்டையில் முடிய, அர்காடி அலெக்சாண்டரை கொலை செய்துவிட்டான்.

போலீஸார் அழைத்தும், தங்கள் மகள் இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்டிருப்பதாலும், பிணந்தின்னி செயலில் ஈடுபட்டிருப்பதாலும், அவரை காண நேரில் வர பெற்றோர் மறுத்துவிட்டதாக லோக்கல் செய்திகளில் தகவல் வெளியாகியுள்ளது.

Image Source: Anna Liesowska /east2west news

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Paedophile cannibal: Arkady Zverev faces charges of murder, abusing a dead body and sex with a minor!

Paedophile cannibal: Arkady Zverev faces charges of murder, abusing a dead body and sex with a minor!
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more