For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10!

ஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10!

|

ஆப்ரிக்காவில் இன்றளவும் மாடர்ன் உலகை அறியாத பழங்குடி இனத்தவர்கள் பலர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இன்றளவிலும் சடங்கு என்ற பெயரில் பண்டைய கால முறைகளை பின்பற்றிவருகிறார்கள்.

வயதுக்கு வருவது, ஆண்மகன் வீரம், ஆண்குறி, பெண்குறி நீக்குதல் / சிதைத்தல், உடலுறவில், சகோதரன் மனைவியை உரிமை கோருதல், என பல அபாயமான, மனித உரிமை மீறல் கொடுமைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஆப்ரிக்காவில் பழக்கத்தில் இருக்கும் பயகரமான சடங்கு முறைகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாசாய் மொரன்!

மாசாய் மொரன்!

கென்யாவை சேர்ந்த மாசாய் எனும் இனத்தை சேர்ந்த மக்கள் பின்பற்றும் சடங்கு முறை இது. இந்த சடங்கை வெற்றிகரமாக செய்து முடித்து திரும்பினால் தான் அந்த ஆணை ஆண் என்றே மதிப்பார்கள். மேலும், இந்த சடங்கை முடித்து திரும்பும் ஆண்களுக்கு மொரன் எனும் பட்டமும் அளிக்கப்படும். இந்த சடங்கானது, ஓர் ஆண் காட்டுக்கு சென்று சிங்கத்தை வேட்டையாடி திரும்ப வேண்டும். மேலும், சிங்கத்தை ஈட்டியை பயன்படுத்தி மட்டுமே கொல்ல வேண்டும்.

மனைவி உரிமை!

மனைவி உரிமை!

ஆப்ரிக்காவை சேர்ந்த பல இனத்தவர்கள் இந்த மனைவி உரிமை எனப்படும் சடங்கினை பின்பற்றுகிறார்கள். ஒரு ஆண் இறந்துவிட்டால், அவரது மனைவியை, தம்பியோ அண்ணனோ உரிமை கோரும் சடங்கு இது. உறவு விட்டுப் போகக்கூடாது. ஒன்றாக இருக்க வேண்டும் என்று இவர்கள் இந்த சடங்கினை பின்பற்றினாலும். இதன் மூலம் எச்.ஐ.வி தொற்று அதிகம் பரவுகிறது. மேலும், இது மனித உரிமைகளுக்கு எதிரானது.

புண் ஆற்றுதல்!

புண் ஆற்றுதல்!

தென்னாப்பிரிக்காவில் சுலு இனத்தவர்கள் சங்கோமா எனும் முறையை புண்ணை ஆற்ற பின்பற்றுகிறார்கள். இதில், காயம் ஏற்பட்ட இடத்தில் மருத்துவர், மருந்தை தன் வாயில் வைத்து வாயாலேயே இடுவது வழக்கமாக இருக்கிறது.

இரத்த பானம்!

இரத்த பானம்!

கென்யா மற்றும் தன்சானியாவை சேர்ந்த மாசாய் மற்றும் சம்புரு இனத்தை சேர்ந்தவர்கள் இந்த சடங்கினை பின்பற்றி வருகிறார்கள். தங்கள் இடத்திற்கு யாரேனும் விருந்தினர் வந்தால், அவர்களுக்கு விலங்குகளின் இரத்தத்தை குடிக்க பானமாக கொடுத்து வரவேற்கிறார்கள். சில சமயம் அந்த இரத்தத்தை பாலுடன் கலந்தும் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

காளைமாடு சண்டை!

காளைமாடு சண்டை!

தமிழ்நாடு, ஸ்பெயின் மற்றும் மெக்ஸிகோவில் காளைமாடுகளை கொண்டு விளையாட்டுகள் இருப்பதை நாம் அறிவோம். அதே போல ஆப்ரிக்காவிலும் பெயர் அறியப்படாத ஒரு இனத்தவரிடம் காளைமாடுகளுடன் மோதி விளையாடும் விளையாட்டு பழக்கத்தில் இருக்கிறது. இந்த விளையாட்டின் போது பாதுகாப்பு எதுவும் இருக்காது. கென்யாவின் லுஹ்யா பழங்குடி மக்கள் இடத்தில் இந்த பழக்கம் காணப்படுகிறது. இந்த விளையாட்டின் போது நிறைய உயிர் சேதம் ஏற்படுகிறது.

கொலை!

கொலை!

ஆப்ரிக்காவில் நிறைய சடங்கு முறைகள் பயங்கரமானதாய் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று தான் இது. இது அரசர் அல்லது நல்வாக்கு சொல்பவர் மூலம் நடத்தப்படுகிறது. இதில், இவர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்தவர்கள் அல்லது தனி நபரை பிடித்து கொலை செய்கிறார்கள். தன்சானியா, அல்பினோஸ்ல் இதை செருசெரு (Zeruzeru) என்று கூறுகிறார்கள். இது தங்கள் செல்வாக்கை வெளிப்படுத்தும் முறையாக காண்கிறார்கள்.

மருந்து!

மருந்து!

ஆப்ரிக்காவின் பல இடங்களில் நோய்களுக்கு மருந்து பெறுவதற்கு எனவே தனி இடம் இருக்குமாம். அவர்களது கலாச்சாரத்தில் அந்த இடத்தில் தான் மருந்து வாங்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறது. இவர்கள் கிளினிக், மருந்தகங்கள், மருத்துவமனைகளுக்கு செல்வதில்லை. ஆனால், இவர்கள் மருந்து வாங்க செல்லும் இடத்தில் பணத்திற்கு பதிலாக பாம்பு முட்டை, முதலை முட்டை அல்லது சில பயங்கரமான விலங்குகளின் பற்களை கேட்கிறார்கள்.

செக்ஸ்!

செக்ஸ்!

உகாண்டாவின் பெரிய பாரம்பரியம் கொண்ட இனக்குழு பகாண்டா. இவர்களிடம் நிறைய அபாயகரமான சடங்குமுறை பின்பற்றபடுவதை காண இயல்கிறது. இங்கே ஓர் ஆண் வயதுக்கு வந்துவிட்டால், நிறைய பெண்களுடன் உடலுறவு கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதனால், இந்த இடத்தில் நிறைய எச்.ஐ.வி தொற்று பரவுகிறது.

ஆண்குறி!

ஆண்குறி!

உலகின் பல இடங்களில் ஆண்குறி நுனி தோலை நீக்கும் சடங்கு பின்பற்றப்படுகிறது. ஆனால், பிற இடங்களில் சிறு வயதிலேயே இதை செய்துவிடுவார்கள். ஆனால், ஆப்ரிக்காவில் ஆண்கள் வயதுவந்த பிறகு இந்த சடங்கை பின்பற்றுகிறார்கள். அதிலும், கத்தியை வைத்து அறுக்கும் முறையை பின்பற்றுகிறார்கள். இந்த சடங்கு முடிந்த பிறகு அவர்கள் தங்கள் தைரியத்தை நிரூபிக்க காட்டில் வசிக்க வேண்டும்.

பெண்ணுறுப்பு!

பெண்ணுறுப்பு!

எப்.ஜி.எம் (Female Genital Mutilation) எனப்படுவது ஆண்களுக்கு ஆண்குறி நுனி தோல் நீக்குவதை போலவே, பெண்ணுறுப்பின் கிளிட்டோரிஸ் பகுதியை நீக்குகிறார்கள். சிலசமயம் இந்த சடங்கின் போது ஏற்படும் மிகுதியான இரத்தப்போக்கு காரணமாக இளம்பெண்கள் மரணிக்கும் அபாயம் நேரிடுகிறது. இதனால், ஆப்ரிக்காவின் பல இடங்களில் இந்த சடங்கு தடை செய்யப்பட்டுள்ளது.

Image Source: Global Voice

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Most Dangerous Rituals in Africa

Here we have listed some of the most dangerous rituals in Africa. Take a look on it.
Desktop Bottom Promotion