விசித்திரமான உலக அழகிப் போட்டிகள்!

மனிதர்களுக்கு மட்டும் தான் அழகி போட்டி நடக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை... பியூட்டிஃபுல் குதிரை, பியூட்டிஃபுல் கோல்ட் ஃபிஷ், என சில விலங்குகளுக்கும் அழகுப் போட்டி நடத்தப்படுகிறது.

நீங்கள் உலக அழகி, பிரபஞ்ச அழகி, இந்திய அழகி... ஏன் சென்னை அழகி, மிஸ் தென்காசி அழகிப் போட்டிகள் குறித்து கூட அறிந்திருப்பீர்கள். ஆனால், நிச்சயம் இந்த வினோதமான அழகிப் போட்டிகள் உங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.

Most Bizarre Beauty Contests

Image Source: OsmFacts

மனிதர்களுக்கு மட்டும் தான் அழகி போட்டி நடக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை... பியூட்டிஃபுல் குதிரை, பியூட்டிஃபுல் கோல்ட் ஃபிஷ், என சில விலங்குகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் கூட அழகுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஆனால், இங்கே நாம் காணவிருப்பது மனிதர் மத்தியில் நடக்கும் ஒருசில வினோத அழகிப் போட்டிகள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மிஸ் கர்ப்பிணி!

மிஸ் கர்ப்பிணி!

வயிறு பெரிதாக உள்ளதால், அவர்கள் அழகல்ல என்று கூற முடியுமா? பெண்களின் உண்மையான அழகே ஒரு உயிரை உருவாக்கி, வளர்த்து பிரசவிப்பது தான். எனவே, கர்ப்பிணி வயிறை மூடி மறைப்பதில் என்ன இருக்கிறது என கூடி, மிஸ் கர்ப்பிணி என்ற அழகி போட்டியை நடத்துகிறார்கள். இதில், அழகான கர்ப்பிணி வயிறு கொண்டிருக்கும் பெண்மணி, மிஸ் கர்ப்பிணியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

கிளிங்கன்!

கிளிங்கன்!

கிளிங்கன் என்பது அமெரிக்க சயின்ஸ் ஃபிக்ஷன் தொடரான ஸ்டார் ட்ரேக்கில் வரும் ஒரு கிங்டம். ஒவ்வொரு வருடமும், இந்த கிளங்கன் கிங்கடத்தில் இடம் பெரும் கதாபத்திரங்களின் உடல் தோற்றம் போல அலங்கரித்து கொண்டு நபர்கள் வருவார்கள். இதில் யார் மிகவும் அழகான கிளங்கன் கதாபாத்திர வேடம் அணிந்திருக்கிறார்களோ அவர்கள் வெற்றியாளர்கள். ஆனால், இதில் அழகு மட்டுமின்றி திறமை, குணாதிசயங்கள் குறித்த தேர்வுகளும் நடக்கின்றன.

செயற்கை அழகு!

செயற்கை அழகு!

ஒருமுறை உலக அழகி போட்டி ஒன்றில் இருந்து சீனத்து பெண் போட்டியாளர் ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருந்தது அறியப்பட்டு அவரை போட்டியில் இருந்து நீக்கினர். இதன் பிறகு 2004ம் ஆண்டில் இருந்து... ஆர்டிஃபிஷியல் அழகி போட்டி நடத்த துவங்கினார்கள். இதில் பங்கேற்க ஒரே ஒரு விதி தான். அவர்கள் கட்டாயம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்க வேண்டும். இந்த மிஸ் ஆர்டிஃபிஷியல் போட்டியில் பங்கேற்கவிருக்கும் 18 - 62 வயதுவரை இருக்கலாம். மாற்று பாலின நபர்களும் இதில் பங்கெடுத்து கொள்ளலாம்.

பியூட்டி பாட்டம்!

பியூட்டி பாட்டம்!

தி மோஸ்ட் பியூட்டிஃபுல் பாட்டம் என்ற உலக அளவிலான அழகான பட்டக்ஸ் போட்டி நடக்கிறது. இதை 2007ம் ஆண்டில் இருந்து உள்ளாடை தயாரிப்பு நிறுவனமான ஸ்லாகி (Sloggi) மூலம் நடத்தப்படுகிறது. இதில், கணவன் மனைவி அல்லது காதலன் - காதலி ஜோடியாக கலந்துக் கொள்ள வேண்டும். இந்த போட்டியில் பல பிரிவுகள் இருக்கின்றன. எல்லா பிரிவுகளில் வெற்றிப்பெறும் போட்டியாளர்களுக்கும் மாடலிங் காண்ட்ராக்ட் பெறுவார்கள்.

ஜம்போ ராணி!

ஜம்போ ராணி!

தாய்லாந்தில் மிஸ் ஜம்போ குயின் அழகி போட்டி நடக்கிறது. இது குண்டாக இருக்கும் பெண்களுக்கு மத்தியில் நடக்கும் அழகிப் போட்டி ஆகும். இது வருடத்திற்கு ஒருமுகை பேங்காக் அருகே இருக்கும் சம்ஃபரன் எலிபான்ட் மைதானத்தில் நடக்கிறது. இங்கே, ஒரு யானை திருவிழாவும் நடக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, August 25, 2018, 7:44 [IST]
Desktop Bottom Promotion