மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஜூன் மாதம் எப்படி இருக்கப்போகிறது?

2018 ஜூன் மாதத்திற்கான ராசி பலன்களை எங்கள் ஜோதிட வல்லுநர்கள் கணித்துக் கொடுத்துள்ளனர். மகர ராசிக்குரிய மாதப் பலன்களை இங்கே விரிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

2018ம் ஆண்டு தொடங்கி ஐந்து மாதங்கள் முடிந்து விட்டது. ஆம். இந்த ஆண்டினுடைய 6 ம் மாதத்தின் தொடக்கத்தில் இன்று நாம் இருக்கிறோம். இந்த மாதத்தை எப்படி நல்ல முறையில் தொடங்கலாம்? இந்த மாதம் வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ளலாம். இந்த பதிவில், அனைத்து ராசிகளுக்குமான இந்த மாத பலன்கள் நம் ஜோதிட வல்லுநரால் கணித்துத் தரப்பட்டுள்ளது. இந்த பலன்களை அறிந்து கொள்வதன் மூலம், உங்களுடைய அதிர்ஷ்ட நேரம் மற்றும் கெட்ட நேரத்தை அறிந்து அதற்கேற்ற முறையில் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம். இம்மாத ராசிபலன்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெற்றி சூடும் மகர ராசியே!

வெற்றி சூடும் மகர ராசியே!

அலுவலகத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உங்களை வந்து சேரும். இதனால் மாதம் முழுவதும் அதிக பணிச் சுமை இருக்கும். நீண்ட நேரம் அலுவலகத்தில் இருக்க வேண்டிய சூழல் உருவாகும். உங்கள் குடும்பத்தினரை தவிர்க்காமல், வேலை பளுவையும் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் சமநிலையில் இருக்க வேண்டிய மனநிலையை உருவாக்கிக் கொள்வது மிகவும் அவசியம். இந்த அதிகமான அழுத்தம் உங்களை உடலளவிலும் மனதளவிலும் தளர்வடையச் செய்யலாம். அதனால் இதற்கான கோட்டை நிர்மாணிப்பது உங்களிடம் உள்ளது.

உங்கள் ராசியில் சூரியனின் ஸ்தானம் வலிமையாக உள்ளது. இதனால் கடினமான தேர்வுகளை தேர்ந்தெடுக்கும் சூழல் உருவாகலாம். சூரியன் உங்களுக்கு எதிர் ராசியைப் பார்க்கும்போது அதாவது 21ம் தேதிக்கு மேல் சில கஷ்டங்கள் உண்டாகலாம். நீங்கள் நினைத்த காரியம் நடக்காமல் இருக்கலாம். உங்களுடன் வேலை செய்யும் சக ஊழியர்கள் கூட உங்களுக்கு எதிராக திரும்பலாம். இந்த சூழ்நிலைகள் உங்களை மனதளவில் பாதிக்காமல் இருப்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த மாதம் உங்கள் பணம் மற்றும் நேரம் அதிகம் செலவாகும் நிலை உண்டாகும். ஆகவே இவற்றின் மேல் அதிக கவனம் கொள்ள வேண்டும். எந்த ஒரு பொருளும் நம் கையில் இருக்கும் போது அதன் மதிப்பு தெரியாது. அதனை இழந்தவுடன் தான் அதன் மதிப்பு நமக்கு புரியும். இது பொதுவாக எல்லோருக்கும் இருக்கும் இயல்பு தான். ஆனால் உங்களுக்கு இத்தகைய எண்ணம் வாராமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதிலும் மிகுந்த கவனத்துடன் இருங்கள். கிரகங்களின் நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால், அதிகம் முயற்சி செய்யாமல் கூட வெற்றி உங்களைச் சேரும். இது ஒரு நேர்மறை விளைவாகும். உங்கள் அறிவார்ந்த ஆற்றல்கள் எல்லா நேரத்திலும் உயர்ந்ததாக இருக்கும், இது உங்கள் நீண்ட கால இலக்குகளை நிறைவேற்ற உதவும்.

உங்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, ஜூன் மாதத்திற்கான உங்கள் ராசி பலன்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆரோக்கியம்

ஆரோக்கியம்

இந்த மாதம் சிகிச்சையை விட நோய்களைத் தடுப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். தியானம் மற்றும் உடற்பயிற்சி மூலம் உங்கள் ஆரோக்கியத்தை இந்த மாதம் மேம்படுத்துவீர்கள். உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நீச்சல், நடனம் போன்ற செயல்பாடுகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். உங்கள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதற்கான அட்டவனையை தயாரித்து நடப்பதால், உங்கள் உடலில் சேர்ந்துள்ள நச்சுகள் வெளியேறும். 21ம் தேதிக்கு பின்னர் உடல் நிலையில் கோளாறு ஏற்படும். அதுவும் குறைந்த காலத்திற்கு மட்டும் தான். வழக்கமான உடல்நல பரிசோதனைகள் எந்தவொரு தீவிர நோய்க்கும் எதிராக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உங்களுக்கு உதவும். மனஅழுத்தம் உங்களை ஓரளவு தொந்தரவு செய்யலாம். இதனைத் தடுப்பதற்கு , உங்களைக் குறைத்து மதிப்பிடாத அல்லது உங்களிடம் குற்றம் காணாத உங்களுடைய நெருங்கிய நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் வெளியில் சென்று வரலாம்.

தொழில்

தொழில்

உங்கள் வேலை சூழலில் கடினமாக உழைப்பவர் நீங்கள். ஆனால் இந்த கடினமான உழைப்பு உங்களுக்கு திருப்தியும் மன நிறைவும் தரும். உங்களுடைய குறிக்கோளை அடைய உதவும். இந்த மாதம் 22ம் தேதி வரை

உங்கள் தொழில்முறை இலக்குகளைத் தொடர நீங்கள் பிஸியாக இருக்கலாம். பணிகளை நிறைவேற்றும் போது அளவு குறைவாக இருந்தாலும் தரத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். நீங்கள் வேலை செய்யும் அலுவலகம் இடம் மாறலாம், அல்லது உங்களுக்கு இடமாற்றம் கிடைக்கலாம். எதுவாக இருந்தாலும் இந்த இடமாற்றம் உங்களுக்கு நேர்மறை விளைவுகளைக் கொடுக்கும். அலுவலக அரசியலில் உங்களை ஈடுபடுத்தும் சூழல் உருவாகும். அதில் நீங்கள் பாதிக்கப்பட்டு உங்கள் சக தொழிலாளர்கள் சுகம் காணலாம். உங்கள் சீனியரிடம் இருந்து வரும் எந்த ஒரு வாய்ப்பையும் நழுவ விட வேண்டாம். இது நிச்சயம் உங்கள் முன்னேற்றத்திற்கான ஒரு வாய்ப்பாக இருக்கும். உங்களை சுற்றி இருக்கும் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் உங்கள் வேலையின் தரத்தை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். விவாதங்களில் இருந்து விலகி இருங்கள். உங்களுக்கு கீழே வேலை பார்ப்பவர்களை நல்ல முறையில் நடத்த சிறப்பான கவனம் கொள்ளுங்கள். இது உங்கள் இமேஜை உயர்த்திக் காட்டும்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

இந்த மாதம் உங்கள் பொருளாதாரத்தில் அதிக கவனம் தேவை . இல்லையேல் சிக்கல் அதிகமாகும். அரசாங்கத்துடன் இருக்கும் எந்த ஒரு நிதித் தொடர்பும் தடையாக இருக்கும். எந்த ஒரு கிரகமும் உங்களுக்கு சாதகமாக இல்லாதததால் வருமானம் தடைபடும். இதனால் பல பிரச்சனைகள் தோன்றும். மேலும், உங்கள் பழைய முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருவாயும் உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற விதத்தில் இருக்காது.

புதிய முதலீடுகளை செய்யும் எந்தவொரு திட்டமும் உங்களிடமிருந்து அகற்றப்பட வேண்டும், மேலும் ஒரு நல்ல நாளுக்கு தள்ளி வைக்க வேண்டும். உங்கள் வருமானத்திற்கும் செலவுக்கும் ஒரு சம நிலை இல்லாமல் இருப்பது பல பிரச்சனைகளை உண்டாக்கும். முக்கியமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து உங்கள் நிதி ஆலோசனையை முன்கூட்டியே திட்டமிடும் பழக்கத்தை நீங்கள் தொடங்க வேண்டும். உங்கள் நிதி நிலையில் கிரகங்கள் எந்த ஒரு எதிர்மறை விளைவையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் நிதி ஆலோசகரின் அறிவுரைப்படி முடிவுகளை எடுப்பது எப்போதும் நன்மை தரும்.

காதல் வாழ்க்கை

காதல் வாழ்க்கை

சந்திர கிரகணம் , உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையில் சண்டையை தோற்றுவிக்கும். ஆனால் சமரசம் செய்து கொள்வது இருவருக்கும் நல்லது. சிலருக்கு காதல் தோல்வியும் ஏற்படலாம். இந்த உறவில் உணர்வு ரீதியாக அதிகம் அன்பு கொண்டிருந்தால் , உங்கள் பாதிப்பும் அதிகமாக இருக்கலாம். உங்களை நீங்களே தேற்றிக் கொண்டு அடுத்த வேலையில் இறங்கலாம். காலம் யாருக்காவும் காத்திருப்பதில்லை. உங்களுக்காக இன்னும் சிறந்த ஒருவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் மறக்க வேண்டாம். உங்களுக்கான அடுத்த வாய்ப்பு எப்போது எப்படி வரும் என்பதை உங்கள் கிரகம் முடிவு செய்யட்டும்.

இதே நேரம், திருமணம் ஆனவர்கள் தங்கள் திருமண வாழ்வில் அதிக இன்பத்தை அனுபவிப்பார்கள். உங்கள் இருவருக்கும் இடையில் உணர்வு பூர்வமான புரிதல் ஏற்படும். எல்லா நேரத்திலும் உங்கள் துணையிடம் நேர்மையாக இருப்பது நல்லது. நேர்மையான குணம் என்பது உறவில் அடித்தளமாக அமைவதாகும்.

இந்த மாத அதிர்ஷ்டம்

இந்த மாத அதிர்ஷ்டம்

உங்கள் அதிர்ஷ்ட நிறங்கள் - மஞ்சள், பிங்க் மற்றும் வெள்ளை

உங்கள் அதிர்ஷ்ட எண்கள் - 3, 21, 83, 84.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, June 1, 2018, 5:30 [IST]
Desktop Bottom Promotion