இந்த மே மாதத்தோட அதிர்ஷ்டக்காரரே விருச்சிக ராசிக்காரரான நீங்கதான்… என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமா?

Subscribe to Boldsky

வருகின்ற தடைகள் அனைத்தையும் எதிர்நோக்கி வெற்றி காணும் விருச்சிக ராசி அன்பர்களே! நீங்கள் உணர்வுப் பூர்வமாக செயல்படும் நபர்கள். இழப்புகளைக் கண்டு துவண்டு போகாமல் மீண்டும் முன்னோக்கி செல்லுபவர்கள் நீங்கள். இழப்புகளைக் கண்டு அஞ்சாமலும் அடிபணியாமலும் இருப்பவர்கள்.

இந்த நபர்கள் சகிப்புத்தன்மையற்றவர்களாக இருப்பார்கள். முடியாததை முடித்து காட்டும் வல்லமை இவர்களுக்கே உரிதான ஒன்றாக இருக்கும்.

இவர்களின் கவர்ந்திழுக்கும் தன்மையால் மற்றவர்களை எளிதாக தன் வசப்படுத்தி விடுவார்கள். அதே நேரத்தில் தங்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் மறைத்து கொண்டு உறவை காப்பவர்கள்.இந்த மாதம் உங்கள் ராசி ராதன் எந்த மாதிரியான அணுகூலன்களையும் கஷ்டங்களையும் வழங்க உள்ளார் என்பதை இந்த மே மாதம் 2018 ராசி பலன் மூலம் தெரிந்து பயனடையலாம். மேலும் உங்கள் தொழில், பொருளாதாரம், உடல் நலம், காதல் வாழ்க்கை இவற்றை பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

monthly predictions

உடல் நலம்

இந்த மாதத்தில் உங்கள் உடல் நலத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படலாம். உங்கள் உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உடற்பயிற்சி, மசாஜ் போன்றவற்றை மேற்கொள்ளலாம். உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்குவதில் கவனம் செலுத்துவது நல்லது. இது நீங்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

தொழில்

தொழிலில் போட்டி நிறைந்த மாதம் இது. உங்கள் தொழில் வளர்ச்சி மற்றவர்களுக்கு உதாரணமாக திகழும். மற்றவர்கள் பொறாமை படும் வகையில் நிறைய வாய்ப்புகள் உங்களை வந்தடையும். நிதானமாக செயல்படுவது நன்மை அளிக்கும். உங்கள் துணையும் உங்களுக்கு உறுதுணையாக இருந்து ஆதாயத்தை ஈட்டித் தருவார்கள். மறுபுறம் தொழில் விரிவாக்கத்தை பற்றிய பேச்சையும் மேற்கொள்வீர்கள்.மொத்தத்தில் நிதானமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

பொருளாதாரம்

இந்த மாதத்தில் பொருளாதார ரீதியாக எந்தவொரு பயணத்தை மேற்கொண்டாலும் அதனால் எந்த லாபமும் பயனும் இருக்காது. எழுத்தாளர்கள், ஓவியர்கள் மற்றும் கலைஞர்களுக்கு இது நல்ல நேரம் கிடையாது. எனவே முன்னேற்பாடாக பணத்தை சேமித்து வைத்து கொள்வது நல்லது. முடிந்த வரை வீண் செலவுகளை தவிர்ப்பது நன்மை அளிக்கும்.

காதல்

கல்யாணமாகதவர்களுக்கு அன்புத் துணை கூடி வரும். மேலும் உங்கள் இலக்குகளை விட அவர்கள் உறுதுணையாகவும் இருப்பர். சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டு சந்தோஷம் காண்பீர்கள். இதன் மூலம் உங்கள் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க முற்படுவீர்கள். துணையுடனான நெருக்கம் மிகவும் சந்தோஷமாக அமையும்.

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டமான எண்கள் :27,29, 45, 53 மற்றும் 89

அதிர்ஷ்டமான தேதிகள் :9,10,19,20,27, 28

அதிர்ஷ்டமான நிறங்கள் :வெள்ளை அல்லது ப்ரஸ்ஸியன் நீல நிறம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    Monthly Predictions For Scorpio Zodiac For May 2018

    May 2018 monthly predictions for Scoprio reveal about the favourable aspects of Jupiter, as it will result in very good earnings this month. Apart from this, having some of the speculative investments will also give good returns. After the 24th, these individuals need to be extremely cautious while dealing with others as well.
    Story first published: Tuesday, May 1, 2018, 11:45 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more