Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...!
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஜூன் மாதம் எப்படி இருக்கப்போகிறது?
2018 ஜூன் மாதத்திற்கான ராசி பலன்களை எங்கள் ஜோதிட வல்லுநர்கள் கணித்துக் கொடுத்துள்ளனர். சிம்ம ராசிக்குரிய மாதப் பலன்களை இங்கே விரிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
2018ம் ஆண்டு தொடங்கி ஐந்து மாதங்கள் முடிந்து விட்டது. ஆம். இந்த ஆண்டினுடைய 6 ம் மாதத்தின் தொடக்கத்தில் இன்று நாம் இருக்கிறோம். இந்த மாதத்தை எப்படி நல்ல முறையில் தொடங்கலாம்? இந்த மாதம் வரவிருக்கும் நிகழ்வுகளுக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ளலாம். இந்த பதிவில், அனைத்து ராசிகளுக்குமான இந்த மாத பலன்கள் நம் ஜோதிட வல்லுநரால் கணித்துத் தரப்பட்டுள்ளது.

இந்த பலன்களை அறிந்து கொள்வதன் மூலம், உங்களுடைய அதிர்ஷ்ட நேரம் மற்றும் கெட்ட நேரத்தை அறிந்து அதற்கேற்ற முறையில் உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம். இம்மாத ராசிபலன்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

மனதை கவரும் சிம்ம ராசிக்காரர்களே!
திறமையான பேச்சால் அனைவரின் மனதையும் கவரும் சிம்ம ராசி அன்பர்களே!
இந்த மாதம் முழுவதும் நல்ல முன்னேற்ற நிலை காணப்படும். உங்களது பேச்சுத் திறன் நாளுக்கு நாள் அதிகரிக்கும். இனி எல்லாமே உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களது கருணையும் நம்பிக்கையும் உங்களுக்கு பக்கபலமாக செயல்படும். இதனால் எதையும் முடித்து வெற்றி காண்பீர்கள். உங்களின் கவர்ந்திழுக்கும் இந்த ஆற்றல் மூலம் உங்களுக்கு ஒரு நல்ல துணை கிடைப்பார்கள்.
சூரியனின் ஆதிக்கம் உங்கள் ராசியில் இருப்பதால் நேர்மறையான ஆற்றலை பெற்று சிறந்து விளங்குவீர்கள். வழக்கமான வேலைகளைத் தவிர்த்து நிறைய கேளிக்கை நடவடிக்கை மூலம் நிறைய ஆற்றலை திரும்ப பெறுவீர்கள். உங்களது கடின உழைப்பு பாராட்டப்படும். உங்கள் குடும்ப பிரச்சினைகளை தவிர்ப்பது நல்லது. இல்லையென்றால் அதனால் உங்கள் வேலையில் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் போட்டித் தன்மையை கைவிட்டு விடுவது நல்லது.இந்த மாதம் பம்பரமாக சுழன்று செயல்படுவீர்கள். இதனால் நிறைய நண்பர்கள் புதிய தொடர்புகள் கிடைக்கும் பம்பர் பரிசை பெறுவீர்கள். உடற்பயிற்சி மற்றும் ஏரோபிக் போன்றவை உங்கள் உடலை கச்சிதமாக வைக்க உதவும். உங்கள் ராசிக்கான முழு பலன்களையும் கீழ்க்கண்டவாறு காணலாம்.

உடல் நலம்
இந்த மாதம் மன அழுத்தம் மற்றும் உடல் நலக் குறைவால் நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். எனவே உங்கள் உடல் நலத்தை பேணிக் காக்க சற்று சிரமம் எடுக்க வேண்டும். உடற்பயிற்சி வகுப்புகளில் சேர முடிவு செய்வீர்கள். வெளியே கடைகளில் கிடைக்கும் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களை கட்டுப்படுத்த கஷ்டமாக இருந்தாலும் அதை தவிர்ப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. பேக்கிங் உணவுகளை சாப்பிடும் போது கவனமாக இருங்கள். அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களால் உங்களுக்கு அழற்சி ஏற்படலாம். மனதளவிலும் நீங்கள் ஆரோக்கியமற்ற நிலையை உணர்வீர்கள். மருந்துகள் பலனளிக்காது. உங்கள் மன நிலையை மாற்றுவதே உங்களுக்கு ஒரு நல்ல தீர்வை கொடுக்கும். மன ஆரோக்கியமே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தொழில்
இந்த மாதம் வேலையில் உங்கள் மேலதிகாரியை எளிதாக கவர்ந்து விடுவீர்கள். இதனால் சக ஊழியர்கள் உங்கள் மீது பொறாமை கொள்ளும் நிலை ஏற்படும். இந்த நிலை உங்களுக்கு சாதகமாக அல்லது எதிராக கூட அமையலாம். வேலையிடங்களில் எல்லாருடனும் நல்ல தொடர்பை மேற்கொண்டால் கண்டிப்பாக அது உங்களுக்கு நன்மையை தேடித் தரும். உங்கள் சக ஊழியர்களையும் ஊக்குவிங்கள் இது உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு நல்ல உறவு நிலையை ஏற்படுத்தும். கவனிப்பு என்பது இயற்கையாகவே உங்கள் கூடவே பிறந்தது. உங்கள் வித்தியாசமான செயலால் அனைவரையும் கவர்ந்து இழுப்பீர்கள். எவ்வளவு பெரிய கூட்டத்திலும் உங்கள் வித்தியாசமான குணத்தால் தணித்து ஜொலிப்பீர்கள். ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்த மாதம் உங்கள் இதயத்தை பின்தொடருங்கள் ஆனால் உங்கள் மூளையை விட்டுவிடாதீர்கள். இதயத்துடன் மூளையின் பேச்சையும் இணைத்து பயணம் செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.

பொருளாதாரம்
இந்த மாதம் பொருளாதார ரீதியாக சற்று சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. உங்கள் கூர்மையான அறிவு கடந்த கால தவறுகளை அறிந்து கொள்ள உதவும். நீண்ட கால திட்டங்களுக்கான முதலீடுகளை தொடங்குவீர்கள். உங்கள் ஓய்வு நேரங்களிலும் பொழுதுபோக்கு அம்சங்களிலும் அதிகமாக செலவழிப்பதில் கவனமாக இருக்க மாட்டீர்கள். இது உங்கள் நிதி நிலையில் அழுத்தத்தை ஏற்படுத்தும் எனவே கவனமாக செயல்படுங்கள். மருத்துவ செலவுகள் அதிகமாகும். உங்கள் ராசி ராதன் சாதமாக இருப்பதால் நல்ல பண வரவும் வரும். ஆனால் உங்கள் பொருளாதார நிலையை தவறாக பயன்படுத்தாதீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி புதுப்பிப்பீர்கள். குடும்பத்துடன் இன்ப சுற்றுலா நல்ல உறவை நீடிக்கும். உங்கள் நட்பையும் உங்கள் பொருளாதாரத்தையும் தனியே வைத்து செயல்படுங்கள். அவர்களுடன் முதலீட்டில் ஈடுபட்டால் திரும்ப பெறுவதில் சிரமம் ஏற்படலாம்.

காதல் வாழ்க்கை
இந்த மாதம் பெரிய அளவில் சமூக தொடர்பில் ஈடுபட்டு உங்கள் துணையை கண்டறிந்து விடுவீர்கள். ஏற்கனவே காதல் உறவில் இருப்பவர்களுக்கு இது ஒரு சிக்கலான காலமாகும். உங்களைப் போலவே உங்கள் துணையும் ராயலாக இருக்க நினைப்பீர்கள். மூணாவது நபர்களின் இடையூறால் உங்கள் இருவருக்கிடையே சண்டை நேரலாம். இது உங்கள் துணையின் மீதான நம்பிக்கை மற்றும் உறவை கடினமாக்கும். திருமண உறவில் இருப்பவர்கள் உங்கள் துணையுடன் சந்தோஷமாக கொண்டாடுவீர்கள். சீக்கிரமே நல்ல செய்தி தேடி வரும்.

இந்த மாத அதிர்ஷ்டம்
அதிர்ஷ்டமான நிறங்கள் : பச்சை மற்றும் நீல நிறம்
அதிர்ஷ்டமான எண்கள் : 2 மற்றும் 6.



Click it and Unblock the Notifications











