Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 4 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
5 மாதங்களில் 2 முறை நடக்கும் குருப்பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது... -
4 தக்காளி, 2 வெங்காயம் இருந்தா.. இட்லி, தோசைக்கு இந்த சைடு டிஷ் செய்யுங்க.. குழப்பி அடிப்பாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனநிம்மதியான நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
ஏப்ரல் மாதத்தில் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கொத்தமல்லி பச்சடியை செய்யுங்க... டேஸ்ட் தாறுமாறா இருக்கும்...! -
ஒரே தொகுதியில் பலமுறை வெற்றி பெற்று தனது கோட்டையாக மாற்றிய அரசியல் தலைவர்கள்! யார்யார்-ன்னு பாருங்க.. -
பர்பெக்ட்டான கணவராக இருக்கும் 4 ராசிகள் இவங்கதான்... இவங்க புருஷனா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்...! -
செவ்வாயால் உருவாகும் லாப யோகம்: ஏப்ரலில் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது..
தவறான செல்ஃபி படத்தால் இன்டர்நெட்டில் வைரலான நபர்கள் - # Mirror Selfie Fails
பச்சையாக பொய் சொல்லி சிக்கிய மிரர் செல்ஃபி படங்கள் # Mirror Selfie Fails
இன்னிக்கு உலக ஸ்மார்ட் போன் சந்தை குறிவைக்கிறது இளைஞர்கள தான். அவங்களுக்கு வேண்டியது ரெண்டே விஷயம் தான். ஒன்னு செல்ஃபி கேமரா, மியூசிக். இன்னொன்னு நிறைய ஜிபி ரேம், ரோம்... மத்தப்படி பிராசசர் எவ்வளோ சீப்பா இருந்தாலும் யாரும் கண்டுக்கிறதே இல்ல.
இதுக்கெல்லாம் காரணம் நம்ம வாழ்க்கையில அடிக்ஷனா இருக்க செல்ஃபி மோகம் தான். கடைசியா நாம எப்போ குடும்பத்தோட க்ரூப் போட்டோ எடுத்துக்கிட்டோம்னு யோசிச்சா... அது போன யுகமா தான் இருக்கும். இப்போ எல்லாமே செல்ஃபி, க்ரூப்ஃபி தான்.
இதுல ஏகப்பட்ட செல்ஃபி சவால்கள் வேற இன்டர்நெட்ல மாசத்துக்கு ஒன்னு டிரெண்ட் ஆகுது. இதுக்கு நடுவுல மிரர் செல்ஃபின்னு ஒன்னு ரொம்ப நாளா ட்ரெண்ட்ல இருக்கு.
அதாகப்பட்டது கண்ணாடியில தெரியிற மாதிரியான செல்ஃபி எடுக்குறது... இதுல கொஞ்சம் ஏடாகூடமா தப்புத்தப்பா எடுத்து மாட்டிக்கிட்ட செல்ஃபி தொகுப்பு தான் நாம இதுல பார்க்க போறோம்...

மிரர் செல்ஃபி ஃபெயில் #1
முன்னாடி இருக்க கண்ணாடிய மட்டும் போதுமாம்மா... பின்னாடி இருக்க கண்ணாடியையும் பார்க்க வேண்டாமா... ஸ்மைல் நல்ல இருக்குன்னு யோசிக்காம சோஷியல் மீடியாவுல போஸ்ட் பண்ணா இப்படி தான் இன்டர்நெட் முழுக்க வைரலாக்கி விட்டுடுவாங்க...

மிரர் செல்ஃபி ஃபெயில் #2
அதாகப்பட்டது பொது ஜனங்களே... தம்பி என்ன சொல்ல வரார்ன்னா... இவரு அசந்த பார்த்த நேரமா பார்த்து... இவரோட லவ்வர் போட்டோ புடிச்சுட்டாராம்... அடேய்... நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்ங்கிற மாதிரி நடிச்சா மட்டும் பத்தாது... கொண்டை மேல இருக்க மண்டையையும் மறைக்கணும்... சாரி.. சாரி... ஏதோ நியாபகத்துல செயல் தலைவர் மாதிரி பேசிட்டேன்.. மண்டை மேல இருக்குற கொண்டையையும் மறைக்க கத்துக்குங்க தம்பி... இப்ப சரியா இருக்குல... ஹிஹிஹி!!!

மிரர் செல்ஃபி ஃபெயில் #3
இந்த பொண்ணுங்க கழிவறைய ஒரு மேக்கப் ரூம், செல்ஃபி எடுக்குற பூத்தா தான் பாக்குறாங்க... சரி என்னமோ பண்ணிட்டு போங்க... நீங்க சிரிச்சு அழகா படம் எடுக்குறதுல எந்த தப்பும் இல்ல. உங்க ஃபிரெண்ட் அங்க எதிருல என்ன பண்றாங்கன்னு கூட பார்க்காமலா படம் எடுப்பீங்க.. சரி படம் தான் எடுப்பீங்க.. எப்படியும் எடிட் பண்ணாம போஸ்ட் பண்ண மாட்டீங்க... அப்ப கூடவா அத கவனிக்கல.

மிரர் செல்ஃபி ஃபெயில் #4
அஹா... தூக்குறது ரெண்டர கிலோ வெயிட்டு.. இதுக்கு எதுக்கு அம்புட்டு டைட்டா பல்ல எல்லாம் கடிச்சுக்கிட்டு... ஹே.. ஹே.. ஹே... நிப்பாட்டு... நிப்பாட்டு.... நிப்பாட்டு... அதென்ன பின்னாடி ஏதோ ரோஸ் கலர்ல இருக்கு... ஒருவேள இது அதுவா இருக்குமோ.... அதே தான்... தப்பு மேல.. தப்பு பண்றீங்களே ஜி... ஆம்பளையும் ஆம்பளையும் டிஞ்சு கூட பண்ணிக்குங்க.. அதுக்குன்னு செல்ஃபி படத்துல தெரியிற மாதிரியா...?!?!?!

மிரர் செல்ஃபி ஃபெயில் #5
நல்ல அழகான கண்ணு... கியூட் எக்ஸ்பிரஷன்... அந்த மஞ்ச கலர் ஜெர்சிய பார்க்கும் போது சி.எஸ்.கே ரசிகையா இருக்குமோன்னு ஒரு யோசனை கூட வரத்தான் செய்யுது... ஆனா... ஜனாங்கிற உன்னோட அழகான பேரு.. பின்னாடி இருக்க கண்ணாடியில "பின்னாடி" மாதிரியான பொருள் தர பெயரா மாறிடுச்சே.. அத கவனிக்க மறந்துட்டீங்களே மேடம்.

மிரர் செல்ஃபி ஃபெயில் #6
மறுக்கா... மறுக்கா பாருங்களேன்.. அதிகமா இந்த மிரர் செல்ஃபி எடுக்குறதும் இந்த பொண்ணுங்க... அதுலயும் அதிகமா ஃபெயிலாகுறது இதே பொண்ணுங்க தான். முன்னாடி இருக்க கண்ணாடியில முகம் எப்படி வந்திருக்குன்னு பார்க்க தெரிஞ்ச உங்களுக்கு... பக்கத்துல இருக்க ஜூம் கண்ணாடியில வேற மாதிரி வந்திருக்குறத கவனிக்க தெரியாம போச்சே...

மிரர் செல்ஃபி ஃபெயில் #7
இத கண்டிப்பா எல்லாரும் ட்ரை பண்ணியிருப்பாங்க... அதுவும் ஜிம்முக்கு போன நாலு நாள்ல ஏதோ அர்னால்டு மாதிரி ஆர்ம்ஸ் வளர்ந்த மாதிரி எல்லாம் சீன போடுற ஆளுங்க ரொம்பவே அதிகம். சீன் போட்டா பரவாயில்ல.. ஏம்பா தம்பி மிரர் செல்ஃபி எடுத்தியே... அதுல உன் ட்ரிக்ஸ் அப்பளமா நொறுங்குனத கவனிக்க மறந்துட்டியே...

மிரர் செல்ஃபி ஃபெயில் #8
நாம் முன்னாடி ஒரு பையன பார்த்தோமே... கார் கண்ணாடியிலே சிக்கி சின்னாப்பின்னமாகி போனானே... அவனுக்கு நெருங்குன சொந்தமா தான் இந்த பொண்ணு இருக்கணும். அதாகப்பட்டது... இவங்க குளிக்க பாத்ரூம்குள்ள வந்ததும்.. பின்னாடியே லவ்வர் மொபைல் எடுத்துக்கிட்டு போட்டோ எடுக்க வந்ததாகவும்.. அத இவ்வங்க வேண்டாம் ஹனின்னு தடுத்ததாகவும் சோசியம் மீடியாவுல பகிர்ந்திருக்காங்க... ஆனா இதுல நடந்த சோகம் என்னன்னா... இவங்க பாத்ரூம் கண்ணாடியே இவங்கள பழிவாங்கிடிச்சு...

மிரர் செல்ஃபி ஃபெயில் #9
இப்படியான சந்கோஜத்துல நிறைய பேரு மாட்டி இருப்பாங்க. அதுலயும் கார் கண்ணாடியில சிக்குனவங்க.... கண்ணாடி வெச்ச காலேஜ்ல மத்த க்ளாஸ் ரூம்க்கு வெளியில ஹேர்ஸ்டைல் அட்ஜஸ்ட் பண்ணி மாட்டுன கேசுங்க எல்லாம் நிறையவே இருக்கு. பாவம் இந்த அம்மணி நடுரோட்டுல மாட்டியிருக்கு... இவங்களுக்கு எல்லாம் அந்த பக்கமா இருக்கவங்க பார்த்தா அப்பட்டமா தெரியும்கிற விஷயமே தெரியாதா?

மிரர் செல்ஃபி ஃபெயில் #10
இது மாட்டுனது இந்த அம்மணி இல்ல... இந்த அம்மணி வீட்டு நாய்... ஏம்மா நீங்க அழகா இருக்கீங்களான்னு பார்க்க தெரிஞ்ச உங்களுக்கு... அந்த போட்டோல என்னெல்லாம் பதிவாகியிருக்குன்னு பார்க்க தெரியாம போச்சே... உங்க வீட்டு நாய் குட்டிக்கு கொஞ்சம் தண்ணி வெக்க மாட்டீங்களா.. அது எங்க போய் நிக்குதுன்னு பாருங்க...

மிரர் செல்ஃபி ஃபெயில் #11
பப்பி ஷேம்... ஒன்னு நீங்க சிரிச்ச முகமா அழகா போஸ் கொடுக்கணும். இல்லாட்டி போட்டோ எடுக்குற ஆளாவது கொஞ்சம் நல்லா இருக்க சொல்லணும்... நீங்க சரியா போஸ் கொடுக்கல சரி... ஆனா உங்க வூட்டுக்காரர் செம்மையா போஸ் கொடுத்திருக்காரு... அதுவேற கண்ணாடியில தெரியிற மாதிரி. இத எல்லாம் டெலிட் பண்ணாம சேவ் பண்ணி வெச்சா.. இப்படி தான் டிரால் பண்ணி விளையாடுவாங்க...



Click it and Unblock the Notifications











