உங்கள் பிறந்த தேதி படி உங்கள் வாழ்க்கை துணை எப்படி இருப்பார் தெரியுமா?

உங்கள் பிறந்த தேதிதான் உங்கள் குணநலன்களை தீர்மானிக்கும் ஒன்றாக உள்ளது. உங்கள் பிறந்த தேதியின் கூட்டுத்தொகைஉங்களின் திருமண வாழ்வை கூட கணிக்கலாம். இந்த பதிவில் உங்களின் பிறந்த தேதி படி உங்களுடைய குணநலன்

By Saranraj

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்று. திருமண பேச்சை எடுத்தாலே முதலில் பெரும்பாலானோர் வீட்டில் ஆரம்பிக்கும் முதல் பிரச்சினை ஜாதகம்தான். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஜாதகத்தின் சொற்படியே நிறைய திருமணங்கள் முடிவுசெய்யப்படுகிறது . ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவரின் பிறந்த தேதி என்பது மிகவும் முக்கியமானது.

Marriage predictions

ஒருவரின் பிறந்த தேதி மற்றும் நேரத்தை வைத்துதான் அவருடைய ஜாதகம் கணிக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது உங்கள் பிறந்த தேதிதான் உங்கள் குணநலன்களை தீர்மானிக்கும் ஒன்றாக உள்ளது. உங்கள் பிறந்த தேதியின் கூட்டுத்தொகைஉங்களின் திருமண வாழ்வை கூட கணிக்கலாம். இந்த பதிவில் உங்களின் பிறந்த தேதி படி உங்களுடைய குணநலன் மற்றும் திருமண வாழ்க்கை பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 எண் 1: பிறந்த தேதி - 1, 10, 19, 28

எண் 1: பிறந்த தேதி - 1, 10, 19, 28

பிறந்த தேதியின் கூட்டுத்தொகை 1 என வருபவர்கள் இயற்கையாகவே தலைமை பண்பு உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து காரியங்களையும் தானே முன்னெடுத்து செல்ல வேண்டும் என விரும்புவார்கள். இவர்கள் தங்கள் துணையினை எப்போதும் கட்டுப்படுத்த முயற்சிப்பார்கள். அவர்களின் ராசியை பொறுத்து அவர்களின் குணநலன்கள் மாறுபட்டாலும், பொதுவாக அவர்கள் விரும்பாத ஒரு செயலை அவர்களை செய்ய வைப்பது என்பது இயலாத ஒன்று. ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் எப்பொழுதும் தங்கள் துணையை விட்டுவிட முயற்சிக்கமாட்டார்கள். ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் தங்களின் துணைக்கு எப்பொழுதும் நேர்மையாக இருப்பார்கள். நீங்கள் ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களை காதலித்தாலோ அல்லது திருமணம் செய்திருந்தாலோ நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.

எண் 2: பிறந்த தேதி - 2, 11, 20, 29

எண் 2: பிறந்த தேதி - 2, 11, 20, 29

2ஆம் தேதியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் அமைதியனவர்களாகவும், எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தங்கள் துணையுடனான மனரீதியான தொடர்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். இவர்கள் உடல்ரீதியான தொடர்பை காட்டிலும் மனரீதியான தொடர்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்களின் மனநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும், எனவே இவர்களை சமாளிப்பது சற்று கடினமான ஒன்று. எனவே இவர்கள் நிலையான மனநிலை உள்ளவர்களுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

எண் 3: பிறந்த தேதி - 3, 12, 21, 30

எண் 3: பிறந்த தேதி - 3, 12, 21, 30

பிறந்த தேதி மூன்றாக இருப்பர்வர்கள் கிட்டத்தட்ட 1ஆம் எண்ணில் பிறந்தவர்கள் போலத்தான் இருப்பார்கள், காதல் மற்றும் திருமணத்தை தவிர. இவர்கள் மிகவும் எதார்த்தமானவர்களாக இருப்பார்கள் அதேசமயம் மனதை விட மூளை சொல்வதை கேட்டு நடப்பவராக இருப்பார்கள். இவர்கள் தங்களுக்கான விதிகளை தானே உருவாக்கி கொள்பவர்களாகவும், பயமற்றவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அவ்வளவு ரொமான்டிக்காக இருக்க மாட்டார்கள், எனவே அதனை ஈடுசெய்யும் பொருட்டு ரொமான்டிக்கானவர்களை திருமணம் செய்து கொள்வது நல்லது.

எண் 4 : பிறந்த தேதி - 4, 13, 22, 31

எண் 4 : பிறந்த தேதி - 4, 13, 22, 31

இவர்கள் வழக்கத்திற்கு மாறானவர்களாக இருப்பார்கள். 4ஆம் எண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். இவர்கள் ரொமான்டிக்கானவர்களாக இருக்கமாட்டார்கள் அதேசமயம் பாலியல் உறவில் அதிக நாட்டம் உடையவர்களாக இருப்பார்கள். தன் கோபத்தால் தன்னுடைய துணையை இழந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.

எண் 5 : பிறந்த தேதி - 5, 14, 23

எண் 5 : பிறந்த தேதி - 5, 14, 23

எண் 5ல் பிறந்தவர்கள் பெரும்பாலும் திருமணத்திற்கு முன் பல பேருடன் நெருக்கமான நட்பில் இருப்பவர்களாக இருப்பார்கள். தங்களுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள் அதே சமயம் மிகவும் ரொமான்டிக்கானவர்களாகவும் . இவர்கள் அனைத்திலும் மாற்றங்களை விரும்பிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் மனநிலை அடிக்கடி மாறிக்கொண்ட இருக்கும் என்வே நிலையான மனநிலை உடையவர்களை திருமணம் செய்தால் இவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இவர்களுக்கு சிறந்த பொருத்தம் எண் 8ல் பிறந்தவர்கள்தான்.

எண் 6: பிறந்த தேதி - 6, 15, 24

எண் 6: பிறந்த தேதி - 6, 15, 24

எண் 6 என்பது வெள்ளி கிரகத்தின் எண். வெள்ளி அமைதி மற்றும் அன்பின் கிரகமாகும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் எளிதில் பிறரை வசீகரிக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய அன்பே இவர்களுக்கு பல சிக்கல்களை உருவாக்கும். எளிதில் உணர்ச்சிவச படுவதால் துணையுடன் சிரியத்தில் இருந்து பெரியது வரை என பல சண்டைகள் வரும். எனவே எண் 2 ல் பிறந்தவர்கள் இவர்களுக்கு சிறந்த துணையாக இருக்க வாய்ப்புள்ளது.

எண் 7: பிறந்த தேதி - 7, 16, 25

எண் 7: பிறந்த தேதி - 7, 16, 25

எண் 7ல் பிறந்தவர்கள் பொதுவாக மிகவும் குறைவாக பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். அதிகம் சிந்திப்பவர்களாகவும், கனவு காண்பவர்களாகவும் இருப்பார்கள், காதலுடன் இருப்பதிலும் எந்த குறையும் இருக்காது. வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு துணையுடன் மனரீதியாக இணைக்கப்பட வேண்டியது அவசியம். எண் 5 ல் பிறந்தவர்கள் இவர்களுக்கு மிகசிறந்த துணையாக இருப்பார்கள். சிறிய விஷயங்களை எல்லாம் தலையில் ஏற்றிக்கொண்டு

கடுமையான வாங்குவதம் செய்வார்கள் எனவே இவர்களின் துணை பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.

எண் 8: பிறந்த தேதி - 8, 17, 26

எண் 8: பிறந்த தேதி - 8, 17, 26

எண் 8ல் பிறந்தவர்கள் வலுவானவர்கள் ஆனால் உணர்ச்சிவச படக்கூடியவர்கள். அனைத்து எண்களை காட்டிலும் 8ல் பிறந்தவர்கள் உறவில் அதிக நேர்மையுடன் இருப்பார்கள். ஆனால் இவர்கள் அனைவராலும் தவறாக புரிந்துகொள்ள படுவார்கள் அதுதான் இவர்களின் பிரச்சினை. 8ல் பிறந்த பெண்கள் திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகளை சந்திப்பார்கள். உறவு, காதல் என்று வரும்போது இவர்கள் தங்கள் இதயம் சொல்வதையே கேட்பார்கள். இவர்கள் தங்கள் துணையுடன் இணைய அதிக காலம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் இணைந்துவிட்டால் அவர்களின் உறவு மிக அழகானதாய் இருக்கும்.

எண் 9: பிறந்த தேதி - 9, 18, 17

எண் 9: பிறந்த தேதி - 9, 18, 17

எண் 9 செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது. பொதுவாகவே செவ்வாய் அழிவின் கிரகமாகும். அதனால்தான் எண் 9 ல் பிறந்தவர்கள் அதிக ஆற்றலுடனும், கோபக்காரர்களாகவும் இருக்கிறார்கள். அதேசமயம் இவர்கள் அதிக உணர்ச்சிவச படக்கூடியவர்கள் ஆனால் அதனை மற்றவர்களுக்கு காட்டமாட்டார்கள். இவர்கள் தங்களின் துணையிடம் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தார் மீதும் அதிக அன்பு செலுத்துபவர்களாக இருப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion