Latest Updates
-
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும்
மனைவியை விற்க முயன்ற நபர்! மொத்த குடும்பத்தையும் பணத்திற்கு விலை பேசிய அவலம்
போதைக்கு அடிமையான நபர் கடன் தொகை அதிகமானதால் பணத்திற்காக தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை விற்ற சம்பவம் எல்லாரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
குடிக்கு அடிமையானவர்கள் அந்த போதை பழக்கத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிவார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஓர் சான்றாக அமைந்திருக்கும். மதுவுக்கு அடிமையாவதால் ஏற்படுகிற உடல் ரீதியிலான மாற்றம், உபாதைகள், மன ரீதியாக அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் இதனால் அவர்களைச் சுற்றி ஏற்படுகிற பிரச்சனைகள் அதனால் ஏற்படுகிற விளைவுகள் என நாள்தோறும் பார்த்திருப்போம்.
இது ஒரு படி மேலேயே போயிருக்கிறது. மஹாபாரதத்தில் சூதாடி தன்னுடைய சொத்து ராஜ்ஜியம் என அனைத்தையும் இழந்தவர் கடைசியாக மனைவியையும் வைத்து விளையாடுவார்.

#1
ஆந்திர மாநிலம் குர்நூல் மாவட்டத்தில் உள்ள கோய்லகுண்டலா என்னும் இடத்தை சேர்ந்தவர் பசுபுலேடி மத்திலெட்டி. 38வயதான இவர் குடிக்கு அடிமையானவராக இருந்தார். மேலும் இவருக்கு சூதாடும் பழக்கமும் இருந்திருக்கிறது.
இவர் தான் வாங்கிய கடனுக்காக தன்னுடைய மகள்களையும் மனைவியையும் விற்க முயன்றது தெரியவந்திருக்கிறது.

#2
இவருக்கு வெங்கடம்மா என்ற மனைவியும் 17 ,10,8,6 ஆகிய வயதுகளில் நான்கு பெண் குழந்தைகளும் நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. ஆட்டோ டிரைவரான மத்திலெட்டி தினமும் குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
ஒரு கட்டத்தில் வேலைக்குச் செல்வதை நிறுத்தி முழுநேர குடிகாரனாகிவிட்டார் மத்திலெட்டி.

#3
கடன் வாங்கி குடிப்பது பின் மீண்டும் அதை திரும்பச் செலுத்த இன்னொரு இடத்தில் கடன் அதை அடைக்க தன்னுடைய பொருட்களை விற்பது என்றே பல வருடங்கள் தொடர்ந்திருக்கிறது. இந்நிலையில் கடன் தொகை பதினைந்து லட்சத்தை தொட்டதும் சுற்றியிருந்த கடன்காரர்கள் எல்லாம் நெருக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இதிலிருந்து தப்பிக்கவும் மேலும் தனக்கு பணம் வேண்டும் என்று நினைத்த மத்திலெட்டி தன் மகள்களை விற்க முன் வந்திருக்கிறார்.

#4
முதலில் பதினேழு வயது மகளை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்றிருக்கிறார். மகளுக்கு பதினேழு வயது என்று சொன்னதுடன் பணத்தை கொடுத்தவரே மகளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னதாக மத்திலெட்டி தெரிவித்திருக்கிறார்.
மேலும் மனைவி மற்றும் மற்ற மூன்று பெண் குழந்தைகளையும் தன்னுடைய அண்ணனிடம் ஐந்து லட்ச ரூபாய் பணத்திற்கு விற்பதாக ஒப்புக் கொண்டிருந்தார் மத்திலெட்டி.

#5
இந்நிலையில் பணத்தை கொடுக்க வேண்டும் என்றால் மனைவி இதற்கு சம்மதித்து கையெழுத்து போட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் அண்ணன். இதனால் என்னுடைய மனைவி மற்றும் மகள்களை விற்கிறேன் என்று எழுதப்பட்ட ஒப்பந்த பத்திரத்தில் மனைவியின் கையெழுத்து கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார்.
முதலில் மறுத்து வந்தவர், நாளடைவில் கையெழுத்து போடச்சொல்லி தன்னையும் தன் குழந்தைகளையும் அடித்து துன்புறுத்துவதாக கூறி அங்கிருந்து கிளம்பி தன் தாய்விட்டிற்கு வந்துவிட்டார் வெங்கடம்மா.

#6
அங்கே வந்த மத்திலெட்டி பத்துவயதுடைய மகளை கடத்திச் சென்று விற்க முயன்றிருக்கிறார். இதனையறிந்து குழந்தையை காப்பாற்றிய வெங்கடம்மா நேராக போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார்.
தன்னை அடித்து கொடுமை படுத்துவத்துவதோ தன்னையும் தன் குழந்தைகளையும் பணத்திற்காக விற்பனை செய்ய நினைக்கிறார் என்று புகார் அளித்தார்.

#7
மத்திலெட்டி புடகா ஜங்கலு என்ற சமூகத்தை சேர்ந்தவர். இந்த சமூக மக்களை பொருத்தவரையில் தங்களுடைய மனைவியை விற்பதும் அல்லது அடகு வைத்து மீட்பதும் மிகச் சாதரணமாக அன்றாடம் நடைபெறும் இயல்பான ஓர் நடைமுறை. முதலில் கணவன் மனைவியை விற்க முயன்றார் என்று வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்திருக்கிறது.

#8
வெங்கடம்மா விடாது தனக்கும் தன் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து போராட விஷயம் மீடியாவில் கசிந்திருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத்துறை இந்த விஷயத்தை கையில் எடுத்தார்கள்.
இப்போது அனைவரும் பாதுகாப்பான ஹோமில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். மூத்த மகள்கள் இருவரை மட்டும் தனியாக வேறொரு ஹோமில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications
