ஜிம்முக்கு போறோம்னு ஒப்பேத்துற பாய்ஸ்.... உங்களுக்காகத்தான்!

Posted By: Staff
Subscribe to Boldsky
ஜிம்முக்கு போறோம்னு ஒப்பேத்துற பாய்ஸ்.... உங்களுக்காகத்தான்! | Boldsky

பிரபலமாக வேண்டும், தன் பெயர் மக்கள் மத்தியில் வைரலாகவேண்டும் என்று சொல்லி சிலர் எந்த எண்டுக்கும் போவாரக்ள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் இவர் தான். கடந்த வாரம், ப்ரியா பிரகாஷ் வாரியர் தன்னுடைய ரொமாண்டிக் கண்ணசைவினாலும் சிரிப்பினாலும் இணைய உலகத்தையே அசைத்துப் பார்த்துவிட்டார் என்றே சொல்லாம்.

இதோ அடுத்தாக ஒரு ஆண் அந்த வேலையை செய்ய களமிறங்கிவிட்டார். ஜஸ்ட் சுல் என்று இன்ஸ்டாகிரம் பக்கத்தை ஆரம்பித்து இவர் பகிரும் ஒவ்வொரு படங்களுமே செம்ம வைரல். நாம் எல்லாம் கொண்டாடிக் கொண்டிருக்கிற செல்பிரிட்டிகளின் படத்தையும் அதே போல அலங்காரங்களை செய்து தன்னையும் மேட்ச் செய்து வெளியிடப்படும் கம்பேரிசன் போட்டோஸ் மிக வைரலாய் பரவிக்கொண்டிருக்கிறது.

தொப்பை வயிறுடன் 44வயதுடைய இவர் மெக்கானிக்கல் இன்ஜினியர்,நிறையப்பணமும், கொஞ்சம் குசும்பும்,கொஞ்சம் கணினி வித்தையும் தெரிந்திருந்தால் நீங்களும் வைரல் ஆகிடலாம். இவர் தன்னைத் தானே பகடி செய்து கொள்கிறாரா அல்லது நம்மை எல்லாம் பகடி செய்கிறாரா நீங்களே பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

கைல் ஜென்னர் க்ரே கலர் உடையில் செல்ஃபி எடுப்பதை அப்படியே கம்பேர் செய்து அவர் வெளியிட்டிருக்கும் படம். அதே நிற உடையை தேர்ந்தெடுத்து, அவரைப் போலவே நீளமான தலைமுடி விக் வாங்கினால் மட்டும் போதாது பாஸ்..... மூச்ச கொஞ்சம் இழுத்துப் பிடிங்க.

#2

#2

வந்தனம் ஐய்யா.... வந்தனம்.... ஜஸ்டின் பைபர் பாடி கட்ஸுடன் ரொம்பாண்டிக் போஸ் கொடுக்க, கண்ண நோண்டிப்புடுவேன் என்று நம் இன்ஜினியர் கொடுக்கும் போஸ் இது. காஸ்டியூம் செலவு மிச்சம் என்று இந்த படத்தை தேர்ந்தெடுத்திருப்பார் போல.....

#3

#3

இங்க மட்டுமில்ல அமெரிக்காவையும் விட்டு வைக்கமாட்டோம்ல.... அமெரிக்காவின் பின்னணிப்பாடகி ப்ரிட்டினி ஸ்பியர்ஸ் போல சுல் கொடுத்த ஈஈ..... போஸ். தலை பின்னத்தெரியாது என்பதால் போனி டெயில் போட்டிருக்கிறார். பார்ப்பவர்கள் மன்னித்தருள வேண்டுகிறோம்.

#4

#4

பிரவுன் கலர்ல தாடி எல்லாம் வளராதே தம்பி.... லியானல் மெஸ்ஸியை காப்பியடிக்க போட்டோ எடுத்து உடையெல்லாம் ரெடி செய்த பிறகு தான் மூஞ்சில பிரவுன் கலர்ல என்னமோ இருக்கே என்று தெரியவந்திருக்கிறது.

அவசர அவசரமாக ஒட்டு தாடியை சரியாக ஒட்டாமல் ஒரு க்ளிக்.

#5

#5

லேசர் ஆங்கிலாவ். ஃபிட்னஸ் ட்ரைனர்,பாடி பில்டர். பிரபலங்கள் பலருக்கும் ஃபிட்னஸ் ட்ரைனராக இருந்து பார்ப்பவர்கள் எல்லாம் அசரும் வகையில் உடலை கட்டுக்கோப்பாக மாற்ற டயட் மற்றும் உடற்பயிற்சியை கற்றுத் தருகிறார். அவரிடம் 6 பேக் ஆசான் கொடுக்கும் போஸ் இது! பயப்பட வேண்டாம் எடிட்டிங் உதவியுடன் அருகருகில் நிற்கவைக்கப்பட்ட படம் தான் இது.

#6

#6

ஏன்..... ஏன் இந்த கண்ணுல ரொமேன்ஸ் வரமாட்டேங்குது ஐ வாண்ட் மோர் எமோஷன் என்று எத்தனை பாரதி ராஜா வந்தாலும் இங்கிருந்து ஒன்றும் ம்ம்ம்ஹூம்..... மறுபடியும் ஜஸ்டின் பைபர். அவரைப் போலவே உடலில் வரைந்து கொண்டு அடேன்சனில் நிற்கும் போது....

#7

#7

எம் சி க்ரிகோர் கர்ரி. ஐர்லாண்டின் குத்துச் சண்டை வீரர். ஃபைட்டிங் சாம்ப்பியன், லைட் வெயிட்,ஃபெதர் வெயிட்,வெல்டர் வெயிட்,லைட் மிடில் வெயிட் என பல வகை போட்டியின் சாம்பியன். அவரை காப்பி அடித்த போது.... ஏப்பா இந்த டேட்டூ குத்துறவங்க ஒரு வட்டம், சதுரம்,முக்கோணம்னு சிம்பிளா குத்தமாட்டீங்களா வரஞ்சு கலரடிக்க லேட்டாகுதா இல்லையா....

#8

#8

எவ்ளோ தான் முக்கினாலும் நடக்காது..... ஜிம்முக்கு கரெக்டா ரெகுலரா போறாங்களோ இல்லையோ போற அன்னைக்கு பத்து செல்ஃபிய எடுத்துக்க வேண்டியது... அதயே ஒரு மாசம் போட்டு ஜிம் பாய்ஸ்னு சொல்லி ஒப்பேத்த வேண்டியது.அப்பிடி ஒப்பேத்துற பாய்ஸ் ப்ளீஸ் சீ திஸ் மேன்.....

 #9

#9

லம்போகினி காரில் உட்கார்ந்து போஸ் கொடுக்கச் சொன்னா வெஸ்டர்ன்ல உக்கார்ந்துட்டு முக்குற மாதிரி ஒரு போஸ்.... இதுக்கு அம்புட்டு லைக் வேற

#10

#10

நம்மவூரு சூப்பர் மேன்...... சூப்பர் மேன் படத்த நல்லா பாத்தாரா இல்லையான்னே தெர்ல.... ஏய் யாருப்பா இவருக்கு காஸ்டியூம் ஷூவ கொஞ்சம் தொடச்சு கூடவா போட்டுவுடக்கூடாது...

சும்மா சொல்லக்கூடாது, நம்ம மக்கா எல்லாரையும் வைரலாக்கிவிடுவாங்கன்றதுக்கு இவர் ஒருத்தரே போதும்....

All Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Man Doing Silly Things To Get Viral On Internet

Man Doing Silly Things To Get Viral On Internet
Story first published: Tuesday, February 20, 2018, 17:50 [IST]