Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
சத்தான எள்ளுப்பொடி சாதம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - உடம்பு இரும்பு மாதிரி மாறிடும்
Ellu Podi Sadam Recipe in Tamil: பெரும்பாலும் பெற்றோர்களின் கவலையாக இருப்பது அவர்களில் குழந்தைகள் வயதிற்கு ஏற்ற எடை இல்லாமல் குறைவாக இருப்பது தான். இதனால் குழந்தையின் வளர்ச்சி தடைபடுமோ என கவலைப்படுகிறார்கள். அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் என்ன தான் செய்து கொடுத்தாலும் சரியாக சாப்பிடுவதில்லை என அம்மாக்கள் கவலை கொள்கிறார்கள்.

உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க பல வழிகள் இருக்கின்றன. அதிலும் "கொழுத்தவனுக்கு கொள்ளு, இளைச்சவனுக்கு எள்ளு" என்னும் பழமொழிக்கு ஏற்ப எள்ளை வைத்து ஆரோக்கியமாக உடல் எடையை அதிகரிப்பதற்கான உணவு வகைகளில் ஒன்றுதான் எள்ளுப்பொடி சாதம். இந்த எள்ளுப்பொடி சாதம் ஆரோக்கியமானது மட்டுமல்ல சுவையானதும் கூட.
உங்களுக்கு சத்தான எள்ளுப்பொடி சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சத்தான எள்ளுப்பொடி சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- எள்ளு - ¼ கப்
- உளுந்தம் பருப்பு - ¼ கப்
- கடலை பருப்பு - ¼ கப்
- வர மிளகாய் - 5
- அரிசி - 1 கப்
- உப்பு - தேவையான அளவு
- கருவேப்பிலை - 2 கொத்து
தாளிக்க தேவையான பொருட்கள்:
- நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கடலை பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
- கருவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
- எள்ளை சுத்தமாக ஓடும் தண்ணீரில் கழுவி உலர வைக்கவும்.
- அரிசியை இரண்டு மூன்று முறை தண்ணீர் சேர்த்து அலசி சிறிதளவு உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் உளுந்தம் பருப்பை சேர்த்து கருகி விடாமல் பொன்னிறமாக வறுக்கவும்.
- அதே வாணலியில் கடலை பருப்பு மற்றும் வர மிளகாய் சேர்த்து நன்கு சிவக்கும் படி வறுத்து ஆறவிடவும்.
- மீண்டும் அதே வாணலியில் கழுவி உலர வைத்த எள்ளை சேர்த்து ஈரப்பதம் நீக்கி வெடிக்க துவங்கியதும் மிதமான தீயில் வறுத்து ஆற விடவும்.
- கடைசியாக அதே வாணலியில் கருவேப்பிலை சேர்த்து கைகைளில் நொறுங்க கூடிய பதத்திற்கு வறுத்து ஆறவைக்கவும்.
- ஈரப்பதம் இல்லாத மிக்ஸி ஜாரில் வறுத்து ஆற வைத்த பொருட்கள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவும்.
- வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி உடைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் சேர்த்து காய விடவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விட்டு கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்க்கவும்.
- அதனுடன் உடைத்து வைத்த வேர்க்கடலை சேர்த்து நன்கு சிவந்ததும் கருவேப்பிலை சேர்த்து கிளறவும்.
- அதில் தேவையான அளவு அரைத்து வைத்து பொடி சேர்த்து 2 நிமிடம் கிளறி விடவும்.
- கடைசியாக அதில் வேக வைத்து எடுத்து வைத்த சாதம் சேர்த்து கிளறினால் சுவையான எள்ளு பொடி சாதம் தயார்.



Click it and Unblock the Notifications