Latest Updates
-
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க...
பரோட்டா கடை வெஜ் சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க..
Parotta Kadai Veg Salna Recipe In Tamil: இன்று இரவு வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் ஹோட்டல்களில் கொடுக்கப்படும் வெஜ் சால்னாவை செய்யுங்கள். அதுவும் பரோட்டா கடை வெஜ் சால்னா நிச்சயம் அனைவருக்குமே பிடிக்கும்.

அந்த சால்னாவை சப்பாத்திக்கு செய்தால், வீட்டில் உள்ளோர் கணக்கில்லாமல் சாப்பிடுவார்கள். இந்த சால்னா மட்டும் தனி சுவையில் இருக்க காரணமே, அதில் சேர்க்கப்படும் தயிர் தான். இது தான் ஒரு க்ரீமியான அமைப்பை கொடுக்கிறது மற்றும் சுவையையும் தருகிறது.
உங்களுக்கு பரோட்டா கடை வெஜ் சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பரோட்டா கடை வெஜ் சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காலிஃப்ளவர் - சிறிது
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1
* பிரியாணி இலை - 1
* அன்னாசிப்பூ - 1
* கிராம்பு - 4
* பச்சை ஏலக்காய் - 1
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கெட்டி தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* புதினா - 10 இலைகள்
* பச்சை பட்டாணி - 1/2 கப்
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
* பீன்ஸ் - 15 (பொடியாக நறுக்கியது)
* கரம் மசாலா/கறி மசாலா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
தேங்காய் விழுதிற்கு...
* தேங்காய் - 1 மூடி
* முந்திரி - 8
* பச்சை மிளகாய் - 4 (வதக்கியது)
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கல்பாசி - சிறிது
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் காலிஃப்ளவரை துண்டுகளாக்கி, கொதிக்க வைத்த சுடுநீரில்
போட்டு, அத்துடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து,
5 நிமிடம் ஊற வைத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் 1 மூடி துருவிய தேங்காயை சேர்த்து, அத்துடன்
முந்திரி, எண்ணெயில் வதக்கிய பச்சை மிளகாய், சோம்பு, கல்பாசி
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, அன்னாசிப்பூ, பச்சை
ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வெங்காயத்தை வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புளிப்பில்லாத கெட்டி தயிரை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, புதினா
இலைகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து பச்சை பட்டாணி மற்றும் வெட்டி வைத்துள்ள பீன்ஸ், கேரட்
மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின்னர் அதில் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, காலிஃப்ளவரை சேர்த்து
3-4 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து,
தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால்
உப்பு சேர்த்து கலந்து, குக்கரை மூடி, மிதமான தீயில் வைத்து 1 விசில்
விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியை சேர்த்து
கிளறினால், சுவையான பரோட்டா கடை வெஜ் சால்னா தயார்.



Click it and Unblock the Notifications