Latest Updates
-
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க..
சிவபெருமான் இந்த பாவங்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்
சிவபெருமான் ருத்ரமூர்த்தியாகவும், உக்கிரமூர்த்தியாகவும் இருப்பது உங்களுடைய பாவங்களை பொறுத்ததுதான். குறிப்பாக சில பாவங்களை சிவபெருமான் ஒருபொழுதும் மன்னிக்கவே மாட்டார். சிவெபருமானை கோபப்படுத்தும் உங்களு
இந்து மதத்தின் மிகமுக்கிய கடவுளான சிவபெருமானை பற்றி நாம் நன்கு அறிவோம். மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமான் ருத்ர மூர்த்தி ஆவார். ஏனெனில் அவரின் கோபம் பற்றி அனைவரும் நாம் அறிவோம். அழிக்கும் கடவுளான சிவபெருமான் மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு தண்டனை வழங்குபவர்.

கோபக்கார கடவுளான சிவபெருமானை குளிர்விப்பது மிகவும் எளிமையான ஒன்றுதான். சிவபெருமான் ருத்ரமூர்த்தியாகவும், உக்கிரமூர்த்தியாகவும் இருப்பது உங்களுடைய பாவங்களை பொறுத்ததுதான். குறிப்பாக சில பாவங்களை சிவபெருமான் ஒருபொழுதும் மன்னிக்கவே மாட்டார். சிவெபருமானை கோபப்படுத்தும் உங்களுடைய பாவச்செயல்கள் என்னவென்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மற்றவர் செல்வத்தை அடைய நினைத்தல்
மற்றவர் கொண்டிருக்கும் செல்வத்தை ஒருபோதும் அடைய நினைக்காதீர்கள். இது சிவபெருமான் உங்கள் மீது கோபப்பட வழிவகுக்கும். மற்றவர்களிடம் இருந்து கடனாக பெற்ற பணத்தை ஒருபோதும் திரும்ப கொடுக்கமால் இருந்து விடாதீர்கள். மற்றவர்கள் உங்களிடம் கொடுக்கும் பணத்தை தவறான வழியில் செலவிடாதீர்கள்.

பிறர் மனைவி மேல் ஆசைப்படுதல்
மற்றவர்களின் திருமண வாழ்க்கையை ஒருபோதும் தொந்தரவு செய்ய நினைக்காதீர்கள். இது சிவபெருமானால் மன்னிக்கவே முடியாத பாவமாகும். அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படுதல், அவர்கள் வாழ்வில் தெரிந்தே குழப்பங்களை ஏற்படுத்துதல் போன்ற செயல்களை எப்பொழுதும் செய்ய முயற்சிக்காதீர்கள். நீங்கள் எவ்வளவு பெரிய சைவபக்தனாக இருந்தாலும் இதனை ஈசன் மன்னிக்கமாட்டார். அதற்கு சிறந்த உதாரணம் இலங்கை வேந்தன் இராவணன் தான். இராவணனின் சிவபக்தியை பற்றி உலகமே அறியும். இருப்பினும் சிவபெருமான் அவனை காப்பாற்றாமல் இருந்ததற்கு காரணம் பிறர்க்கு மனைவி மேல் ஆசைப்பட்ட கொடும்பாவம்தான்.

அடுத்தவரை அழிக்க நினைப்பது
மற்றவர்களை அழிக்க நினைப்பதை கூட சிவன் வெறுக்கிறார். அடுத்தவரின் வாழ்க்கையையும், மகிழ்ச்சியையும் சிதைக்க நினைக்கும் எவரையுமே சிவன் மன்னிக்க மாட்டார். மனதளவில் அடுத்தவர் அழிவிற்கு திட்டம் தீட்டுவது கூட பாவச்செயல்தான். மற்றவர் மகிழ்ச்சிக்காக தன்னிடம் பிரார்த்திப்பவர்களை சிவபெருமான் எப்பொழுதும் விரும்புவார்.

தீய வழியில் நடக்க விரும்புவது
நல்ல வழியில் வெற்றி கிடைக்வில்லை என்று தீய வழியை நோக்கி செல்பவர்களே இங்கு அதிகம். ஒருவேளை அது உங்களுக்கு வெற்றியை அளிக்கலாம் ஆனால் அது நிரந்தரமானதாக இருக்காது. தவறான வழியில் செல்ல திட்டமிடுவது, சமூகத்தை சீர்குலைக்க எண்ணுவது இவை இரண்டுமே சிவபெருமானை கோபமடைய செய்யும் செயல்களாகும்.

பெண்ணை அவமதிப்பது
பெண்ணை அவமதிப்பது என்பது இந்து மதத்தில் மிகப்பெரிய பாவச்செயலாகும். இது வீட்டில் உள்ள லக்ஷ்மியை வெளியே செல்ல வைத்துவிடும். இது சிவபெருமானும் வெறுக்கும் ஒரு செயலாகும். பெண்ணிற்கு சமபங்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வரராய் திகழ்பவர் ஆயிற்றே ஈசன். பெண்ணை உடலளவிலும், மனதளவிலும் அவமதிப்பது அவர்களை அதிகம் பாதிப்பதோடு உங்கள் பாவகணக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்லும். இது சிவபெருமானையும் அவமதிக்கும் செயலாகும்.

அவதூறு பரப்புவது
சிவபெருமான் இயற்கையாகவே நல்ல குணம் உடையவர்களை காப்பாற்றுபவர். மாறாக பிறருடைய ஒழுக்கம் மற்றும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும்படி நடந்துகொள்வது சிவபெருமானுக்கு பிடிக்காத ஒரு விஷயமாகும். இது சிவனை பொறுத்தவரையில் மிகப்பெரிய பாவமாகும். மற்றவர்களுக்கு எதிராக பொய் கூறுவது, வதந்திகளை பரப்புவது போன்றவை மாபெரும் கொடுஞ்செயலாகும்.

உயிர்களை துன்புறுத்துவது
உணவிற்காகவோ, பிற தேவைகளுக்காகவோ மற்ற உயிர்களை துன்புறுத்துவதும், கொல்லுவதும் சிவனை பொறுத்தவரையில் மன்னிக்கமுடியாத பாவமாகும். விலங்குகளை வதைப்பது என்பது சிவபெருமானை இழிவுபடுத்துவது போன்ற செயலாகும். வன்முறையில் ஈடுப்படுபவர்களை ஈசன் ஒருபோதும் விரும்பமாட்டார்.

போதை பொருட்களை பயன்படுத்துவது
சிவபெருமான் போதை பொருட்களை பயன்படுத்துவதாக இந்துப்புராணம் காட்சிப்படுத்துகிறது. ஆனால் தன் பக்தர்கள் அதற்கு அடிமையாவதை சிவபெருமான் அனுமதிக்கமாட்டார். மது, கஞ்சா போன்ற எந்தவொரு போதைப்பொருளையும் உபயோகிப்பதை ஈசன் ஏற்கமாட்டார். இது தன் பக்தர்களின் வாழ்வை சிதைக்கும் என அவர் நன்கு அறிவார்.

திருட்டு
திருடுவது என்பது மிகவும் தீர்த்த பழக்கம். அதிலும் சிவனின் உடைமைகளை திருடுவது மிகப்பெரிய பாவமாகும். இது உங்களை மட்டுமின்றி உங்கள் தலைமுறையையே பாதிக்கும். அதனால்தான் நம் முன்னோர்கள் " சிவன் சொத்து குலநாசம் " என்று கூறுகிறார்கள்.

வயதானவர்களை அவமதித்தல்
பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் வயதில் மூத்தவர்களை அவமதிப்பதோ அல்லது அவர்களை பற்றி மோசமாக விமர்சிப்பதோ சிவபெருமானின் கோபத்தை அதிகரிக்கக்கூடியவை. பிறரை மதித்து நடப்பது சாலசிறந்த பண்பாகும்.



Click it and Unblock the Notifications