For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  தமிழக கவர்னர் தான் இப்டின்னு நினச்சா..இதுக்கு முன்னாடியே லிஸ்ட் இருக்கு பாருங்க

  |

  தமிழகத்தின் ஆளுனராக இருந்த ரோசைய்யாவின் பதவிக்காலம் முடிந்த பிறகு மகாராஷ்டிர ஆளுநரான வித்யாசாகர் ராவுக்கு கூடுதல் பொறுப்பாக தமிழக ஆளுநர் பொறுப்பும் வழங்கப்பட்டது. இந்த காலத்தில் தான் தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்த நேரத்தில் வித்யாசாகர் ராவின் செயல்பாடுகள் பலவாறாக விமர்சிக்கப்பட்டன.

  அதோடு தமிழகத்திற்கு ஏன் பொறுப்பு ஆளுநர் என்று கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்தார். அப்போது கடந்த அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டவர் தான் இப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

  நியமிக்கப்பட்டது முதல் அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவருவது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் தமிழகத்தைதாண்டியும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிர்மலா தேவி விவகாரத்திலும் ஆளுநர் பெயர் அடிபடுவது தான் இதில் உட்சபட்சம். தமிழக ஆளுநர் மட்டும் தான் இப்படியா என்று தேடிப்பார்த்ததில் கிடைத்த சில தகவல்கள் ஏற்கனவே பலமுறை செய்திகளில் வந்திருந்தாலும் காலவோட்டத்தில் மறந்த விஷயங்களை நினைவூட்டவே இந்த கட்டுரை.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  யார் இவர்? :

  யார் இவர்? :

  முன்னதாக நம் தமிழக ஆளுநரான பன்வாரிலால் புரோகித்தைப் பற்றி சில அடிப்படைத் தகவல்களை தெரிந்து கொள்ளலாம். 1940 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி விதர்பாவில் பிறந்தார் புரோகித். முதலில் ஃபார்வேர்டு ப்ளாக் பின்னர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். காங்கிரஸ் இரண்டாக உடைந்த போது இந்திரா தலைமையிலான கட்சியில் இடம் பிடித்தார்.

  1978 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் தொடர்ந்து 1982 ஆம் ஆண்டு மகாராஸ்டிர அமைச்சரவையில் இடம் பிடித்தார். 1984 ஆம் ஆண்டு நாடாளுமன்ற எம்.பி தொடர்ந்து 1989 ஆம் ஆண்டும் எம்.பி ஆனார்.

  பா.ஜ.க:

  பா.ஜ.க:

  பின் பா.ஜ.கவில் ஆர்வம் கொண்டு காங்கிரஸை விட்டு விலகி பா.ஜ.கவில் சேர்ந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு பா.ஜ.க சார்பில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1996 ஆம் ஆண்டு எம்.பி ஆன நிலையில் 1999 ஆம் ஆண்டு பா.ஜ.கவிலிருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பின் 2003 ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி விதர்பா ராஜ்ய கட்சி என்ற தனிக்கட்சியை ஆரம்பித்தார். 2004 ஆம் ஆண்டு, பின் 2009 ஆம் ஆண்டு பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தும் போட்டியிட்டார் இவருக்கு தோல்வியே கிடைத்தது.

  இந்நிலையில் கட்சி அரசியலில் இருந்து சற்று ஒதுங்கியிருந்த புரோகித்தை 2016 ஆம் ஆண்டு அசாம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

  ஆய்வு :

  ஆய்வு :

  தமிழக வரலாற்றில் இதுவரை நிகழ்த்தப்படாத ஒன்றாக பன்வாரிலால் புரோகித் மாவட்டங்களில் ஆய்வுப் பணியினை மேற்கொண்டார். இதற்கு எதிர்கட்சிகள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படி ஆய்வு மேற்கொள்ளச் சென்ற இடத்தில் தான் பெண் ஒருவர் குளித்ததை ஆளுநர் பார்த்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

  கடந்த டிசம்பர் மாதம் கடலூரில் ஆய்வு மேற்கொண்டிருந்தார் ஆளுநர். அப்போது தூய்மைப் பணிகளை ஆய்வு செய்வதற்காக கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் இருக்கும் கழிவறைகளை ஆய்வு செய்திருக்கிறார்.

  சர்ச்சை 1 :

  சர்ச்சை 1 :

  அப்போது கீற்று வேலி அமைத்து அந்த பகுதியில் இருந்த இளம்பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார். இதை அறியாத ஆளுநர் தன் ஆய்வுப் பணிகளைத் தொடர அந்த கீற்று வேலியை பிரித்து உள்ளே நுழைந்து விட்டார், திடீரென்று யாரோ நுழைவதை உணர்ந்தப் பெண் சத்தம் போட்டு அலறியுள்ளார்.

  பெண்ணின் சத்தம் கேட்டு அப்பகுதியில் கூட்டம் கூடிவிட்டது. இந்நிலையில் பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்த போலீசார் ஆளுநரை பத்திரமாக அழைத்து வந்தனர்.

  சர்ச்சை 2 :

  சர்ச்சை 2 :

  கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி கல்லூரி பேராசியர் நிர்மலா தேவி ஒருவர் தான் பணியாற்றிய கல்லூரியில் பயிலும் மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்தியதாகவும், அதற்காக மாணவிகளிடம் பேராசியர் நிகழ்த்திய பேச்சுவார்த்தை சமூகவலைதளத்தில் வெளியானது.

  அந்த உரையாடலில் தான் ஆளுநர் பெயரும் அடிப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் கல்லூரி நிர்வாகத்தாரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுடன் சேர்ந்து மூடி மறைக்கவே பார்த்திருக்கிறார்கள். விஷயம் வெளியே கசிந்த பிறகு தான் இந்த விவகாரம் விஸ்வரூம் எடுத்திருக்கிறது.

  உயர் அதிகாரிகள் :

  உயர் அதிகாரிகள் :

  இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர், உயர்கல்வித் துறை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசியர்கள் உட்பட பலருக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் ஆளுநரும், பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்களும் அமைத்திருக்கும் விசாரணைக் கமிஷன் மூலமாக எந்த உண்மையும் வெளிப்படாது தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் பன்வாரிலால் புரோகித்தை திரும்பப் பெறக்கோரி போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது.

  செய்தியாளர் கூட்டம் :

  செய்தியாளர் கூட்டம் :

  தொடர்ந்து இந்த விஷயம் சர்ச்சையை கிளப்பவே ஏப்ரல் 17 ஆம் தேதி ஆளுநர் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதில் நிர்மலா தேவியை இதுவரை பார்த்தது கூட இல்லை, என் மீது சுமத்தப்படுகிற புகார்கள் எல்லாம் அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறினார்.

  இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு முடியும் நேரத்தில் பெண் செய்தியாளர் ஒருவர் ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார்.

  சர்ச்சை 3 :

  சர்ச்சை 3 :

  அந்த பெண் செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல் அவரின் கன்னத்தை தட்டிக் கொடுத்தார் ஆளுநர். இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பெண் செய்தியாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் செய்தி கருத்து தெரிவிக்க இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்தது.

  மறுநாளே ஆளுநர் மன்னிப்பு கோரியும் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த விவகாரம் குறித்து எஸ்.வி.சேகர் யாரோ எழுதிய கருத்தை பகிர்ந்திருந்தார். அதில் செய்தியாளர்கள் குறித்தும் குறிப்பாக பெண் செய்தியாளர்கள் குறித்து மிகவும் அவதூராக எழுதப்பட்டிருந்தது இதனால் செய்தியாளர்கள் பலரும் போராட்டத்தில் குதித்தனர்.

  பன்வாரிலால் புரோகித் தான் பங்கேற்ற நிகழ்ச்சியில் எல்லாம் இப்படித் தான் நடந்து கொள்கிறார் என்று சொல்லி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது பெண் நடனக் கலைஞர்களை தொட்டுப் பேசியதைப் போன்ற போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வெளியானது.

  மகன் :

  மகன் :

  ஆந்திர மாநில ஆளுநராக இருந்தவர் என்.டி.திவாரி. ரோஹித் சேகர் என்பவர், என்.டி திவாரி தான் தன்னுடைய தந்தை. ஆனால் அவர் என்னையும் என் அம்மாவையும் ஏற்றுக் கொள்ளாமல் ஏமாற்றி வருகிறார் என்று வழக்கு தொடுத்தார். வெகு காலம் ரோஹித் புகாரை திவாரி ஏற்கவேயில்லை கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் வரை வழக்கு இழுத்தடிக்கப்பட்டது.

  இறுதியாக ரோஹித்துக்கும் திவாரிக்கும் மரபணு பரிசோதனை நிகழ்த்தப்பட்டது இதில் திவாரி தான் ரோஹித்தின் தந்தை என்பது உறுதியானது.

  இரண்டாவது திருமணம் :

  இரண்டாவது திருமணம் :

  வேறு வழியின்றி ரோஹித்தை மகனாக ஏற்றுக் கொண்டார் இவருக்கு 1954 ஆம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் குழந்தையில்லை. அப்போதே ரோஹித்தின் தாயான உஷ்வாலா ஷர்மாவுடன் பழகியிருக்கிறார். அதன் பிறகு கடந்த 2008 ஆம் ஆண்டு மகனை ஏற்றுக் கொண்ட பிறகு உஷ்வாலா சர்மாவை வீட்டிலேயே இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் திவாரி.

  இவருக்கு அப்போது வயது 88. அதைத் தொடர்ந்து, அந்த தள்ளாத வயதில் படுக்கையறையில் மூன்று பெண்களுடன் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் மாளிகையில் இருப்பது போன்ற இந்த வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது அடங்குவதற்குள் அடுத்த சர்ச்சையில் சிக்கினார் திவாரி

  நடனம் :

  நடனம் :

  லக்னோவில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது அதில் என்.டி. திவாரி பங்கேற்றார். மேடைக்கு நடந்து வர முடியாமல் இருவரின் துணையோடு அழைத்து வரப்பட்ட திவாரி மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெண்ணின் தோளில் கைப் போட்டு நடனம் ஆடினார்.

  இந்த வீடியோவும் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

  இளம் பெண்கள் க்ளப் :

  இளம் பெண்கள் க்ளப் :

  கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த வி. சண்முகநாதன் என்பவர் மேகாலயா கவர்னராக நியமிக்கப்பட்டார். 2016 நவம்பர் முதல் கூடுதலாக அருணாச்சலபிரதேச கவர்னர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருந்தார்.

  இந்நிலையில் கவர்னர் மாளிகை ஊழியர்கள், ராஜ்பவனை இளம்பெண்கள் கிளப்பாகவே சண்முகநாதன் மாற்றிவிட்டார். சண்முகநாதனால் பி.ஆர்.வோ வாக நியமிக்கப்பட்ட சின்மோயி தேகா என்பவருடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் கூறி ஐந்து பக்க புகார் மனுவை நூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பினர்.

  தொடர்ந்து மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் சண்முகநாதன் பதவி விலகக்கோரி போராட்டங்கள் நடைப்பெற்றது இதைத் தொடர்ந்தே அவர் 2017 ஜனவரி மாதம் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  List of Controversial Governors In India

  List of Controversial Governors In India
  Story first published: Saturday, April 28, 2018, 12:02 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more