For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உதவிக் கேட்டு வந்தவர்களின் படங்களை ஏடாகூடாமாக எடிட் செய்த நபர்- புகைப்படத் தொகுப்பு!

By John
|

போட்டோஷாப் கற்றுக் கொண்ட ஆரம்ப நாட்களில் நாம் அனைவருமே செல்ஃப் கில் எனும்படியாக, நம் படத்தை நாமே கன்னாப்பின்னா என்று எடிட் செய்து மரணத்தனமான எடிட்டராக மாறி இருப்போம். போட்டோஷாப்பில் கைவைத்த அனைவருக்கும் இந்த அனுபவம் இருக்கும். இதை யாரும் மறுக்க இயலாது.

ஆனால், ஜேம்ஸ் பிரிட்மேன் அப்படியான அரைகுறை போட்டோஷாப் எடிட்டர் கிடையாது. கேலியாக எடிட் செய்தாலும் அதை தரமான சம்பவமாக செய்பவர் ஜேம்ஸ் பிரிட்மேன். இவர் கேலி தான் செய்வார் என்று அறிந்தும், இவரிடம் வேண்டுமென்றே தங்களது புகைப்படங்களை எடிட் செய்துக் கொடுக்கும் படி சமூக தளங்களில் நிறைய பேர் அணுகுகிறார்கள்.

James Fridman, A Photoshop Artist Fixes Fans Photo Crazily!

காரணம் இவர் மூலமாக அவர்களும் கொஞ்சம் வைரல் ஆகலாமே, அதற்காக தான். ஜேம்ஸ் பிரிட்மேன் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் எனக்கு அனுப்பும் படங்களில் தயவு செய்து உங்கள் ப்ரைவேட் படங்களை அல்லது பொதுவெளியில் சென்று விட கூடாது என நீங்கள் விரும்பும் படங்களை அனுப்பிவிட வேண்டாம் என டேர்ம்ஸ் அன்ட் கண்டிஷனில் குறிப்பிட்டு வைத்திருக்கிறார்.

ஆயினும், சிலர் தங்கள் காதலர்களுடன் எடுத்துக் கொண்ட சில நெருக்கமான படங்களையும் அனுப்புகிறார்கள் என்பது வேறு கதை.

இதோ! சமீபத்தில் ஜேம்ஸ் பிரிட்மேனுக்கு வந்த படங்களும், அதை அவர் தனது கிரியேட்டிவ் மூளையை கொண்டு எப்படி எல்லாம் ஏடாகூடமாக எடிட் செய்திருக்கிறார் என்று இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஒரே திசையில பார்க்குற மாதிரி இருக்கு, அத வேணாம் மாத்திக் கொடுன்னு கேட்ட பாவத்துக்கு கண்ண கோக்குமாக்கா மாத்தி வெச்சிருக்காப்புல...

#2

#2

என் லவ்வர் ஷூஸ் போட்டுட்டு வர மறந்துட்டா... அதனால, அவ ஷூ போட்டுருக்க மாதிரி எடிட் பண்ணிக் கொடுக்க சொன்னதுக்கு, கேட்டவரடோ ஷூவையே கழற்றி காதலிக்கு மாட்டி விட்டுட்டாப்புல...

#3

#3

ஃப்ரோசன் படத்துல வர மாதிரியான கேரக்டர் மாதிரி மாத்த சொன்னதுக்கு ஜேம்ஸ் பண்ண எடிட்ட பாருங்க...

#4

#4

அலாவுதீன் படத்துல வர கதாப்பாத்திரம் மாதிரி மேட்ல பறக்க ஆசைப்பட்டு எடிட் பண்ணி கொடுக்க சொல்லிருக்கு இந்த பொண்ணு... ரிசல்டு... எப்பூடி....???

#5

#5

என் லவ்வர் என்ன பாக்குற மாதிரி எடிட் பண்ணிக் கொடுக்க சொன்ன பாவத்துக்கு, தலைய புட்பால் ஆடி வெச்சிருக்காப்புல...

#6

#6

ஜாலிய இருக்க இந்த போட்டோவ அபாயகரமான சூழல்ல இருக்க மாதிரி எடிட் பண்ண சொல்லிட்டு அப்படியே விட்டிருக்கலாம். கேஸ்ங்கிற வார்த்தைய கேட்க போக... அந்த பையனோட பாடு அதோகதி ஆயிடுச்சு...

#7

#7

புருவம் நல்ல புஷ்ஷியா கேட்டதுனால... புஷ்ஷயே வெச்சு கொடுத்திட்டாரு ஜேம்ஸ் பிரிட்மேன்...

#8

#8

மூணு பொண்ணுங்க நல்லா தான் இருக்கு... ஆனா, பாவம் பாருங்க முன்னாடி ஒரு அங்கிள் சொட்டை தலையோட உட்கார்ந்துட்டு இருக்கிறது கொஞ்சம் மொக்கையா இருக்கு... அத மாத்தி கொடுக்க சொன்னத்துக்கு சொட்டை தலைய ஐஸ்க்ரீமா மாத்தி இருக்காரு...

#9

#9

அருவி என் பக்கத்துல இருக்க மாதிரி எடிட் பண்ண சொன்னதுக்கு, அருவிக்குள்ளயே எடுத்து கொண்டு போய் வெச்சுட்டாப்புல...

#10

#10

அந்த பொண்ணு கேட்டது சன் ஷேடிங், நம்ம ஆளு வெச்சு கொடுத்திருக்குற ஷேடிங் வேற லெவல்... கையில மாட்டிவிட்டது அமோகம்...

#11

#11

கால் குட்டியா இருக்குற மாதிரி இருக்கும் கொஞ்சம் பெருசு பண்ண சொன்னதுக்கு... அனகோண்டா பாம்பு மாதிரி பண்ண வெச்சுட்டாப்புல..

#12

#12

அதென்னமோ தெரியல முன்ன சைஸ் ஸீரோ ஃபேஷனா இருந்துச்சு... இந்த கிம் கர்தாஷியன் வந்ததுல இருந்து பின்னழகு தூக்கலா இருக்கணும்னு பொண்ணுங்க மத்தியில ஆசை அதிகமாயிடுச்சு. ஏடாகூடமா கேட்டா இப்படி ஜேம்ஸ் எடிட் பண்ணுவாரு போல...

#13

#13

ஆத்துல வெள்ளம் வந்து போல இருக்க சிட்டுவேஷன்ல ஒய்யாரமா போகுற மாதிரி எடிட் பண்ணிக் கொடுக்க சொன்ன பாவத்துக்கு. நம்மாளு கொதிக்கிற நூடுல்ஸ் பாத்திரத்துக்குள்ள கொண்டு போய் போட்டுட்டாப்புல...

#14

#14

சரியா தான இருக்கு.. அந்த பொண்ணு கேட்ட மாதிரியே எடிட் பண்ணியாச்சு.. என்ன கை தான் ஏலியன் போல கொஞ்சம் இறங்கி போச்சு..

#15

#15

தம்பி கரக்டா கேட்டிருக்கணும்... அயர்ன் மேன் தானா ஆகணும்னு கேட்டீங்க.. எந்த அயர்ன்னு கேட்கலயே...

#16

#16

அழகான பொண்ணோட போட்டோவ கேட்டாப்புல தம்பி... அதான் போட்டோவையே வெச்சுட்டாரு...

#17

#17

போட்டோ எடுத்தப்ப கண்ணாடி அழுக்கா இருந்துச்சு. அத கொஞ்சம் சுத்தம் பண்ணிக் கொடுக்க சொல்லி கேட்டாப்புல.. அவரைய சுத்தம் பண்ண வெச்சுட்டாரு ஜேம்ஸ்...

#18

#18

ரைட்டு தானே... அந்த பொண்ணு கேட்டது, கேட்ட மாதிரியே கிடைச்சிருக்கு...

#19

#19

எப்படி எல்லாம் ஆசைப்படுறாங்க பாருங்க.... அதுலயும் பொண்ணுங்க தான் அதிகமா போட்டோ அனுப்புறாங்க போல. அதுலயும் இந்த பொண்ணு நல்ல நடிகையா வர வாய்ப்புகள் இருக்கு.. எடிட் பண்ண அனுப்புறதுக்குன்னே ட்ரெயின் முன்னாடி ஓடுற மாதிரி போட்டோ எடுத்திருக்கு...

#20

#20

என்ன பண்றது இங்கிலீஷ்ல சில வார்த்தைகளுக்கு உச்சரிக்கும் போதும், எழுதும் போதும் ஒரே மாதிரி தான் இருக்கு. அந்த பொண்ணு ஒன்னு கேட்க, இவரு ஒன்னு புரிஞ்சுக்க... போட்டோ செம்மையா வந்திருக்கு...

#21

#21

முதல்ல இந்த பய இப்படியான எடிட் கேட்டதே தப்பு...

#22

#22

ஒருத்தர ஒருத்தர் கை பிடிச்சிருக்க மாதிரி கேட்டிருக்கணும்... அப்படி தெளிவா கேட்டிருந்தா கூட ஜேம்ஸ் ஏடாகூடமா தான் ஏதாவது எடிட் பண்ணி வெச்சிருப்பாப்புல...

#23

#23

தெரியாம ஒரே மாதிரி போஸ் கொடுத்துட்டோம்.. இத கொஞ்சம் மாத்தி கொடுக்க சொல்ல போக.. ஜேம்ஸ் நம்ம ஊரு நாகினி போஸ் பார்த்து இன்ஸ்பையர் ஆகி இப்படி எடிட் பண்ணிட்டாப்புல...

#24

#24

பசங்க தாடிய ஷேவ் பண்ணா குழந்தை மாதிரி இருப்பாங்க தான், அதுக்குன்னு இப்படியா...

#25

#25

கடற்கன்னி மாதிரி எடிட் பண்ண தர சொல்லி, கேட்டா... மொத்தமா முழு மீன்ல முகத்த மெர்ஜ் பண்ணிட்டாப்புல...

#26

#26

ஒருத்தவங்க மட்டும் சரியா குதிக்கால... அவங்கள தரையில இருந்து கொஞ்சம் மேல குதிக்கிற மாதிரி எடிட் பண்ண சொன்னதுக்கு... வானத்துல பறக்க விட்டுட்டாப்புல ஜேம்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

James Fridman, A Photoshop Artist Fixes Fans Photo Crazily!

James Fridman, A Photoshop Artist Fixes Fans Photo Crazily!
Story first published: Thursday, October 4, 2018, 14:15 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more